Saturday, July 30, 2011

ஓப்பன் ஆஃபிஸ்-கால்க்-47-ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கை ஒரு சாதாரண தரவுதளமாகவும் பயன்படுத்தி கொள்ளமுடியும்


      கிடைவரிசையும் நெடுவரிசையும் கொண்டு கட்டமைக்கபட்ட கால்க்கின் ஒரு அட்டவணையானது தரவுதளத்தின் அட்டவணைக்கும் கால்க் அட்டவணையின் கிடைவரிசையானது தரவுதளத்தின் ஒருஆவணத்திற்கும், கால்க்கினுடையஒவ்வொரு செல்லும் தரவுதளத்தின் புலத்திற்கும் சமமானதாக இருக்கின்றன. மேலும் ஏராளமான செயலிகளை(Function) இந்த ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கானது தன்னகத்தே கொண்டு பயனாளிகளின் தேவைகளனைத்தை யும் பூர்த்திசெய்ய கூடிய மிகச்சிறந்த தரவுதளமாக இது விளங்குகின்றது.
படம்-1-
   படம்-1-ல் ஒருவகுப்பில் உள்ள மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ,சராசரி மதிப்பெண், அவர்களின் தரம் ஆகியவை ஒப்பன்ஆபிஸ் கால்க்கின் விரிதாளில் ஒரு அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இதன் தோற்றமும் செயலியும் சேர்ந்து இது ஒரு தரவுதளமாகவும் பயன்படுவதாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஒரு தரவுதளத்திற்குள் ஏராளமான செயலிகள்(Function) பயன்படுத்தபட்டு மற்ற ஆவனங்களுடன் வேறுபடுகின்றது அதைபோன்றே கால்க்கின் செயலிகள் இதன் விரிதாளை பயனாளர் ஒருவர் தரவுதளமாக பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது பொதுவாக AVEREAGE ,AVERAGEA, COUNT,COUNTIF என்பன போன்ற கால்க்கின் செயலிகள் (Function) தரவுதளத்திலும் பயன்படுத்தபடுகின்றன
.மேலும் Edit => Find & Replace=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் தவறான தரவுகளை தேவையான இடத்திற்கு இடம்சுட்டியை கொண்டு சென்று மாற்றி யமைக்க முடியம் அவ்வாறே Data => Filter=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இடம் சுட்டியை கொண்டுசெல்லாமலேயே தேவையான தரவுகளை திரையில் பிரதிபலிக்க செய்யமுடியும்
    அதுமட்டுமல்லாது VLOOKUP, HLOOKUP,MATCH, OFFSET,INDEXஎன்பனபோன்ற செயலிகளை (Function) பயன்படுத்தி தரவுதளத்தை போன்றே கால்க்கில் தரவுகளை கையாளமுடியும்
படம்-1-ல் உள்ள அட்டவணையின் பெயர்கள், அவர்களின் சராசரி மதிப்பெண் ,தரம் ஆகிய மூன்றை மட்டும் தனியானதொரு அட்டவணையாக தெரிவிக்க வேண்டும் என்ற தேவையெழும்போது தரவுதளத்தில் அதற்காக ஒரு வினா(query)எழுப்பினால் அதற்கேற்ற அட்டவணை யொன்று திரையில் பிரதிபலிக்கும் .கால்க்கில் கூட அவ்வாறான தேவையின்போது முந்தை பத்தி.யில் கொடுத்துள்ள செயலிகளை (Function) கொண்டு அவ்வாறான புதிய அட்டவணையை உருவாக்கிபயன்படுத்தி கொள்ளமுடியும்
