Saturday, November 20, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-28-சுட்டுவரிசையையும் ,நூல்விவரத்தொகுதியையும் உருவாக்குதல்

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தில் சுட்டுவரிசை(Index/0 என்பதுஒரு ஆவணத்தில் பயன்படுத்தபட்டுள்ள திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் பட்டியலாகும்
  குறிப்பிட்ட சொல்லானது அவ்வா வணத்தில் எங்கெங்கு வந்துள்ளதுஎன இதன் மூலம் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த சுட்டுவரிசையின் பட்டியலானது ஆவணத்தின் இறுதியில் திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் ஆகியவற்றின் அகரமுதலி பட்டியலாக பக்க எண்களுடன் சேர்ந்தே இருக்கும்.
  சுட்டுவரிசையில் திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை சேர்த்தல்
  1.திறவுசொல் அல்லது சொற்தொடரை மேம்படுத்தி தூக்கலாக காண்பிக்க செய்வது அல்லது இடம்சுட்டியை அச்சொல்லின் முன்புறத்தில் நிறுத்துவது ஆகிய ஏதேனு மொன்றின் வாயிலாக சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்ப்பதற்கான உள்ளீட்டை உருவாக்கவேண்டும்.
2.பின்னர் Insert > Indexes and Tables > Entry என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து அல்லது Insert என்ற கருவிபட்டையிலுள்ள Entry என்ற உருவை (படம்-28-1)தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக  செயற்படுத்துக.
                            படம்-28-1
 அதன் பின்னர் தோன்றிடும் Insert Index Entry என்ற (படம்-28-2) உரையாடல் பெட்டியில் உள்ள Entry என்ற உரைபெட்டியில் காண்பிக்கும் திறவுசொல் அல்லது சொற்தொடரை ஏற்றுகொள்க அல்லது மாறுதல் செய்வதாயின் Entry என்ற உரைபெட்டியை சொடுக்கி   வேறு சொல்லை  இந்த பெட்டிக்குள் உள்ளிணைத்து கொள்க
                              படம்-28-2
3.பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசை பட்டியலில் சேர்த்து கொள்க
4. இந்த உரையாடல் பெட்டியை மூடாமல் அப்படியே வைத்துகொண்டுமேலேகூறிய படிமுறைகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை இந்த சுட்டு வரிசையில் சேர்த்திடலாம் அதற்காக ஒவ்வொரு திறவுசொல் அல்லது சொற்தொடரையும் அவை இவ்வாவணத்தில் இருக்கும் பக்கத்திற்கு  ஒவ்வொரு முறையும் சென்று அவைகளை ஒவ்வொன்றாக தெரிவு செய்து சொடுக்கியபின்னர் இந்த உரையாடல் பெட்டியை சொடுக்குக அதன்பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்த்து கொள்க
5. அனைத்து திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களையும் இந்த சுட்டுவரிசைக்குள் உள்ளீடு செய்து சேர்க்கப்பட்டுவிட்டது எனில் close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக.
 பின்னர்Tools > Options >OpenOffice.org > Appearance > Text Document > Field shadings  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பிக்கும்
சுட்டுவரிசையை விரைவாக உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவிரும்பும் திறவுசொல் அல்லது சொற்தொடரின் முன்புறம் இடம்சுட்டியை வைத்து Insert > Indexes and Tables > Indexes and Tables. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்றஉரையாடல்(படம்-28-3)பெட்டியில் Index/Table என்ற தாவியின் பக்கத்தில் Typeஎன்றஉரைபெட்டியலுள்ள Alphabetical Index.என்பதை  தெரிவுசெய்க. .
3.அதன்பின்னர் options என்பதன் கீழுள்ள Case sensitive.என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்திருப்பதை தெரிவுசெய்யாது விட்டிட்டு ok என்ற பொத்தானை சொடுக்குக

                            படம்-28-3
நடப்பிலுள்ள சுட்டுவரிசைஉள்ளீட்டை மாறுதல் செய்தல்
 நடப்பில் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பித்து செயலில் இருக்கும் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் இடதுபுறத்தில் இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக
 உடன் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலில் Index Entry. என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Edit > Index Entry. என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக.
  பின்னர் தோன்றிடும் Edit index Entry என்ற(படம்-28-4) உரையாடல் பெட்டியில் forward arrow அல்லது back arrow ஆகிய பொத்தான்களில் ஒன்றை  சொடுக்குவதன்வாயிலாக சுட்டுவரிசையிலுள்ள அனைத்து சொற்களும் இருக்கும் இடத்திற்கு செல்லமுடியும்
                             படம்-28-4
 அவ்வாறு சென்று தேவையான மாறுதல்களை இதில் செய்து முடித்தபின்னர் ok என்ற பொத்தானை சொடுக்குக
அகரவரிசை தவிர்த்தவேறுவகைசுட்டுவரிசையை உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவேண்டிய பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert > Indexes and tables > Indexes and tables என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற  உரையாடல் பெட்டியில் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வகையை தெரிவுசெய்து கொள்க.
  அதன் பின்னர் முந்தைய படிமுறைகளில் கூறியவாறு மற்ற அனைத்து செயல்களையும் செய்தபின்  ok என்ற பொத்தானை சொடுக்குக
நூல்தொகுப்பு பட்டியல் (Bibliographies)
  ஒரு ஆவணத்திலுள்ள குறிப்பிட்ட சொல்லானது எந்த புத்தகத்திலிருந்து எடுத்தாள பட்டது என்ற விவரத்தை குறிப்பிட இந்தநூல்தொகுப்பு பட்டியல் பயன்படுகின்றது.இந்த நூல்தொகுப்பு பட்டியலை அதே ஆவணத்திலோ அல்லது தனியாக தரவுதள அட்டவணை கோப்பாகவோ பராமரிக்கமுடியும்.
தரவுதள நூல்தொகுப்பு பட்டியலை (Bibliographies)உருவாக்குதல்
 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Bibliography Database.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்(படம்-28-5) என்ற சாளரத்தின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Filter என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                                 படம்-28-5
  உடன்தோன்றிடும் Standard Filter என்ற உரையாடல் பெட்டியில் (படம்-28-6) வடிகட்ட விரும்பும் சொற்களை தெரிவு செய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக
                                 படம்-28-6
   இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Column Arrangement  என்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் column layout Table biblio   என்ற உரையாடல் பெட்டியில்(படம்-28-7) தேவையானவாறு நெடுவரிசையின் அமைப்பை தெரிவுசெய்து அமைத்துகொள்க

