நாம் கடந்த ஓப்பன் ஆஃபிஸ் தொடர்-பகுதி-83 இல் பார்த்தவாறு படிவம் ஒன்றை உருவாக்கிய பின் அதன் வாயிலாக தரவுகளை
உள்ளீடு செய்வதற்கு முன்பாக ஒருசில மாறுதல்களை அப்படிவத்தில் செய்யவிரும்புவோம் பொதுவாக இந்த படிவத்தில் பல்வேறு புலங்கள்(fields)
அப்புலங்களுக்கான பெயர்கள்(labels)என இதனுடைய
கட்டுபாடுகள்(controls) அமைக்கபட்டுள்ளன. அவற்றுள் புலங்களின் கட்டுபாடுகளை மட்டும் அல்லது அப்புலங்களுக்கான
பெயர்களின் கட்டுப்பாடுகளை மட்டும் அல்லது அனைத்து கட்டுப்பாடுகளையும் திருத்தி
மாறுதல் செய்திட விரும்புவோம்.
இந்நிலையில் 1.ctrl + குறிப்பிட்ட
புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில்
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
2 குறிப்பிட்ட புலம் அல்லது
அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
3 குறிப்பிட்ட புலம்
அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் தாவியின் (tab)
விசையை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தால் அதனுடைய கட்டுப்பாடு ஒரு
பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன்(படம்-1) நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும்
படம்-1
இவ்வாறு மாறுதல் செய்யும்போது
திரையின் ஓரப்பகுதியில் ரூலரை தோன்றசெய்து அதில் சென்டிமீட்டராக அதன்அளவை
மாற்றியமைத்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது இதற்காகTools => Options =>OpenOffice.org Writer =>
View=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையின் மேல் ,இடதுபுற ஓரம்
தோன்றிடும் ரூலரின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை
சொடுக்குவதன்வாயிலாக விரியும் சூழ்நிலை பட்டியில் சென்டிமீட்டர் அளவை தெரிவுசெய்து
சொடுக்கிஅமைத்துகொள்க
படிவத்தை
மாறுதல் செய்வதற்கான படிமுறைகள்
படிமுறை1 நாள் புலத்தை மாறுதல் செய்தல்: மேலே கூறியவாறு
மாறுதல் செய்யவிரும்பும் நாள் புலத்தின் கட்டுபாட்டினை(date fields
control) தெரிவு செய்து திரையில் தோன்றசெய்க பின்னர்
வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு
சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக மாறிவிடும் உடன்சுட்டியின் இடதுபுற பொத்தானை இதன்அளவு ரூலரில் 6 சென்டிமீட்டர்
வரும்வரை அப்படியே பிடித்துகொண்டிருந்து
அதன்பின் விடுக அதன்பின்னர் திரையின் மேலே
Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படம்-2-ல் சிவப்பு
வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2
உடன் நாள்புலத்தின் பண்பியல்பு
உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Date format propertyஎன்ற பகுதிக்கு சென்று அதனுடைய
கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் Standard (long) என்பதை
தெரிவுசெய்து சொடுக்கி இயல்புநிலையில் No என்றிருப்பதை Yes
என மாற்றியமைத்து கொள்க
படிமுறை 2 புலத்தின் அகலத்தை மாற்றியமைத்தல்: ஒருசில புலங்களானது இயல்பு நிலையில் அதற்கென உள்ளீடு செய்யபடும்
தரவுகளுக்கான ஒதுக்கவேண்டிய அளவைவிட மிகப்பெரியதாக இருக்கும் அதனால் அவைகளில்
மிகுதி காலியான இடம் வீணாக இருக்கும் அதனை சரிசெய்து அமைப்பதற்காக முன்பு
கூறியவாறே BPaymentஎன்ற புலத்தினை தெரிவு செய்து
கொள்க பின்னர் வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண
கைப்பிடிக்கு அருகில் இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக
மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை
இதன்அளவு ரூலரில் 2.5 சென்டிமீட்டர் வரும்வரை அல்லது தரவுகளின் அளவிற்கு பொருத்தமாக
அமையும்வரை அப்படியே பிடித்து கொண்டிருந்து அதன்பின் விடுக அவ்வாறே Lpayment, Spayment, SnPayment, Mpayment, and
MiscPaymentஆகிய புலங்களின் அளவுகளையும் மாற்றியமைத்திடுக
படிமுறை 3 ஒரு குழுவிலுள்ள தனித்தனி
புலத்தினை அதன் வகைக்கு ஏற்றவாறு இடம்மாற்றியமைவு செய்தல்:
படம்-3
நாம் மேலே கண்ட படிமுறையின்படி ஒரு
குழுவிற்குள் உள்ள பல்வேறு புலங்களை வகைக்கேற்றவாறு தெரிவுசெய்துபிடித்துகொண்டு
இழுத்து சென்று (படம்-3)இடம் மாற்றி
யமைத்து கொள்க
படிமுறை 4 புலங்களின் பெயரை மாற்றியமைத்தல்:மாறுதல் செய்யவிரும்பும் புலத்தின்
பெயரை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் விரியும சூழ்நிலை பட்டியில் Control என்ற(படம்-4)
கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக
படம்-4
உடன் தோன்றிடும் labeled Propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் labelஎன்ற பகுதியை தெரிவு செய்து அதில்
நாம் விரும்புவதுபோன்று பெயரினை மாறுதல் செய்து அமைத்து கொண்டு இந்த உரையாடல்
பெட்டியைமூடிவிடுக
படிமுறை 5 புலங்கள் புலங்களின் பெயர்கள்
ஆகியவற்றின் அகலத்தை மாற்றியமைத்தல்: அகலத்தினை
மாற்றியமைத்திட விரும்பும் புலம் அல்லது புலத்தின் பெயரை அதனுடைய கட்டு பாட்டினை
தெரிவுசெய்து திரையில் தோன்றசெய்க
பின்னர் வலதுபுறத்தின்
மையத்திலுள்ள பச்சை வண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை
அம்புக் குறியாக மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை இதன்அளவு ரூலரில் 2 சென்டிமீட்டர்
வரும்வரை அல்லது நாம் விரும்பும் அளவிற்கு
அப்படியே பிடித்துகொண்டிருந்து அதன்பின் விடுக இவ்வாறே மற்ற புலம் அல்லது புலத்தின் பெயரை அதன் அகலத்தினை மாற்றி யமைத்து கொள்க
படிமுறை 6 ஒரு புலத்திற்கு பதிலாக
வேறொரு புலமாக மாற்றியமைத்தல்: ctrl + Breakfast இனுடைய
Payment என்ற புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில்
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை
வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும்
பின்னர் அக்கைப்பிடிக்குள் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Replace with => List Box=> என்றவாறு (படம்-5)கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-5
பின்னர் Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக
படம்-6
உடன்
தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General என்ற (படம்-6) தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள Drop down என்ற பெட்டியில் இயல்புநிலையில் No
என்றிருப்பதை Yes என (படம்-6)மாற்றியமைத்து கொள்க
இதே உரையாடல் பெட்டியின் data என்ற
தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க
அதிலுள்ள Type of list contents என்ற பெட்டியில் Sql என(படம்-7) மாற்றியமைத்து
கொள்க
படம்-7
இதே உரையாடல் பெட்டியின் tab என்ற தாவிபொத்தானின்
திரையை தோன்றசெய்க அதிலுள்ள list contents என்றபெட்டியில் SELECT "Type", "Type" FROM
"Payment Type" என (படம்-7) மாற்றியமைத்து கொள்க அவ்வாறே இதே
படிமுறையை பின்பற்றி Lunch, Supper, Motel, Snacks, Miscஆகியவற்றின்
payment புலங்களுக்கும் மாற்றி யமைத்து கொள்க
படம்-8
படிமுறை 7 குறிப்பு புலத்தினை
மாற்றியமைத்தல்:
ctrl + note என்ற
புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை
தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை
வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும்
பின்னர் Form Controls toolbar இல் உள்ள Controls என்ற படிமுறை 1-ல் குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக
உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில்
General என்ற தாவிபொத்தானின் திரையை தோன்றசெய்க அதிலுள்ள Scroll bar என்ற புலத்தினுடைய பெட்டியின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில்
இயல்புநிலையில் none என்றிருப்பதை vertical என (படம்-8)
மாற்றியமைத்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக பின்னர் படிமுறை 5 ஐ பின்பற்றி
இதனுடைய நீள அகலத்தை மாற்றியமைத்துகொள்க
படம்-8-1
படிமுறை 8 ஒரு துனைப்படிவத்தில் புலத்தின்
பெயர் புலத்தினை மாற்றியமைத்தல்: payment type என்ற
புலப்பெயரில் இடம்சுட்டியை வைத்து படிமுறை
6 இல் கூறியவாறு Replace with (படம்-8) => List Box(படம்-5)=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக பின்னர் மீண்டும் இதே payment type என்ற
புலப்பெயரில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து column என்ற (படம்-8)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கி இதனுடைய பண்பியல் உரையாடல் பெட்டியை
தோன்றசெய்க பின்னர் படிமுறை 6 இல் கூறியவாறு
அதிலுள்ள Type of list contents என்ற பெட்டியில் Sql என மாற்றியமைத்து கொள்க இதே உரையாடல் பெட்டியின் tab என்ற தாவிபொத்தானின்
திரையை தோன்றசெய்க அதிலுள்ள list contents என்றபெட்டியில் SELECT "Type", "Type" FROM
