Saturday, November 20, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-29.ஓப்பன் ஆஃபிஸின் புதுப்பொலிவும் வாடிக்கையாளர் விரும்பும் கட்டளைபட்டி, கருவிபட்டிகளை உருவாக்குதலும்

   கடந்த பத்தாண்டுகளாக வியாபார பொருளாக உள்ள எம்எஸ்ஆஃபிஸ் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் திறவூற்று மென்பொருளாகவும் கோலோச்சிவரும் ஒப்பன் ஆஃபிஸை வெளியிடும் உரிமையானது சமீபத்தில் சன்மைக்ரோ சிஸ்டத்திடமிருந்து ஆரக்கிள் நிறுவனம்  கையகபடுத்தியதை தொடர்ந்து இதன் லோகோவும் இதனை அடையாளம் காணக்கூடிய குறியீடும்  மாற்றப்பட்டுள்ளது.
 மேலும் இந்த பயன்பாட்டை இயக்கத்துவங்கியவுடன்  தோன்றிடும் திரையின் தோற்றம் கூட படம்-29-1-ல் உள்ளவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது
 அதுமட்டுமல்லாது இதன் தொடக்க மையத்திரையின் தோற்றமும் படம்-29-2-ல் உள்ள வாறு ORACLE  நிறுவனத்தின் பெயருடன்அமையமாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளது
 இந்த தொடர் ஆரம்பித்தபோது இதன் பதிப்பு 3 என்றிருந்தது பின்னர்மேம்படுத்தபட்டு .பதிப்பு 3.1 என்றும்,பதிப்பு 3.2 என்றும் படிப்படியாக வெளியிடப்பட்டன தற்போது 3.3 இன் பீட்டா பதிப்புகூட வெளியிடபட்டுள்ளது 
   இந்த ஓப்பன் ஆஃபிஸின் முந்தைய பதிப்புகளில் தொடக்கஇயக்கம் மட்டும் சிறிது கூடுதலான கால அவகாசம் எடுத்துகொள்வதை தவிர்த்து பதிப்பு 3.2 -ல் 46%  குறைத்து  தொடக்க இயக்கம் (படம்-29-3) விரைவாக அமையுமாறு செய்யதுள்ளனர்

  மற்ற எந்தவொரு அலுவலக பயன்பாட்டின் கோப்புகளையும் மிக எளிதாக திறந்து பணிபுரியுமாறும் பணிமுடிந்துபின் சேமிக்கும்போது நாம்விரும்பும்  வகை கோப்பாக சேமித்து கொள்வதற்கான வசதியும் இதன் பதிப்பு-3.2-ல் உள்ளது.
  ஒரு ஆவணத்தில் வடிவமைத்தல் அச்சிடுதல் PDFஆக ஏற்றுமதிசெய்தல் திரையில் பிரதிபலிக்க செய்தல் என்பன போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படும் வகையில் இந்த3.2-ல் சிறப்புவாய்ந்த திறந்த வகை எழுத்துருக்கள் (Open Type Fonts)உபயோக படுத்தபட்டுள்ளன.
  ஒற்றையான செல்மட்டுமல்லாது தெரிவுசெய்யப்படும் ஒன்றுக்குமேற்பட்ட செல்களை சுற்றியும் எல்லைக்கோட்டினை(border) எளிதாக அமைக்க இந்த பதிப்பு 3.2 -ல் அனுமதிக்க பட்டுள்ளது.
  ஒன்றிணைக்கப்பட்ட (merged) செல்களுடன் நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல், நீக்குதல்  என்பன போன்ற பணிகளை விரைவாக செய்திட அனுமதிக்குமாறும் இதன் பதிப்பு 3.2-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  தொடர்ச்சியற்ற செல்களின் தரவுகளையும மிக எளிதாக நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல் என்பன போன்ற பணிகளை செய்திட அனுமதிக்குமாறு இதில் செய்யப் பட்டுள்ளது.
 அதுமட்டுமல்லாது இதனுடைய வரைபடத்தில்  bubble chart என்ற புதிய வகையை (படம்-29-4)இதன் பதிப்பு 3.2-ல்  அறிமுகபடுத்தியுள்ளனர்...
கட்டளை பட்டியை உருவாக்குதல்
 தொடர்ந்து இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கட்டளை பட்டியை உருவாக்கமுடியும். அதற்காக இதன் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியில் Tools=> Customize=>என்றவாறு கட்டளையை தெரிவு செய்து செயற்படுத்துக.
  உடன் படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Menu என்ற தாவியின் திரையுடன் தோன்றும் முதலில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்திலுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் தெரிவு செய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிலுள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new menu என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-6தோன்றிடும் அதில் menu name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
 அதன்பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Menu என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
   இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டளைகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கட்டளை யை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கட்டளையை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் புதிய குழு உருவாக்க விரும்பினால் begin a group என்பதையும்  துனை பட்டியல்களை உருவாக் கிட விரும்பினால் Add sub menu என்பதையும் தெரிவுசெய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக.
கருவிபட்டியை உருவாக்குதல்
 இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கருவி பட்டியை கூட உருவாக்க முடியும். அதற்காக படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் Tools என்ற தாவியை சொடுக்குக பின்னர் விரியும் Tools என்ற தாவியின் திரையில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்தி லுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல் மூலம் open ofiice.org writer என்றவாறு தெரிவுசெய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new  என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-7)தோன்றிடும் அதில் toolbar name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Too bar என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கருவிகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கருவியை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கருவியை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் தெரிவுசெய்துகொள்க. கருவிபட்டியில் கட்டளைகளானது பணிக்குறி(icon)களாகத்தான் இருக்கும் அதனால் இந்த புதிய கருவிபட்டியில் நம்மால் சேர்க்கப்பட்ட கட்டளையை தெரிவுசெய்துகொண்டு  இதே modify என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலுள்ள change icon என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் விரியும் change icon என்ற உரையாடல் பெட்டியில் தேவையான குறும்படத்தை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  இவ்வாறு  அனைத்து பணியும் முடிந்தது எனில் Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானை சொடுக்குக.
 

No comments:

Post a Comment