Tuesday, August 7, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-70-பிட்மேப்பை கையாளுதல் –தொடர்ச்சி


நாம் திரையில் காணும்  படத்தை மட்டும் திருத்திமாறுதல் செய்வதற்கு ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா வின் சாளரத்தின் மேலே கட்டளைபட்டையில் Filter எனும் கருவி பட்டையில் உள்ள Filter என்ற உருவபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக  உடன் பதினொரு வகையான வாய்ப்புகளுடன் இந்த Filterஎனும் துனை பட்டிதிரையில் விரியும் அதில் தேவையான வாய்ப்பைமட்டும் தெரிவுசெய்து செயல்படுத்திகொள்க. 
  எச்சரிக்கை இந்த திரைக்காட்சியில் உள்ள படமானது இணைப்பு படமாக இருந்தால் நாம் செய்த திருத்தத்தை மேலே கட்டளைபட்டையிலுள்ள  File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி சேமித்து கொள்க. உள்பொதிந்த படமெனில் நம்மால் செய்யபட்டமாறுதல் உடனுக்குடன் சேமிக்கபட்டுவிடும் அதனால் செய்த திருத்தம் சரியில்லை எனத்தோன்றினால் Edit => Undo=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி முந்தையநிலையை பராமரித்துகொள்க  
   நாம் வரையும் படத்தில் வண்ணத்தை மாற்றுவதற்கும் அந்தபடத்தை ஊடுருவி(transparency) பார்ப்பதற்கேற்ப மாறுதல் செய்வதற்கும் eyedropperஎன்ற கருவி பயன்படுகின்றது இந்த கருவி படம்முழுக்கமட்டுமே செயல்படும் ஒருபடத்தில் குறிப்பிட்ட பகுதியைமட்டும் மாறுதல் செய்யமுடியாது  உட்பொதிந்த படத்தில் இந்தகருவியானது மிகச்சுலபமாக செயல்படும் இணைப்பு படம்எனில் This graphic is linked to a  document. Do you want to unlink the graphic is order to edit it? எனும் செய்தியை திரையில் பிரதிபலிக்கச்செய்யும்  அதன்பின் நாம் செய்யும் செயலிற்கேற்ப இந்தவரைபடம் அமையும்  இந்த கருவி Metafle என்ற ஒருசில வடிவமைப்பு படக்கோப்பில் மட்டும் செயல்படாது
  இந்த கருவியை செயலுக்கு கொண்டுவருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Eyedropper=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 படம்-70-1
உடன் படம்-70-1-ல் உள்ளவாறு Eyedropper என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் பென்சில் போன்ற Eyedropper என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்தவுடன் அதற்கருகிருலிருக்கும் பெட்டியின் வண்ணம் நம்முடைய வரைபடத்தில் மாறியமையும்  இடம்சுட்டியின் தோற்றம் கைப்பிடிபோன்று மாறிவிடும்
பின்னர் இதே உரையாடல் பெட்டியில் உள்ள Source Color என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் தேவையான வண்ணத்தை தெரிவுசெய்துகொண்டு எந்தஅளவிற்கு ஊடுருவி(transparency) பார்க்கமுடியும் என்பதற்காக Tolerance  என்பதன்கீழுள்ள வாய்ப்பகளில் தேவையான வாய்ப்பையும் அதன் சதவிகிகதத்த்தையும் தெரிவுசெய்து கொண்டு Replace with என்பதன்கீழ் தேவையான வாய்ப்பையும் தெரிவுசெய்துகண்டு Replace என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   
  குறிப்பிட்ட பணிமுடிந்தவுடன் மற்ற உரையாடல் பெட்டிகளானது திரை காட்சியிலிருந்து மறைந்துபோவதைபோன்று இந்த உரையாடல் பெட்டியானது மறைந்து போகாது அதனால் Ctrl+F4 என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக அல்லது இதேஉரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறம் மூலையில் இருக்கும் Close என்ற பொருக்கல்குறிபோன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  வண்ணங்களின் அளவை color depth என்ற கருவியின்மூலம் நிர்ணயம் செய்யலாம் ஆயினும் இந்த கருவி வழக்கமான திரையில் இருக்காது இதனை முதலில் திரையில் பிரதிபலிக்கசெய்வதற்கு மேலே கட்டளைபட்டையில் Tools => Customize=>Toolbars =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றும் Customize Toolbars என்ற உரையாடல் பெட்டியில் Add என்ற கட்டளையை செயற்படுத்தியவுடன் இந்த கருவியானது ஒரு துனைபட்டியாக மேலே கருவிபட்டியில் தோன்றிடும் அதனை செயற்படுத்தி தேவையானவாறு வண்ணங்களின் அளவை  அமைத்துகொள்க  