"Payment Type"என மாற்றியமைத்து கொள்க பிறகு இந்த உரையாடல் பெட்டியை
மூடிவிடுக
படிமுறை 9 குழுவிற்கான தலைப்பைஅமைத்தல்: இடம்சுட்டியானது மேலே இடதுபுற
மூலையில் இருப்பதை உறுதி செய்து கொள்க பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்துவதன் மூலம் Heading 2. இன் கிடைவரிசைக்கு இடம்சுட்டியை கொண்டு
செல்க. அதில் இயல்பு நிலையில் இருப்பதை அதனுடையApply Styles என்ற கீழிறங்கு
பட்டியலை விரியச்செய்க அதில் Meals snacks என்றவாறு தட்டச்சு செய்து
உள்ளீட்டு விசையை அழுத்தி subformஇற்குள் இடம் சுட்டியை கொண்டு சென்று Fuel Data என
இதனுடைய தலைப்பையும் மாற்றியமைத்திடுக
படிமுறை 10 படிவத்தின் பின்புலத்தினை
மாற்றியமைத்தல்: ஒரு படிவத்தின் பின்புலத்தில் Tools => Options => OpenOffice.org =>
Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்கி . வண்ணத்தையும், வரைகலை ,படம் ஆகியவை இருக்குமாறும் மாற்றியமைத்திடலாம் இவ்வாறு பின்புலத்தினை
மாற்றியமைக்கும்போது புலங்களையும் அவற்றின் பெயர்களையும் திரையில் நம் கண்ணிற்கு
புலப்படுமாறும் அதனை நம்மால் படித்தறிந்து கொள்ளுமாறும் அமைத்திட வேண்டும் என்பதை
மனதில் கொள்க படம்-3-ல் உள்ள படிவத்தின் முதல்வரிசை புலங்களின் பெயர்களில் உள்ள Control+ Date label ஐ தெரிவுசெய்து
சொடுக்குக பின்னர் Control+shift+
rest of the labels களை
தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பின் Design Form
toolbarஎன்பதில் உள்ளControlஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனுடைய
பண்பியல்பு உரையாடல் பெட்டியை திரையில் தோன்ற செய்க அதன்பின்னர் பின்புல
வண்ணம் இயல்புநிலையில் Light cyan. என்றிருப்பதை அதனுடைய கீழிறங்கு
பட்டியலிலிருந்து தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க அவ்வாறே மற்ற புலங்களின்
பெயர்களுக்கும் பின்புல வண்ணத்தை மாற்றி் யமைத்து கொண்டு இந்த பண்பியல்பு உரையாடல்
பெட்டியை மூடிவிடுக
அதன்பிறகு படிவத்தின்
பின்புலத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் page என்ற
கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் background
என்ற (படம்-9) தாவியின் திரையை தோன்றசெய்க அதில் As என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் color என்பதற்கு பதிலாக graphic என்பதை தெரிவுசெய்து
கொள்க
படம்-9
பின்னர் File என்ற பகுதியில் browseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியபின் விரியும் உரையாடல் பெட்டியில்
Gallery என்ற மடிப்பகத்தை தேடிபிடித்து அதில் sky.gif என்ற கோப்பினை தெரிவுசெய்து open
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் type என்ற பகுதியில் உள்ள
area என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படிமுறை 10
படிவத்தின் தாவியின்வரிசையை
மாற்றியமைத்தல்: ஒரு படிவத்தில் உள்ள புலங்களின் வாயிலாக தரவுகளை உள்ளீடு
செய்திடும்போது ஒரு புலத்திலிருந்து மற்றொரு புலத்திற்கு இடம்சுட்டி
மாறிசெல்வதற்கு விசைபலகையிலுள்ள tab என்ற விசையை அழுத்தபடவேண்டும் இவ்வாறு
tab என்ற விசையை அழுத்திடும் போது எந்த
புலத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து வரிசைகிரமமாக எந்தபுலம் வரை
செல்லவேண்டும் என நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கொள்ளமுடியும் இதற்காக Control+ Date field ஐ தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் form controls toolbar இல் form design என்றஉருவபொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக அல்லது View => Tool bars => Form
Design=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும்
கருவிபட்டியில் Activation
Order என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும்Tab
Order என்ற உரையாடல் பெட்டியில் தேவையான புலங்களை தெரிவுசெய்து கொண்டு Move Up அல்லது move down ஆகிய இரு பொத்தான்களில்
ஒன்றினை தேவையானவாறு தெரிவுசெய்து
சொடுக்கி முன்பின் வரிசை கிரமத்தை சரிசெய்து நாம்விரும்பியவாறு வரிசையாக அமைத்து
கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த
படிவத்தையும் தரவுதளத்தையும் சேமித்து வெளியேறுக
No comments:
Post a Comment