ஒரு கால்க்கின் தாள்1ல் இந்த அட்டவணை இருப்பதாக கொள்வோம் தாள்2-ல் இந்த VLOOKUP என்ற செயலியை(Function) பயன்படுத்தி தேவையான அட்டவணையொன்றை உருவாக்கமுடியும் இதன் அமைப்பு பின்வருமாறு இருக்கும்
VLOOKUP(search_value; search_range; return_column_index; sort_order)
=VLOOKUP(A2;Sheet1.A4:H8;8)
     இதில் பிறை அடைப்புக்குள்ளிருக்கும் முதல் மதிப்பு நாம் தேடவேண்டிய தரவை குறிப்பிடுகின்றது அதாவது search_value; என்பதற்கு A2வின் மதிப்பையே எடுத்து கொள்ளும்படி கொடுத்துள்ளோம்
    இரண்டாவதாக இருப்பது எந்த இடத்திலுள்ள அட்டவணை என்றதகவலுடன் அதன் வீச்செல்லையும் சேர்த்து குறிப்பிடவேண்டும் search_range; என்பதற்கு இங்கு நாம் Sheet1.A4: என்றவாறு முதல் அட்டவணையின் இருப்பிடத்தை குறிப்பிட்டுள்ளோம்
மூன்றாவதாக அந்த அட்டவணையின் எந்த நெடுவரிசை மதிப்பு நம்முடைய அட்டவணைக்கு தேவையென்று குறிப்பிடவேண்டும் return_column_index; என்பதற்கு சராசரி மதிப்பென் மட்டும் தேவையென்பதால் 7 என குறிப்பிடவேண்டும் மாணவனின் தரம் தெரியவேண்டும் வேண்டுமென்பதால் நெடுவரிசையின் எண்ணிக்கை 8 என கொடுத்துள்ளோம்.
நான்காவது விருப்ப வாய்ப்பாகும் sort_order இதற்கு நாம் மதிப்பெதுவும் வழங்கவில்லை இந்த ஃபார்முலாவின்படி சரியாக இருந்தால் தாள்-1-லிருந்து பொருத்தமான தரவையும் இல்லையெனில் #N/A என்றும் படம்-2-ல் உள்ளவாறு அட்டவணையொன்று திரையில்பிரதிபலிக்கும்.
  படம்-2-
    OFFSET, என்ற மற்றொரு செயலியை(Function) உதாரணத்துடன் பார்ப்போம் .இவ்வகுப்பிலுள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் காண Average என்ற செயலி (Function) பயன்படும்
ஆனால் ஒருசில மாணவர்களின் மதிப்பெண்களையே இந்த அட்டவணையில் ஏதேனுமொரு சமயத்தில் பதிவுசெய்யாமல் விடுபட்டுவிட்டது என்றுதெரியவந்து அவர்களின் மதிப்பெண்களையும் சேர்த்து அட்டவணைய புதுப்பித்தல் செய்து விரிவாக்கம் செய்திடும் போது இந்த Average என்ற செயலி(Function) சரியான விடையை காண்பிக்காது அவ்வாறான நிலையில் இதனுடன் OFFSET, என்ற மற்றொரு செயலி (Function) உதவிக்குவருகின்றது இதன் அமைப்பு பின்வருமாறு இருக்கும்.
OFFSET(reference; rows; columns; height; width)
=AVERAGE(OFFSET(B2:F6;-1;4;5))
   இதில் பிறை அடைப்புக்குள்ளிருக்கும் முதல் மதிப்பு நாம் மேற்கோள்காட்டவேண்டிய அல்லது பார்வையிட வேண்டிய இடத்தை குறிப்பிடுகின்றது அதாவது reference; என்பதற்கு மதிப்பு ஒன்றையும் கொடுக்கவில்லை.
