Sunday, August 19, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா தொடர் -பகுதி-71-முப்பரிமான உருவங்களை கையாளுதல்


பொதுவாக நாம் திரையில் காணும் பெரும்பாலான படங்கள்   இருபரிமான படங்களாகத்தான் இருக்கின்றன அவ்வாறானதொரு இருபரிமான படத்தை முப்பரிமான படமாக உருமாற்றம் செய்வதற்கு ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா பயன்படுகின்றது இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா ஆனது எம்எஸ் பெயின்ட் போன்று படம் வரையும் மென்பொருட்களின் செயலிகளை அல்லது படங்களை பதிப்பித்தல் செய்யும் செயல்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்றாலும்  நல்ல அழகான முப்பரிமான படங்களை, வரைபடங்களை உருவாக்குவதிலும் கையாளுவதிலும்  மிகுந்த திறன்கொண்டதாக உள்ளது அவ்வாறான முப்பரிமான படங்களை இதிலுள்ள முப்பரிமான உருவம்(3D bodies), முப்பரிமானவடிவங்கள்(3D Shapes))  ஆகிய இருவகையான வாய்ப்புகளில் ஒன்றின் மூலம் நாம் முப்பரிமான படங்களை வரைவதற்கு உதவுகின்றது அதுமட்டுமின்றி இவ்விரண்டில் நாம் தெரிவுசெய்யும் வாய்ப்பிற்கேற்ப மேலும் 1.சுழற்சி(rotation), 2.வெளிச்சம்(illumination), 3.முன்னோக்கு(Perspective) என்பன போன்ற ஏராளமான வழிகளில் ஒரு முப்பரிமான படத்தை பதிப்பித்தல் செய்ய அனுமதிக்கின்றது
1.  முப்பரிமான உருவங்களின்(3D bodies) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
  ஓப்பன் ஆபிஸ் ட்ராவில் உள்ள 1.பிதிர்வு(Extrusion), 2.உருவசுழற்சி(body rotation), 3.தயார்நிலையிலுள்ளபொருட்களை பயன்படுத்துதல்(using ready made objects) ஆகிய மூன்று வழிமுறைகளில் ஒன்றை பயன்படுத்தி ஒருமுப்பரிமான படத்தை உருவாக்கமுடியும்  பொதுவாக இந்த மூன்று வழிமுறைகளை மாறுபாடு1(Variation 1) ,மாறுபாடு2(Variation 2), மாறுபாடு3(Variation 3) என அழைப்பார்கள்
 மாறுபாடு1(Variation 1). பிதிர்வு(Extrusion)என்ற வழிமுறையில் ஒரு முப்பரிமான படத்தை உருவாக்குதல்
  இந்த வழிமுறையின்மூலம் முதலில் திரையின் மேலே வரைபட கருவிபட்டியிலுள்ள சதுரம் /செவ்வகம் ,வட்டம் /நீள்வட்டம் அல்லது உரைபெட்டி ஆகிய பொதுவான வரைபடங்களின் வரைபொருளை வரைவதற்காக பயன்படும் உருவபொத்தான்களில் ஒன்றை  தெரிவுசெய்து  ஏதேனுமொரு இருபரிமான படம்ஒன்றினை வரைந்துகொள்க

  பிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ள Modify => Convert => To 3D => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக அல்லது நாம் வரைந்த படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலைபட்டியில்  Convert= > To 3D=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக, அல்லது திரையின் மேலே கருவிபட்டியிலுள்ள இருபரிமான படத்தி(2D)லிருந்து முப்பரிமான படமாக(3D) உருமாற்ற பயன்படும்   
என்றவாறு  உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த உருவபொத்தான்  திரையில்  தோன்றவில்லையெனில் வரைபடகருவிபட்டியின் வலதுபுறம் ஓரமாக உள்ள Visible  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் சம்பந்தபட்ட உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  உடன் இந்த இருபரிமான படமானது முப்பரிமான (படம்-71-1) படமாக  இயல்புநிலை அளவிற்கு உருமாற்றமாகும் இந்த செயலையே பிதிர்வு(Extrusion) என்பர்
படம்-71-1
மாறுபாடு2(Variation 2)-உருவசுழற்சி(body rotation) என்ற வழிமுறையில் ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
  இந்த வழிமுறையில் பொதுவான வரைபெருளை மேலும் சுழற்சி வழிமுறை1 (rotation1),சுழற்சி வழிமுறை2(rotation2) ஆகிய இரண்டு உள்வழிமுறைகளில்  ஒரு முப்பரிமான படத்தை உருவாக்கமுடியும்
 சுழற்சி வழிமுறை1(rotation1) இந்த வழிமுறையில் மேலே வரைபட கருவி பட்டையிலுள்ள இதற்கான  
 என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்தஉருவபொத்தான் கருவிபட்டியில் இல்லையெனில் Modify => Convert= > To 3D Rotation object => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் இந்த சுழற்சி வழிமுறையில்  அச்சானது பச்சைவண்ண கைப்பிடியின் வழியாக இணைந்துள்ள தெரிவுசெய்யபட்ட செவ்வகமும் சுழன்று(படம்-71-2) அமையும்
படம்-71-2
சுழற்சி வழிமுறை2(rotation2) திரையின் மேலே வரைபடகருவிபட்டையில் 
என்றவாறு உள்ள உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கீழிறங்கு பட்டியலை  தோன்றசெய்க. அல்லது இதே பட்டியலை மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Tool bars= > Mode=>என்றவாறு கட்டளைகளை தெரிசெய்து சொடுக்குவதன் வாயிலாகவும் அனுகமுடியும்  இந்த பட்டியலில் உள்ள  இரண்டு வெள்ளையான முடிவுபுள்ளிகள் வாயிலாக இம்முடிவு புள்ளிகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது முடிவு புள்ளிகள் இரண்டையும் (படம்-71-3)தெரிவுசெய்து சொடுக்குதல் ஆகியவற்றின் மூலம் படத்தின் அச்சினை சுழற்றிஅமைக்கமுடியும்  