                             படம்-28-7
 இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Data Source ன்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் Data Source என்ற உரையாடல் பெட்டியில் (படம்--28-8) தேவையான Data Source தெரிவுசெய்து அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                              படம்-28-8
 மிகுதியாக இருக்கும் இந்த சாளரத்தின் மையபகுதியே விவரங்களை அட்டவணையாக பிரதிபலிக்கசெய்யும் இடமாகும்
  இந்த சாளரத்தின் கீழ்பகுதியானது அட்டவணையில் தெரிவுசெய்யபட்டஆவணத்தின் முழுவிவர உள்ளடக்கத்தை பிரதிபலிக்கசெய்கின்றது
  இந்த தரவுதளத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தி நேரடியாக ஆவணங்களை சேர்த்திடலாம் அவ்வாறான பணியின்போது புலங்களுக்கிடைய இடம்சுட்டி நகருவதற்கு தாவி(tab) விசையை பயன்படுத்தி கொள்க இறுதியாக கடைசிபுலத்தில் இடம்சுட்டி இருக்கும்போது மீண்டுமொருமுறை தாவி விசையை  அழுத்துக   
 பட்டியலுள்ள சொற்களுடன் ஆவணத்திலுள்ள சொற்களையும் தொடர்புபடுத்தி மேற்கோளாக (citations)காண்பிப்பதற்கு ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டர் ஆனது 1.நூலாசிரியரின் பெயர் 2. சொற்களுக்கு  வரிசைஎண்ணிடுவது ஆகிய இரண்டு வழிகளை பயன்படுத்தி கொள்கின்றது
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் சொல்லிற்குமுன்புறம் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables > Bibliographic entry.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Bibliographic Entry என்ற உரையாடல் (படம்-28-9)பெட்டியிலுள்ள From bibliography database என்ற வானொலி பெட்டியை தெரிவு செய்துகொண்டு short name என்பதன் கீழ் இருக்கும் கீழிறங்கு
பட்டியல் மூலம் மேற்கோள்பெயரைதெரிவுசெய்து inseert என்ற பொத்தானை சொடுக்குக..
                             படம்-28-9
 இவ்வாறே மேலும் மேற்கோள்களை இந்த உரையாடல்பெட்டியை மூடாமல் தெரிவுசெய்துகொண்டு இறுதியாக close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables >.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Indexes and tables என்ற (படம்-28-10)உரையாடல் பெட்டியின் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் Bibliography என்பதை தெரிவுசெய்து கொள்க
                                   படம்-28-10
 இதில் கைதவறுதலாக மாறுதலெதுவும்ஆகாமலிருப்பதற்கு Protected against manual changes என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு அவ்வாறே தேவையானால் Number entries என்ற தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்துகொள்க. மீகுதி இயல்பாக தெரிவுசெய்திருப்பதை ஏற்றுகொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 நூல்தொகுப்பு பட்டியலை bibliography இடம்சுட்டிவைத்து தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலிலிருந்து Edit Index/Table அல்லது update Index/Table அல்லது  delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Insert Index/Table  என்ற உரையாடல் பெட்டியில்   Updating a table of contents” அல்லது “Deleting a table of contents ஆகிய வசதிகளின் வாயிலாக தேவையான மாறுதல்களை செய்து கொண்டு இந்த பட்டியலை சேமித்துகொள்க
ஓப்பன் ஆஃபிஸின் நூல்தொகுப்பு பட்டியல் வசதியானது சரியாக செயல்படவில்லை யெனில்  கவலையே படவேண்டாம்  இலவசமாக கிடைக்ககூடிய Bibus (http://bibus-biblio.sourceforge.net/wiki/index.php/Main_Pageஅல்லதுr Zotero (http://www.zotero.org/ஆகிய இரண்டில் ஒன்றினை இதற்காக பயன்படுத்திகொள்க.

No comments:

Post a Comment