    இரண்டாவதாக rows; என்பதற்கு B2: என்றும் மூன்றாவதாக columns; என்பதற்கு F6; என்றும் அட்டவணையில் தரவு இருக்கும் பகுதியை சரியாக குறிப்பிட நான்காவதாக -1; என்றும் height; என்பதற்கு கிடைவரிசை 4;என்றும் width என்பதற்கு நெடுவரிடை 5 என்றும் மதிப்பினை இந்த ஃபார்முலாவில் கொடுத்துள்ளோம் உடன் இவ்வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்தசராசரி மதிப்பெண் 82.475என்று படம்-3-ல்-உள்ளவாறு பிரதிபலிக்கின்றது
  படம்-3
   DAVERAGE,DSUM,DCOUNT என்பனபோன்ற தரவுதளத்திற்கு மட்டுமே பயன் படக்கூடிய ஒருசில சிறப்பு செயலிகளையும் கால்க்கில் செயல்படுத்தி அதன்விளைவை தரவு தளம் போன்றே கால்க்கிலும் காணமுடியும் ,
   மேலும் கால்க்கில் அடிக்கடி பயன்படுத்தாத OFFSET,INDEXஎன்பனபோன்ற செயலிகளை பயன்படுத்தி கால்க்கையும் பெரும்பாலனவர்களின் தேவைகளை போதுமான அளவிற்கு நிறைவுசெய்யும்பொருட்டு இதனை ஒரு தரவுதளமாக பயன்படுத்தி கொள்ளமுடியும் என்று அறிந்துகொள்க 
 

Sunday, July 17, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க.- 46- தரவுகளை ஆய்வு செய்தல்


ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் ஃபங்சனையும் ஃபார்முலாவையும் நன்கு தெரிந்து கொண்டால் அடுத்தபடிமுறையாக  நம்முடைய தரவுகளை மிகவிரைவாக ஆய்வு செய்வதற்கு கால்க்கின் தானியங்கி செயலை ப.ன்படுத்தி கொள்ளமுடியும். மேலும் தரவுகளை கையாளுவதற்காக  நகலெடுத்தல் துனைக்கூடுதல் காணுதல் என்பன போன்ற செயல்களுக்கான கருவிகளை tools , data ஆகிய இரு கட்டளை பட்டியில் வைத்துள்ளனர். .விரிதாளிற்கு புதியவராக இருந்தால் தரவுகளை கையாளுவதற்கு இதுவே போதுமானவை என முடங்கிவிடுவோம்.. நடைமுறையில் மேலும் அதிகமான தரவுகளை பயன்படுத்தும் போதுதான் இவைமட்டும் பற்றாது என்றநிலை ஏற்படும் அவ்வாறான நிலையில் தரவுகளை எளிதாக கையாளுவதற்கும் ஆய்வு மேற் கொள்வதற்கும் பயன்படக்கூடிய கூடுதல் வசதிகள் எவையெவைஎன இந்த தொடரில் காண்போம்.
    1.Consolidate  என்ற வசதி: sum ,average என்பன போன்ற வெவ்வேறு செயலிகள் உள்ளடக்கிய இரண்டுக்கு மேற்பட்டசெல்களின் ரேஞ்ஜுகளை ஒன்றினைத்து ஒருபுதிய செல்களின் ரேஞ்ஜில் வழங்குவதற்கு Data => Consolidate=>என்ற கட்டளை வரி பயன் படுகின்றது.இவ்வாறு செயற்படுத்தியவுடன் Consolidate  என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில்( படம்-46-1) தோன்றிடும்.
