Thursday, November 11, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-25- ஒரு ஆவணத்திலுள்ள உரையையும்(text) ,வரைகலையையும்(graphics)கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிடுதல்

   எம் எஸ் ஆஃபிஸில் அச்சிடும் பணி அனைவருக்கும்  தெரிந்ததே. அதேபோன்று  ஓப்பன் ஆஃபிஸின்  பயன்பாடுகளின் மூலம் வழக்கமாக அச்சிடுவது மட்டுமல்லாது கூடுதலாக வண்ண அச்சுபொறியில்கூட  கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு இந்த வண்ண மைக்கும் டோனருக்கும் ஆகும் அதிகபட்ச செலவை தவிர்க்க முடியும் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?ஆம் முடியும் அதற்கான படிமுறை பின்வருமாறு.
1.File => Print =>என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
2.பின்னர் தோன்றிடும்  (படம்-25-4) Print என்ற உரையாடல் பெட்டியில்   Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3. அதன்பின்னர் தோன்றிடும் (படம்-25-1) Cananon Lbp3100/LB3108/LBP3150 Properties என்ற உரையாடல் பெட்டியில் உள்ள ஒவ்வொரு அச்சுப்பொறிக்கும் ஏற்ப இந்த வாய்ப்பு மாறுபடும் ஆயினும் ) Color என்ற வாய்ப்பை பற்றி  அந்தந்த அச்சுப்பொறியின் பயனாளர் கையேடு அல்லது உதவிகுறிப்புகளை பார்வையிட்டுஅறிந்து கொள்க
   படம்-25-1
4.அதிலுள்ள Color என்ற வாய்ப்பில்  black and white or gray scaleஆகிய இரண்டில் ஒன்றினை (இங்கு Manual gray scale settings என்பதை)  தெரிவுசெய்து கொள்க. பொதுவாக  gray scale என்ற வாய்ப்பு வரைகலை (graphics ) நிலைக்கு பொருத்தமானதாகும்.
5பின்னர்.OK என்ற பொத்தானை சொடுக்குக
6.பிறகு Print என்ற உரையாடல் பெட்டியிலும் OK என்ற பொத்தானை சொடுக்குக
7.இதன் பின்னர் ஆவணங்களை வண்ண அச்சுப்பொறியிலிருந்து கருப்பு வெள்ளை வண்ணத்தில் மட்டும் அச்சிட்டு பெறமுடியும்.
ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து ஆவணங்களின் உரையையும்(text) , வரை கலையை யும் (graphics),சாம்பல் வண்ணத்தில் அச்சிடுதல்
 ரைட்டர், கால்க்,இம்ப்பிரஸ்,போன்ற அனைத்துஓப்பன் ஆஃபிஸின்   பயன்பாடுகளிலும்  வண்ண அச்சுபொறியிலிருந்து கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு பெறமுடியும் இதற்காக
1.Tools => Options => OpenOffice.org => Print => என்றவாறு கட்டளை களை  தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
2பின்னர் தோன்றிடும்(படம்-25-2)   Options-OpenOffice.org-Print என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில் உள்ள Convert colors to gray scale என்ற வாய்ப்பை தெரிவுசெய்க.
3.பிறகுOK என்ற பொத்தானை சொடுக்கி இந்த மாறுதலை சேமித்து வெளியேறுக.
(படம்-25-2)
ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் உரையைகருப்பு வெள்ளை வண்ணத்தில்அச்சிடுதல்
 ஓப்பன் ஆஃபிஸின்  ரைட்டரில் மட்டும்  வண்ண அச்சுபொறியிலிருந்து  கருப்பு வெள்ளை வண்ணத்தில் அச்சிட்டு பெறமுடியும் இதற்காக
1.Tools => Options => Open Office writer => Print => என்றவாறு கட்டளை களை  தெரிவு செய்து சொடுக்கி செயற்படுத்துக
2பின்னர் தோன்றிடும் (படம்-25-3)  Options- Open Office.org Writer-Print என்ற உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில்  Contents என்பதன் கீழுள்ள print black  என்ற வாய்ப்பை தெரிவுசெய்க.
3.பிறகு OK என்ற பொத்தானை சொடுக்கி இந்த மாறுதலை சேமித்து வெளியேறுக.
(படம்-25-3)
 சிற்றேட்டை(brochure) அச்சிடுதல்
நாம் வழக்கமாக கணினி வழியாக அச்சிடும்போது ஒரு பக்கத்தில் மட்டுமேஅச்சிடு வோம். மற்றொரு பக்கம் வீனாக காலியாக விட்டிடுவோம் இதனால் ஏராளமான தொகை எழுது பொருள் அச்சிடுவதற்கென்றே செலவாகும்  அதற்கு பதிலாக ஒரு தாளின் இருபுறமும் அச்சிட்டால் இவ்வாறு அதிகமாக தாட்களை அச்சுபொறிக்கென்று வாங்கும்  செலவை  தவிர்க்கமுடியும்.அல்லவாஅதற்காக 
 1.முதலில் அச்சிடவேண்டிய தகவலிற்கான எழுத்துருவின் அளவு  பக்க வடிவமைப்பு என்பன போன்ற விவரங்களை முக்கியமாக orientationஎன்பதில் portrait அல்லது landscapeஎதை தெரிவு செய்யபடவேண்டுமென  திட்டமிட்டு கொள்க.
2. பின்னர்  File => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக.
3.பிறகு தோன்றிடும்  (படம்-25-4)Print என்ற உரையாடல் பெட்டியில் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
(படம்-25-4)
4.அதன் பின்னர் தோன்றிடும் (படம்-25-5)Printer Options என்ற உரையாடல் பெட்டியில் முதலில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,right pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்துகொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Print என்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்குக
5.உடன் தாளின் நாம் தெரிவுசெய்தவாறு முன்பக்கம் மட்டும் அச்சிடப்படும்.
6. பிறகு  தாட்களை சரியாக முன்பின் திருப்பி அடுக்கி மீண்டும்அச்சு பொறிக்குள் வைத்து File => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற் படுத்துக.
 (படம்-25-5)
7.பின்னர் தோன்றிடும்  (படம்-25-4)Print என்ற உரையாடல் பெட்டியில் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
8.அதன் பின்னர் தோன்றிடும் (படம்-25-5)Printer Options என்ற உரையாடல் பெட்டியில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,left pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்து கொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்குக
9.உடன் தாட்களின் பின்புறமும்  அச்சிடப்பட்டு இருபுறமும் அச்சிடப்பட்ட முழுமையான சிற்றேடு தயாராகிவிடும்.
10.உங்களுடைய அச்சுபொறி ஒரே சமயத்தில் இருபுறமும் அச்சிடும் திறன் கொண்டதாக இருந்தால் இரண்டுமுறை மேற்கண்ட செயலை செயற்படுத்திடுவதற்கு பதிலாக
11. Printer Options என்ற உரையாடல் பெட்டியில் pagesஎன்பதன் கீழுள்ள brochures ,right pages ,left pages ஆகியவற்றின் தேர்வுசெய் பெட்டியை சரியாக தெரிவு செய்து கொண்டு  ok என்ற பொத்தானையும் பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானையும் சொடுக்கி  ஒரே சமயத்தில் தாட்களின் முன்புறமும் பின்புறமும் அச்சிட்டுகொள்க.

No comments:

Post a Comment