ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் ஃபங்சனையும் ஃபார்முலாவையும் நன்கு தெரிந்து கொண்டால் அடுத்தபடிமுறையாக நம்முடைய தரவுகளை மிகவிரைவாக ஆய்வு செய்வதற்கு கால்க்கின் தானியங்கி செயலை ப.ன்படுத்தி கொள்ளமுடியும். மேலும் தரவுகளை கையாளுவதற்காக நகலெடுத்தல் துனைக்கூடுதல் காணுதல் என்பன போன்ற செயல்களுக்கான கருவிகளை tools , data ஆகிய இரு கட்டளை பட்டியில் வைத்துள்ளனர். .விரிதாளிற்கு புதியவராக இருந்தால் தரவுகளை கையாளுவதற்கு இதுவே போதுமானவை என முடங்கிவிடுவோம்.. நடைமுறையில் மேலும் அதிகமான தரவுகளை பயன்படுத்தும் போதுதான் இவைமட்டும் பற்றாது என்றநிலை ஏற்படும் அவ்வாறான நிலையில் தரவுகளை எளிதாக கையாளுவதற்கும் ஆய்வு மேற் கொள்வதற்கும் பயன்படக்கூடிய கூடுதல் வசதிகள் எவையெவைஎன இந்த தொடரில் காண்போம்.
1.Consolidate என்ற வசதி: sum ,average என்பன போன்ற வெவ்வேறு செயலிகள் உள்ளடக்கிய இரண்டுக்கு மேற்பட்டசெல்களின் ரேஞ்ஜுகளை ஒன்றினைத்து ஒருபுதிய செல்களின் ரேஞ்ஜில் வழங்குவதற்கு Data => Consolidate=>என்ற கட்டளை வரி பயன் படுகின்றது.இவ்வாறு செயற்படுத்தியவுடன் Consolidate என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில்( படம்-46-1) தோன்றிடும்.
படம்-46-1 அதில் செல்களின் ரேஞ்ஜுகளுக்கு பெயரிடபட்டிருந்தால்Source data rangeஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையான ரேஞ்ஜின் பெயரையும் இல்லையெனில் இதன் அருகிலுள்ள உரைபெட்டியில் செல்களின் ரேஞ்ஜுகளையும் தெரிவு செய்து கொண்டு Add என்ற பொத்தானை சொடுக்குக மேலும் தேவையான ரேஞ்ஜுகளை இவ்வாறே தெரிவுசெய்துகொண்டு ஒன்றினைக்கபட்ட இறுதிவிடை தோன்றவேண்டிய செல்களின் ரேஞ்ஜை அதற்கு பெயரிடபட்டிருந்தால் Copy results to என்ற பகுதியில் இருக்கும் கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையான ரேஞ்ஜின் பெயரையும் இல்லை யெனில் இதன் அருகிலுள்ள உரைபெட்டியில் செல்களின் ரேஞ்ஜுகளையும் தெரிவு செய்து கொள்கஅதன் பின்னர் இவ்வாறு ஒருங்கிணைக்கபட்ட தரவுகள் என்னவாக கணக்கிடப் படவேண்டும் என்பதற்காக functionஎன்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலின் மூலம் தேவையான ஃபங்சனை தெரிவுசெய்துகொள்க. பின்னர் இதேஉரையாடல் பெட்டியிலுள்ள moreஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் பகுதியில் தரவுகளின் மூலத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கு options என்பதன் கீழுள்ள link to source data என்ற தேர்வு செய் பெட்டியையும் நெடுவரிசை கிடைவரிசைக்கு பெயரிடconsolidated by என்பதன் கீழுள்ள row lable ,colomn lable ஆகிய தேர்வுசெய் பெட்டிகளையும் தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.