                          படம்-46-1
 அதில் செல்களின் ரேஞ்ஜுகளுக்கு பெயரிடபட்டிருந்தால்Source data rangeஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் மூலம்   தேவையான ரேஞ்ஜின் பெயரையும் இல்லையெனில் இதன் அருகிலுள்ள உரைபெட்டியில்  செல்களின் ரேஞ்ஜுகளையும்  தெரிவு செய்து கொண்டு Add என்ற பொத்தானை சொடுக்குக மேலும் தேவையான ரேஞ்ஜுகளை இவ்வாறே தெரிவுசெய்துகொண்டு  ஒன்றினைக்கபட்ட இறுதிவிடை தோன்றவேண்டிய செல்களின் ரேஞ்ஜை அதற்கு பெயரிடபட்டிருந்தால் Copy results to என்ற பகுதியில் இருக்கும் கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையான ரேஞ்ஜின் பெயரையும் இல்லை யெனில் இதன் அருகிலுள்ள உரைபெட்டியில்  செல்களின் ரேஞ்ஜுகளையும் தெரிவு செய்து கொள்கஅதன் பின்னர் இவ்வாறு ஒருங்கிணைக்கபட்ட தரவுகள் என்னவாக கணக்கிடப் படவேண்டும் என்பதற்காக  functionஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் மூலம்   தேவையான ஃபங்சனை தெரிவுசெய்துகொள்க. பின்னர் இதேஉரையாடல் பெட்டியிலுள்ள moreஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் பகுதியில் தரவுகளின் மூலத்துடன்  தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கு   options  என்பதன்  கீழுள்ள link to source data என்ற தேர்வு செய் பெட்டியையும் நெடுவரிசை கிடைவரிசைக்கு பெயரிடconsolidated by என்பதன் கீழுள்ள row lable ,colomn lable  ஆகிய தேர்வுசெய் பெட்டிகளையும் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.
   2.Multiple Operations.என்ற வசதி: ஒருதொழிலகத்தில் உற்பத்திசெலவும் விற்பனை விலையும் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது எந்தெந்தநிலையில் எவ்வளவு இலாபம் கிடக்கும் என அறிந்தகொள்ள Multiple Operations. (படம்-46-2)என்ற வசதி பயன் படுகின்றது. செல்எண் A2-ல் பொருள்களின் உற்பத்தி எண்ணிக்கையும் .செல்எண் A3-ல் விற்பனை விலையும் .செல்எண் A4-ல் உற்பத்தி செலவும் .செல்எண் A6-ல் நிரந்தர செலவுகளும் .செல்எண் A7-ல் நிகர லாபமும்(Profit=Quantity * (Selling price – Direct costs) –Fixed costs.  ) என்ற ஃபார்முலாமூலம் A7= A2*(A4-A3)-A6 என்றவாறு காணுமாறு கொடுக்கப் பட்டுள்ளன உற்பத்தி செலவானது ரூ. 2232.15 லிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.108.87என்றவாறு    ரூ.2885.37 வரை   7 நிலைகளில் உயர்வு செய்து இருக்கும்போதும் .(செல்எண் B10- முதல் .செல்எண் B16-.வரை) அவ்வாறே விற்பனை விலையானது  ரூ.3076.30 லிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.88.87 என்றவாறு   ரூ.3603.52 வரை   7 நிலைகளில் உயர்வு செய்து இருக்கும்போதும்.(செல்எண் C9-.முதல் .செல்எண் I9-வரை) இலாபம் எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்வதற்கு  முதலில் செல்எண் B9- முதல் .செல்எண் i16-.வரை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டியில் Data => Multiple Operations=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக.
 
படம்-46-2
     உடன் தோன்றிடும் Multiple operstionsஎன்ற உரையாடல்பெட்டியில் Formulasஎன்பதில் நிகரஇலாபம் காண்பதற்கான சூத்திரம் உள்ள $A$7 என்றவாறு செல்எண்ணையும் row input cell என்பதில் விற்பனைவிலை உள்ள $A$3 என்றசெல்எண்ணையும் Column input cellஎன்பதில் உற்பத்தி செலவு உள்ள $A$4  என்றசெல் எண்ணையும் தெரிவு செய்து கொண்டுok என்ற பொத்தானை சொடுக்குக உடன் படத்திலுள்ளவாறு வெவ்வேறு நிலைகளில் இலாபம் எவ்வாறு இருக்கும் என பிரதிபலிக்கின்றது.
