பிற்காலத்தில் பயன்படுத்தலாம் என சேமித்து
வைத்துள்ள வரிசையான கட்டளைவரிகள் அல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால்
செயற்படுத்தப்படும் செயல்கள் ஆகியவையே மேக்ரோ ஆகும். இந்த ஓப்பன் ஆஃபிஸின்
மேக்ரோவானது மிகச்சாதாரண மானதும்
சிக்கலானமானதுமான தானியங்கி செயல்களை நெகிழ்வு தன்மையுடன் அனுமதிக்கின்றது.
பொதுவாக ஒரேமாதிரியான திரும்ப திரும்ப செய்யக்கூடிய செயல்களை
செயற்படுத்துவதற்காக மட்டும் இந்த மேக்ரோ பயன்படுகின்றது .
இந்த
ஓப்பன் ஆஃபிஸின் மேக்ரோவானது வழக்கமாக பேஸிக்மொழி என அழைக்கபடும் ஸ்டார்
பேஸிக்கின் மொழியில் எழுதபடுகின்றது புதியவர்கள் கூட இந்த பேஸிக்மொழியை மிகச்சுலபமாக அறிந்துகொண்டு
மிகஎளிதாக மேக்ரோவை எழுதமுடியும் பெரும்பாலும் புதியவர்கள் இதில் முன்கூட்டியே
கட்டமைக்கப்பட்ட மேக்ரோ பதிவாளர் வாயிலாக
அல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால் செயற்படுத்தப்படும் செயல்கள்
ஆகியவைகளை பதிவுசெய்து மேக்ரோவாக
சேமித்துகொண்டு பின்னர் செயற்படுத்தமுடியும் பெரும்பாலான ஓப்பன் ஆஃபிஸின்
மேக்ரோவானது கட்டளைகளை செயற்படுத்துவதற்காக அனுப்புதல் என்ற கொள்கைக்கு ஏற்ப
ஒத்தியங்குகின்றது
பொதுவாக
நாம் நகலெடுத்தல் அல்லது வெட்டுதல்
பின்னர் ஒட்டுதல் ஆகிய செயல்களின் கட்டளைகள் கிளிப்போர்டு என்ற பகுதியில்
சேமிக்கபட்டு பின்னர் அதேசெயலை தேவைப்படும் போதெல்லாம் செயற்படுத்துவதற்கேதுவாக
தயார்நிலையில் உள்ளன அதேபோன்றே திரும்ப
திரும்ப செய்யபடும் செயல்களை முதலில் அதனை ஒருமுறை மட்டும் செயற்படுத்தி
பதிவுசெய்து சேமித்துகொண்டு பின்னர் அதனை இயக்கி செயற்படுத்திடமுடியும் அதற்காக
மேலே கட்டளை பட்டையிலுள்ள Tools
=> Macros => Record Macro=> என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக உடன் 89.1.1
Record எனும் சிறு சாளரம் திரையில்
தோன்றி
நாம்
செய்யும் செயலை மேக்ரோவாக பதிவுசெய்ய தயாராக நிற்கும் உடன் ச.குப்பன் என்ற வாறு ஏதேனும் சில
எழுத்துகளை அல்லது சொற்களை தட்டச்சு செய்து stop
recording எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இந்த மேக்ரோவை சேமித்து ஓப்பன் ஆஃபிஸ்
பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை படம்-1-ல் உள்ளவாறு
திரையில் பிரதிபலிக்க செய்க
படம்-1
பின்னர்
save macro என்ற
நூலக உள்ளடக்கங்களுக்குள் my macros என்பது இருக்கும்
அதன்கீழ் standardஎன்பதும் இருக்கும் வலதுபுறமுள்ள new moduleஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் new moduleஎன்ற
சிறு உரையாடல் பெட்டியில் module1 என்று இயல்புநிலையில் இருக்கும்
அதற்கு Recordedஎன்றவாறு ஒரு பெயரை உ்ள்ளீடுசெய்து ok
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை
மூடிவிடுக அவ்வாறே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்
மேக்ரோ உரையாடல் பெட்டியின் வலதுபுறத்தில் உள்ள
macro name என்பதற்கு Enter
My Name என்றவாறு ஒரு
பெயரை உ்ள்ளீடுசெய்து Save என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மேக்ரோவை சேமித்து கொள்க. இப்போது இந்த உரையாடல் பெட்டியில் மேக்ரோவின் பெயரானது படம்-2-ல் உள்ளவாறுEnter My
Name என்று இருக்கும்
படம்-2
பின்னர் மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Run Macro =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல்
உள்ளவாறு ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ
உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro
name என்பதின்கீழ் இருக்கும் நாம்
உருவாக்கிய EnterMyName
என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதே மேக்ரோவை வேறு வழியிலும்
செயற்படுத்திடமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Organize Macros =>
OpenOffice.org Basic => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல் உள்ளவாறு
ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ
உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro
name என்பதின்கீழ் இருக்கும் நாம்
உருவாக்கிய EnterMyName
என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
பின்னர் நாம் எழுதாமலேயே தானாகவே உருவாகியஇந்த மேக்ரோ
கட்டளை தொடரானது எவ்வாறு இருக்கும் என
திரையில் நம் கண்களால் காண மேலே கட்டளை பட்டையில் Tools
=> Macros => Organize Macros
=> OpenOffice.org Basic => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி ஓப்பன்
ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro name என்பதின்கீழ்
இருக்கும் நாம் உருவாக்கிய EnterMyname
என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-3-ல் உள்ளவாறு mymacros&Dialog
standard openoffice.orgBasic என்ற உரையாடல் பெட்டிதிரையில்
தோன்றிடும் அதில் EnterMyname எனும் மேக்ரோவின் கட்டளைவரிகளானது பின்வரும் EnterMyname எனும் மேக்ரோ
நிரல்தொடர்-1-ல் உள்ளவாறு
கட்டளைவரிகள் இருக்கும்.
EnterMyname எனும்
மேக்ரோ நிரல்தொடர்-1.
REM ***** BASIC *****
Sub Main
End Sub
sub EnterMyName
rem
-------------------------------------------------------------
rem define variables
dim document as object
dim dispatcher as object
rem
-------------------------------------------------------------
rem get access to the document
document = ThisComponent.CurrentController.Frame
370 Getting Started with OpenOffice.org 3
dispatcher = createUnoService("com.sun.star.frame.DispatchHelper")
rem
-------------------------------------------------------------
dim args1(0) as new com.sun.star.beans.PropertyValue
args1(0).Name = "Text"
args1(0).Value = "ச.குப்பன்"
dispatcher.executeDispatch(document, ".uno:InsertText", "", 0, args1())
end sub
இந்த கட்டளைவரிகளை எழுதுவதற்காக நாம்
எந்தவொரு சிறப்பு பயிற்சியும் எடுத்து கொள்ள வில்லை மிகச்சாதாரணமாக நாம் செய்யும்
செயலை Tools
=> Macros => Record Macro=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்தி
பதிவுசெய்துகொண்டபின் இந்த மேக்ரோவிற்கு ஒரு பெயரிட்டு சேமித்தோம் அவ்வளவுதான்
இதேபோன்றே நாம் விரும்பும் திரும்ப திரும்ப செய்யும் செயல்களை மேக்ரோவாகா பதிவுசெய்து பெயரிட்டு
சேமித்துகொண்டுசெயற்படுத்தி பயன்படுத்தி கொள்க .