2.Multiple Operations.என்ற வசதி: ஒருதொழிலகத்தில் உற்பத்திசெலவும் விற்பனை விலையும் வெவ்வேறு நிலையில் இருக்கும்போது எந்தெந்தநிலையில் எவ்வளவு இலாபம் கிடக்கும் என அறிந்தகொள்ள Multiple Operations. (படம்-46-2)என்ற வசதி பயன் படுகின்றது. செல்எண் A2-ல் பொருள்களின் உற்பத்தி எண்ணிக்கையும் .செல்எண் A3-ல் விற்பனை விலையும் .செல்எண் A4-ல் உற்பத்தி செலவும் .செல்எண் A6-ல் நிரந்தர செலவுகளும் .செல்எண் A7-ல் நிகர லாபமும்(Profit=Quantity * (Selling price – Direct costs) –Fixed costs. ) என்ற ஃபார்முலாமூலம் A7= A2*(A4-A3)-A6 என்றவாறு காணுமாறு கொடுக்கப் பட்டுள்ளன உற்பத்தி செலவானது ரூ. 2232.15 லிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.108.87என்றவாறு ரூ.2885.37 வரை 7 நிலைகளில் உயர்வு செய்து இருக்கும்போதும் .(செல்எண் B10- முதல் .செல்எண் B16-.வரை) அவ்வாறே விற்பனை விலையானது ரூ.3076.30 லிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.88.87 என்றவாறு ரூ.3603.52 வரை 7 நிலைகளில் உயர்வு செய்து இருக்கும்போதும்.(செல்எண் C9-.முதல் .செல்எண் I9-வரை) இலாபம் எவ்வாறு இருக்கும் என அறிந்து கொள்வதற்கு முதலில் செல்எண் B9- முதல் .செல்எண் i16-.வரை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டியில் Data => Multiple Operations=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக.
படம்-46-2
உடன் தோன்றிடும் Multiple operstionsஎன்ற உரையாடல்பெட்டியில் Formulasஎன்பதில் நிகரஇலாபம் காண்பதற்கான சூத்திரம் உள்ள $A$7 என்றவாறு செல்எண்ணையும் row input cell என்பதில் விற்பனைவிலை உள்ள $A$3 என்றசெல்எண்ணையும் Column input cellஎன்பதில் உற்பத்தி செலவு உள்ள $A$4 என்றசெல் எண்ணையும் தெரிவு செய்து கொண்டுok என்ற பொத்தானை சொடுக்குக உடன் படத்திலுள்ளவாறு வெவ்வேறு நிலைகளில் இலாபம் எவ்வாறு இருக்கும் என பிரதிபலிக்கின்றது.
3.Goal Seek என்றவசதி: மூத்த குடிமக்கள் பணிஓய்வுபெறும்போது கிடைக்கும் பணிக்கொடை போன்ற தொகைகளை கொண்டு தம்முடைய எஞ்சியநாட்களுக்கு எவ்வளவு முதலீடு செய்தால் தம்முடைய செலவிற்கு போதுமான வருமானம் கிடைக்கும் என அறிந்துகொள்ள விரும்புவார்கள்அதற்கு இதே ஓப்ப ன்ஆஃபிஸ் கால்க்கில்Goal Seek என்ற வசதி பயன்படுகின்றது .செல்எண் B1-ல் அசல் … என்றவாறு காலியாகவும் செல்எண் B2-ல் வருடஎண்ணிக்கை 1 என்றும் செல்எண் B3-ல் வட்டி சதவிகிதம் 10.5 என்றவாறும் செல்எண் B4-ல் விரும்பும் வட்டி தொகையும் (Interest = principle * No of years * Rate of interest/100) என்ற ஃபார்முலா மூலம் B4=B1*B2*B3/100 என்றவாறு கணக்கிடுமாறும் கொடுக்கபட்டுள்ளன தோராயமாக ஒருவருக்கு ரூ.21000 வருமானம் கிடைக்க எவ்வளவு முதலீடு செய்யவேண்டுமென முடிவுசெய்யவேண்டும்
படம்-46-3
அதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools =>Goal Seek=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்(படம்-46-3) தோன்றிடும் Goal Seekஎன்ற உரையாடல் பெட்டியில் Formula cell என்பதில் வட்டி கணக்கீடு செய்வதற்கான ஃபார்முலாவுள்ள செல்எண்$B$4 என்றும் Target value என்பதில் தேவையான வட்டித்தொகை ரூ.21000 என்றும் variable cell என்பதில் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும் என காணவேண்டிய செல்எண் $B$1 என்றும் தெரிவுசெய்துகொண்டு okஎன்றபொத்தானை சொடுக்குக உடன் செல் எண் B1-ல் ரூ.200000 முதலீடு செய்யவேண்டுமென விடை கிடைக்கின்றது
. 4.Solverஎன்ற வசதி: இதே மூத்த குடிமக்களின் முதலீட்டிற்கான வாய்ப்பு ஒன்றுக்கு மேல் இருக்கும்போது எந்தெந்த வகையில் எவ்வளவு முதலீடு செய்தால் அதிகபட்ச வருமானம் கிடைக்கும் என தெரிந்து கொள்வது போன்ற நிலையில் Solverஎன்ற வசதி பயன்படுகின்றது. படம்-46-4-ல் உள்ளவாறு இரண்டு வகையான முதலீட்டற்கான வாய்ப்புகள் இருப்பதாக கொள்வோம் செல் எண் B1-ல் வட்டித்தொகை, செல் எண்C1- ல்முதலீட்டு தொகை ,செல் எண்D1-ல் வட்டிசதவிகிதம் ,செல் எண்E1-ல்முதலீட்டின் காலம் ,செல் எண்A2-ல் நிதிவகை-அ, செல் எண்A3-ல் நிதிவகை-ஆ ,செல் எண்A4-ல் மொத்தம் என்றும், செல் எண்B2-ல் =C2*D2/100*E2 என்றவாறு ஃபார்முலாவும், செல் எண்B3-ல் ==C3*D3/100*E3 என்றவாறு ஃபார்முலாவும் , செல் எண் B4-ல் =B2+ B3 என்றவாறு ஃபார்முலாவும், செல் எண்C3-ல் =C4-C2 என்றவாறு ஃபார்முலாவும் உள்ளீடு செய்து இதற்கான விடையை காண்பதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Solver=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
உடன் solver என்ற உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Target cell என்பதற்கு நாம் விடைகாணவிரும்பும் செல்எண் $B$4 எனவும் ,optimize result to என்பதில் value ofஎன்றவாய்ப்பு உரைபெட்டியில் 1000என்றவாறும் ,By chaging Cells என்பதில் $C$2 என்றும் ,cell reference என்பதில் $C$2 என்றும் ,operatorஎன்பதில் <= என்பதையும், valueஎன்பதில் $c$4 என்றும் , மீண்டும்cell reference என்பதில் $C$2 என்றும்,operator என்பதில் => என்றவாறும்,value என்பதில் 0 என்றவாறும் மதிப்புகளை உள்ளீடுசெய்தும் தெரிவுசெய்துகொண்டும் okஎன்றபொத்தானை சொடுக்குக.
உடன் Solver status என்ற சிறு உரையாடல் பெட்டியில் current solutions என்பதற்கு 1000என்றவிடை கணக்கிடபட்டு உள்ளதாக தோன்றும் சரிதான் எனில் okஎன்ற பொத்தானை சொடுக்குக
உடன் keep result என்ற விடையுடன் மற்றொரு சிறுஉரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் okஎன்றபொத்தானை சொடுக்குக. இரண்டு வாய்ப்புகளிலும் சமமாக ரூ5000 முதலீடு செய்யலாம் என நமக்கு விடை கிடைக்கின்றது இவ்வாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் தரவுகளை ஆய்வுசெய்து முடிவுஎடுப்பதற்கு உதவுகின்ற பல்வேறு வசதிகளை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திகொள்ளமுடியும்
No comments:
Post a Comment