   3.Goal Seek என்றவசதி: மூத்த குடிமக்கள் பணிஓய்வுபெறும்போது கிடைக்கும் பணிக்கொடை போன்ற தொகைகளை  கொண்டு தம்முடைய எஞ்சியநாட்களுக்கு எவ்வளவு முதலீடு செய்தால் தம்முடைய செலவிற்கு போதுமான வருமானம் கிடைக்கும்  என அறிந்துகொள்ள விரும்புவார்கள்அதற்கு இதே ஓப்ப ன்ஆஃபிஸ் கால்க்கில்Goal Seek என்ற வசதி பயன்படுகின்றது .செல்எண் B1-ல் அசல் … என்றவாறு காலியாகவும் செல்எண் B2-ல் வருடஎண்ணிக்கை 1 என்றும் செல்எண் B3-ல்   வட்டி சதவிகிதம் 10.5 என்றவாறும்   செல்எண் B4-ல்  விரும்பும் வட்டி தொகையும் (Interest = principle * No of years * Rate of interest/100)  என்ற ஃபார்முலா மூலம் B4=B1*B2*B3/100  என்றவாறு கணக்கிடுமாறும் கொடுக்கபட்டுள்ளன தோராயமாக ஒருவருக்கு ரூ.21000 வருமானம் கிடைக்க எவ்வளவு முதலீடு  செய்யவேண்டுமென முடிவுசெய்யவேண்டும்
                                                                        படம்-46-3
 அதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools =>Goal Seek=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன்(படம்-46-3) தோன்றிடும் Goal Seekஎன்ற உரையாடல் பெட்டியில்  Formula cell என்பதில் வட்டி கணக்கீடு செய்வதற்கான ஃபார்முலாவுள்ள செல்எண்$B$4 என்றும் Target value என்பதில் தேவையான வட்டித்தொகை ரூ.21000 என்றும் variable cell என்பதில் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என காணவேண்டிய செல்எண் $B$1 என்றும் தெரிவுசெய்துகொண்டு okஎன்றபொத்தானை சொடுக்குக உடன் செல் எண் B1-ல் ரூ.200000 முதலீடு செய்யவேண்டுமென விடை கிடைக்கின்றது
  . 4.Solverஎன்ற வசதி: இதே மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கான வாய்ப்பு ஒன்றுக்கு மேல் இருக்கும்போது எந்தெந்த வகையில் எவ்வளவு முதலீடு செய்தால் அதிகபட்ச வருமானம் கிடைக்கும் என தெரிந்து கொள்வது போன்ற நிலையில் Solverஎன்ற வசதி பயன்படுகின்றது. படம்-46-4-ல் உள்ளவாறு இரண்டு வகையான முதலீட்டற்கான வாய்ப்புகள் இருப்பதாக கொள்வோம் செல் எண் B1-ல் வட்டித்தொகை, செல் எண்C1- ல்முதலீட்டு தொகை ,செல் எண்D1-ல் வட்டிசதவிகிதம் ,செல் எண்E1-ல்முதலீட்டின் காலம் ,செல் எண்A2-ல்  நிதிவகை-, செல் எண்A3-ல் நிதிவகை-  ,செல் எண்A4-ல்  மொத்தம் என்றும், செல் எண்B2-ல்  =C2*D2/100*E2  என்றவாறு ஃபார்முலாவும், செல் எண்B3-ல்  ==C3*D3/100*E3  என்றவாறு ஃபார்முலாவும் , செல் எண் B4-ல்  =B2+ B3  என்றவாறு ஃபார்முலாவும், செல் எண்C3-ல் =C4-C2   என்றவாறு ஃபார்முலாவும் உள்ளீடு செய்து  இதற்கான விடையை காண்பதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Solver=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

                            படம்-46-4
 உடன் solver என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில்  Target cell என்பதற்கு நாம் விடைகாணவிரும்பும் செல்எண் $B$4 எனவும்  ,optimize result to என்பதில் value ofஎன்றவாய்ப்பு உரைபெட்டியில் 1000என்றவாறும் ,By chaging Cells என்பதில் $C$2  என்றும்  ,cell reference என்பதில் $C$2 என்றும்  ,operatorஎன்பதில்  <= என்பதையும், valueஎன்பதில்  $c$4 என்றும் , மீண்டும்cell reference என்பதில் $C$2  என்றும்,operator என்பதில் => என்றவாறும்,value என்பதில் 0 என்றவாறும் மதிப்புகளை உள்ளீடுசெய்தும் தெரிவுசெய்துகொண்டும் okஎன்றபொத்தானை சொடுக்குக.