படம்-71-3
 மாறுபாடு3(Variation 3)- தயார்நிலையில் உள்ளபொருட்களை பயன்படுத்துதல்(using ready made objects)என்ற வழிமுறையில் ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
தயார்நிலையில் இருக்கும் முப்பரிமான வரைபொருட்களுள்ள கருவிபட்டி / கீழிறங்கு பட்டியலை(படம்-71-4) பயன்படுத்தி  ஏற்கனவே தயார்நிலையில் உள்ள முப்பரிமான உருவங்களை வரைந்து கொள்ளமுடியும் இந்த கருவிபட்டி / கீழிறங்கு பட்டியலை திரையில் தோன்றிடசெய்வதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள View= > Tool bars => 3D Objects=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-71-4
  உடன் கருவிபட்டையில் கீழிறங்கு பட்டியலாக அல்லது     ஒரு மிதக்கும் கருவிபட்டையாக திரையில்(படம்-71-4) தோன்றிடும்  இதில் ஒரு உருவத்தை தெரிவுசெய்து சொடுக்கியபின் முப்பரிமான படத்தினை வரையும் திரையில் இடம்சுட்டியைவைத்து shift விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியை திரும்பவும் ஆரம்ப புள்ளிவரும்வரை பிடித்து இழுத்துசென்று விடுக உடன் நாம் விரும்பிய தெரிவுசெய்த முப்பரிமான படம் திரையில் தோன்றிடும் 
  இந்த மாறுபாடு1(Variation 1)முதல் 3 வரை உருவாக்கிய படமானது ஒரு முப்பரிமான காட்சியாக திரையில் தோன்றிடும் உண்மையில் குழுவான பொருட்கள் சேர்ந்ததே இந்த முப்பரிமான காட்சியாகும் இந்த முப்பரிமான படத்தை தெரிவு செய்து சொடுக்கியவுடன்  திரையின் கீழே நிலைபட்டையில் முப்பரிமான காட்சி தெரிவுசெய்யபட்டுள்ளது(3D scene selected) என காண்பிக்கும்  மேலே கூறிய மூன்று வழிமுறைகளில் உருவாக்கபட்ட முப்பரிமான உருவ படமானது ஒற்றையான உறுப்பிலிருந்து முப்பரிமான உருவமாக கட்டமைக்கபட்டதாகும்
 மேலே கருவிபட்டையிலுள்ள Modify => Enter group=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவது அல்லது சூழ்நிலை பட்டியலை உருவாக்குவதன் வாயிலாக தெரிவுசெய்யபட்ட கோளம்(Sphere selected)அல்லது தெரிவு செய்ய பட்ட பிதிர்வுபொருட்கள்(Extrusion object selected)என்றவாறு உள்ள இந்த குழுவின் தனிப்பட்ட உறுப்புகளை அனுகமுடியும்
2. முப்பரிமானவடிவங்கள்(3D Shapes) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
ஓப்பன்ஆஃபிஸ் பதிப்பு 2.0 வெளியிடும்வரை இந்த முப்பரிமான வடிவங்களின்(3D Shapes) வாயிலாக மட்டுமே ஒருமுப்பரிமான படத்தை உருவாக்க முடியும் என்ற நிலை இருந்தது ஆனால் நடப்பிலுள்ள பிதிர்வு(Extrusion) –இன் சிறப்பு வழிமுறையே இந்த வடிவங்கள்(Shapes) ஆகும்
 மாறுபாடு4(Variation 4): வடிவங்களின் பிதிர்வு(Extrusion of shapes) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
உருளை ,கனசதுரம் போன்ற அடிப்படை இருபரிமான வரைபடத்தை அடிப்படை வடிவங்களின்(basic shapes) கருவிபட்டையை (படம்-71-5)பயன்படுத்தி வரையமுடியும்  ஆனால் இது அவ்வளவு பயனுள்ளதாக அமையாது  அவ்வாறு ஒரு இருபரிமான உருவை வரைந்த பின் மேலே கருவி பட்டையின் கடைசியாகவுள்ள  உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  இது ஒரு முப்பரிமான  உருவமாக உருமாறிவிடும் 
படம்-71-5
  இந்த பிதிர்வு(Extrusion) வாயிலாக உருமாற்றபடும் உருவபடமானது புதிய முப்பரிமான படமன்று ஏனெனில் இது ஏற்கனவே இருக்கும் ஒரு இருபரிமான படமே முப்பரிமான படமாக உருமாறுகின்றது  அதனால் அந்த இருபரிமான படத்தின் அடிப்படை பண்பியல்பு, கட்டமைப்பு, ஆகியவற்றை அப்படியே இது தக்கவைத்துகொண்டு காட்சியை மட்டும் முப்பரிமானமாக மாற்றியமைக்கின்றது அதாவது இந்த உருவ பொத்தானை பயன்படுத்தி ஒருபடத்தின் இருபரிமான காட்சியை முப்பரிமான காட்சியாகவும் ஒரு படத்தின் முப்பரிமான காட்சியை இருபரிமான காட்சியாகவும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்
  ஒரு முப்பரிமான படத்தை தெரிவுசெய்தவுடன் திரையில் 3D-அமைவு (Settings)என்ற (படம்-71-6)கருவிபட்டை திரையில் தோன்றிடும் அவ்வாறு இது திரையில் இல்லையெனில் இதனை திரையில் தோன்றிட செய்வதற்கு  மேலே கட்டளை பட்டையில் View => Toolbars => 3D-Settings=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-71-6
 மாறுபாடு5(Variation 5): எழுத்துசெயல்(Fontwork) வாயிலாக ஒருமுப்பரிமான படத்தை உருவாக்குதல்
  ஒரு உரையை அடிப்படையாக கொண்ட முப்பரிமான படத்தை வரைவதற்கு இந்த வழிமுறை பயன்படுகின்றது

படம்-71-7
வரைபடகருவிபட்டையிலுள்ள 
என்ற உருவபொத்த்னை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்  எழுத்துசெயல்தொகுப்புகள்(Fontwork Gallery) என்ற (படம்-71-7) உரையாடல் பெட்டியில் தேவையான கட்டமைப்பை தெரிவுசெய்து இதனை உருவாக்கி கொள்ளமுடியும்

No comments:

Post a Comment