 வண்ணத்தின் அளவை அமைத்தபின் மற்றும் தேவையான அனைத்து மாறுதல்களும் ஒரு படத்தில் செய்தபின்  அந்த படத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் அல்லது Modify என்ற பட்டியில் Convert => to Contour=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
   உடன் இந்த வரைபடமானது ஒரு பலகோண (polygon) அல்லது குழுவான பலகோண(polygon)  படமாக மாறியமையும்  இந்த பலகோணம் (polygon)  ஆனது ஒரு வெக்டார் வரைபடமாகும் ஆனால் பலகோணத் (polygon)திற்குள் உள்ளபடம் பிட்மேப் உருவபடமாகும் இந்த பலகோணத்தை(polygon) பயன்படுத்தி தேவையானவாறு உருவ அமைப்பையும் ஊடுருவும்(transparency) தன்மையையும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்
  மேற்கண்ட ஒருவரைபடத்தை பலகோணமாக (polygon)  இதற்கென தனியானதொரு  உரையாடல் பெட்டிமூலம் உருமாற்றம் செய்வதற்காக படத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் அல்லது Modify என்ற பட்டியில் Convert => to Polygon=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் திரையில் Convert to Polygon என்ற (படம்-70-2 )உரையாடல் பெட்டியொன்று தோன்றிடும்  அதில் தேவையான வாய்ப்புகளை அமைத்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-70-2-
இந்த ஓப்பனஅஆஃபிஸ் ட்ராவினுடைய Convert to Polygon என்ற உரையாடல் பெட்டியில் எட்டுமுதல் முப்பத்திரண்டு வண்ணங்கள் கையாளபடுகின்றன அவ்வளவு வகை தேவையில்லை குறைந்த அளவே போதும் என எண்ணினால் color depth என்ற வாய்ப்பின் வாயிலாக அல்லது  Graphic Filter என்ற கருவிபட்டையிலுள்ள Posterize filter என்ற கருவியின் வாயிலாக தேவையான வண்ணங்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்க
  ஒருவரைபடத்தின் துல்லியத்தை pixels எனப்படும் புள்ளிகளே (holes) தீர்மாணிக்கின்றன அதனால் Fill holes என்றவாய்ப்பின் மூலம் அதன்அளவையும் Tile size என்ற வாய்ப்பின்மூலம் அதன் அகலத்தையும் அமைத்துகொள்க
  R என்ற எழுத்துருவானது  கண்ணுக்கு தோன்றுவதொன்றாகவும் கண்ணிற்கு புலப்படாத மற்றொன்றாகவும் ஆகிய இரண்டு எழுத்துருவாக (படம்-70-3 இடதுபுறம் உள்ளவை) மாறியமைகின்றது கண்ணிற்கு புலப்படாத உருவிற்கு அதன் பலகோணத்திற்குpolygon  வேறுவண்ணங்களை அமைத்திட்டபின் (வலதுபுறம் உள்ளவை ) படம்-70-3 -இல் உள்ளவாறு கண்ணிற்கு புலப்படும் எழுத்துருவாக அது அமைகின்றது
 படம்-70-3
இந்த ஓப்பன்ஆஃபிஸ்ட்ராவில் உருவாக்கும் படங்கள் அனைத்தும் வெக்டார் வரைபடங்களாகும் இதனை பிட்மேப்படங்களாக உருமாற்றம் செய்திடுவதற்கு மேலே கட்டளைபட்டையில் Convert => To Bitmap => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  பொதுவாக இவ்வாறு உருமாற்றியபின் இவை இயல்புநிலையில் PNG என்ற பின்னொட்டின் வடிவமைப்பில்  சேமிக்கபடும் படம் ஆனது ஊடுருவும் (transparency) தன்மையற்றதாக அமையும் ஆனால் eyedropper என்ற கருவிமூலம் மாறுதல் செய்தபடங்கள்  ஊடுருவும் (transparency) தன்மையை தம்மிடம் தக்கவைத்துகொள்கின்றன
   மேலேகட்டளைபட்டியில் Tools =>Options => OpenOfce.org Draw => Print=>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன் தோன்றிடும் Options - OpenOfce.org Draw- Print என்ற (படம்-70-4) உரையாடல் பெட்டியில்  Quality என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில்  Grayscale என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-70-4

No comments:

Post a Comment