  உடன் Solver status என்ற சிறு உரையாடல் பெட்டியில் current solutions என்பதற்கு 1000என்றவிடை கணக்கிடபட்டு உள்ளதாக தோன்றும்  சரிதான் எனில் okஎன்ற பொத்தானை சொடுக்குக
  உடன் keep result என்ற விடையுடன் மற்றொரு சிறுஉரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் okஎன்றபொத்தானை சொடுக்குக. இரண்டு வாய்ப்புகளிலும் சமமாக ரூ5000 முதலீடு செய்யலாம் என நமக்கு விடை கிடைக்கின்றது இவ்வாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் தரவுகளை ஆய்வுசெய்து முடிவுஎடுப்பதற்கு உதவுகின்ற பல்வேறு வசதிகளை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திகொள்ளமுடியும்

Thursday, July 7, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-45- மேக்ரோவை உருவாக்குதல்


   ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் திரும்ப திரும்ப செய்யப்படும் செயல்களை கட்டளைவரி நிரல் தொடர்களாக சேமித்துகொண்டு பின்னாட்களில் பயன்படுத்திகொள்ள உதவுவதே மேக்ரோவாகும் இது நெகிழ்வுதன்மையுடனும் சாதாரணமானதும் சிக்கலானதுமான செயல்களை தானியங்கியாக செயல்படுத்தஅனுமதிக்க கூடியதுமாகும்.
 இதனை ஒரு சிறு எடுத்துகாட்டுடன்  பார்ப்போம்.ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் செல்எண்கள் A1 முதல் C3 உள்ள எண்களை செல்எண் A3 -ல் உள்ள எண் 3 ஆல் பெருக்கவேண்டும் என கொள்வோம் 
1.அதற்காக முதலில் செல்எண் A3 -ஐ தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டியிலிருந்து Edit=>copy=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Ctrl+ C என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.
2.பின்னர் செல்எண்கள் A1 முதல் C3  வரை தெரிவுசெய்துகொள்க
                       படம்-45.1
3.அதன்பின்னர் மேலே கட்டளை பட்டியிலிருந்து Tools=>Macros=>Record Macro=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்  Record Macro என்ற சிறு உரையாடல் பெட்டி stop recordingஎன்ற பொத்தானுடன் நாம் செய்யும் செயலை பதிவுசெய்ய தயாராக இருக்கும்.
4 பின்னர் மேலே கட்டளை பட்டியிலிருந்து Edit=>Paste Special=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                      படம்-45.2
5 உடன்   Paste Special என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் operations என்பதன் கீழுள்ள multiply என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன்A1 முதல் C3  வரைஉள்ள எண்கள் 3 ஆல் பெருக்கிய விடையாக மாறிவிடும்
6.பின்னர் Record Macro என்ற  உரையாடல் பெட்டியில் stop recordingஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்Record Macro என்ற  உரையாடல் பெட்டிதிரையில் மூடப்பட்டு   open office.org basic macrosஎன்ற உரையாடல் பெட்டி  தோன்றிடும்
                          படம்-45.3
7அதில்macro name என்பது main என்றும்  save macro in என்பதன் கீழ் module 1 என்ற தலைப்புடன் தெரிவுசெய்யபட்டும் இருக்கும் நாம் புதியதாக பதிவுசெய்யவிருப்பதால் new moduleஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
8 உடன்  new moduleஎன்ற சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் nameஎன்தன்கீழ் module2என இயல்புநிலையில் இருக்கும் இந்தபெயரை ஆமோதித்து கொள்க அல்லது  வேறுபெயரை உள்ளீடு செய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
9அதன் பின்னர் open office.org basic macrosஎன்ற உரையாடல் பெட்டியில் இந்தmodule2 என்பதை தெரிவுசெய்துகொண்டு macro name என்பதன்கீழுள்ள உரைபெட்டியில் paste multiplyஎன்ற பெயரை உள்ளீடு செய்து saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
10.பின்னர் மேலே கட்டளைபட்டியிலிருந்து tools=>macros=>organize macros=>openoffice.org basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்தோன்றிடும் open office.org basic macrosஎன்ற உரையாடல் பெட்டி யில்  paste multiplyஎன்பதை தெரிவுசெய்து editஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கினால் மேலேகூறியவாறு பதிவுசெய்த மேக்ரோவின் கட்டளைவரி நிரல்தொடரானது பின்வரும் படத்திலுள்ளவாறு இருக்கும்
                                                           படம்-45.4
நம்முடைய சொந்த செயலியைகூட இவ்வாறு மேக்ரோ கட்டளை வரிநிரல்தொடராக நாமே எழுதி செயற்படுத்தமுடியும் அதற்காக   மேலே கட்டளைபட்டியிலிருந்து tools=> macros=> organize macros=>openoffice.org basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் தோன்றிடும் open office.org basic macrosஎன்ற உரையாடல் பெட்டியில்  organiserஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் open office.org basic macros organiserஎன்ற உரையாடல் பெட்டியில் newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்new library என்ற உரையாடல் பெட்டியில் nameஎன்பதன்கீழ் authors calc macros  எனஉள்ளீடுசெய்து ok என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அதன்பின்னர் open office.org basic macrosஎன்ற உரையாடல் பெட்டியில்  authors calc macrosஎன்றபெயரை தெரிவுசெய்து editஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் 
REM ***** BASIC *****
Sub Main
End Sub
என்றஆரம்ப,முடிவு வரியுடன் திரையின் தோற்றம் அமையும் அதில் பின்வருமாறு கட்டளை வரிகளைதவறில்லாமல் உள்ளீடு செய்து சேமித்துகொள்க
 REM ***** BASIC *****
Option Explicit
Sub Main
End Sub
Function NumberFive()
NumberFive = 5
End Function
 கால்க்கின் ஏதேனுமொரு செல்லில் =NumberFive()என்றவாறுஃபார்முலாவை உள்ளீடு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தியவுடன் அதற்கான விடை மேக்ரோவில் நாம்சேமித்தவாறு 5 என கிடைக்கின்றது
                         படம்-45.5
 பின்னர் மேலே கட்டளைபட்டியிலிருந்து tools=>options > OpenOffice.org > Security > Macro Security=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக நாம் ஏற்கனவேபாதுகாப்பு அமைப்பை எவ்வாறு  அமைத்திருந்தோமோ அதற்கேற்றவாறு openoffice.org-security warning என்ற எச்சரிக்கை உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Enable maros என்பதை தெரிவுசெய்தால் இந்த மேக்ரோவை இயக்க அனுமதிக்கும் disable macros என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் மேக்ரோவை இயக்க அனுமதிக்காது
எச்சரிக்கை மேக்ரோ வழியாக நச்சுநிரல்தொடர் நம்முடைய கணினிக்குள் உட்புகவாய்ப்பு உள்ளது அதனால் Enable macros என்பதை தெரிவுசெய்யாமல் இருப்பதே நல்லது
                        படம்-45.6
   இவ்வாறு திரும்பதிரும்ப செய்யப்படும் செயல்கள் அல்லது புதிய செயலிகளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் மேக்ரோவாக நாமே உருவாக்கி செயற்படுத்த முடியும்.