Saturday, November 20, 2010

ஓஃப்பன் ஆபிஸ்-30-ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் வரைபடங்களை இணைத்தலும் விரிவாக்கம் செய்தலும்

  நாம் ஒரு ஆவணத்தை தயார்செய்திடும்போது நம்முடைய கருத்தினை தெளிவாக புரிந்து கொள்ள செய்வதற்காக  இடையிடையே படம், வரைபடம் போன்றவைகளை இணைத்து  அளித்திட விரும்புவோம்
   இவ்வாறான படங்கள் கேமராவின்மூலம் எடுக்கப்பட்டநிழற்படம், படம் வரையும் மென்பொருளால் வரைந்த படம், விரிதாள் எனப்படும் எக்செல்லில் உருவாக்கப்படும் வரைபடம் ஆகிய மூன்று அடிப்படை வகையை சார்ந்ததாகும். இவ்வாறான படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு  GIF, JPEG or JPG, PNG,  BMP ஆகிய ஏதேனும் ஒரு வகையில் சேமிக்கப் பட்ட கோப்புகளாக இருப்பதை எளிதாக பதிவிறக்கம் செய்து இணைத்து கொள்ளலாம்.
  அதற்காக ஒரு ஆவணத்தின்படத்தினை இணைத்திட விரும்பும் இடத்தில் இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Insert => Picture= > From File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் Insert Picture என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.1) அதில் நாம் இணைத்திட விரும்பும் படம் இருக்கும் இடத்தை தேடிபிடித்துதெரிவுசெய்து கொள்க.பின்னர் Preview என்ற தேர்வுசெய் (Check box)   வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க உடன் நாம் தெரிவு செய்த படமானது முன் காட்சியாக இதே உரையாடல்பெட்டியில் தோன்றிடும்
  படம் சரியானதுதான்எனில்Link என்ற தேர்வுசெய் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அல்லது இந்த Link என்ற தொடுப்பினை  தெரிவுசெய்யாமல் Open என்ற பொத்தானை சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்தபடமானது ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
  இங்கு Link என்ற வாய்ப்பினை தெரிவுசெய்திருந்தால் படக்கோப்பு தனியாகவும் ஆவண கோப்பு தனியாகவும் இருக்கும் அதனால் நினைவகத்தில் ஆவணத்தின் அளவு அதிகரிக்காது, இந்த ஆவணத்தை திறக்காமலேயே படத்தை தேவையானவாறு மாற்றி யமைத்து கொள்ளலாம். ஆயினும் இந்த ஆவணத்தினை பிறருக்கு அனுப்பி வைக்கும் போது கூடவே படம் இருக்கும் கோப்பினையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் இந்த Link என்ற வாய்ப்பின் மிகப்பெரிய குறையாகும்..
  ஒரே படத்தைஒரு ஆவணத்தில் ஒன்றுக்குமேற்பட்ட இடத்தில் சேர்த்து இணைப்பதற்கு Link என்ற வசதி சிறந்ததாகும் இவ்வாறு Link என்ற தொடுப்பு வசதி மூலம் இணைக்கப்பட்ட படங் களை பின்னர் நிரந்தரமாக உள்பொதிந்து(Embedded) வைத்துகொள்ளமுடியும் அதற்காக  மேலே கட்டளை பட்டையில் Edit => Links=>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற் படுத்துக உடன் Edit Link என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.2) அதில் நாம்  உள்பொதிய விரும்பும் படத்தின் கோப்பினை தெரிவுசெய்து Break Link என்ற பொத்தானை சொடுக்குக.உடன் இதனை உறுதி செய்வதற்கான சிறு பெட்டியொன்று தோன்றிடும் அதில் Yesஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்Close என்ற பொத்தானை சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியினை மூடிவிட்டு இந்த ஆவணத்தை சேமித்திடுக.
  ஒப்பன ஆபிஸின் Gallery என்றபகுதியில் ஏற்கனவே தேக்கி வைத்துள்ள படங்களை ஒரு ஆவணத்தில் உள்ளிணைத்திடுவதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Gallery=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் ஏற்கனவே படங்களை தேக்கி வைத்துள்ள Gallery என்றபகுதி திரையில் தோன்றிடும் அதில் தேவையான படத்தை இடம் சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விடுக. அல்லது தேவையான படத்தை  தெரிவுசெய்து மேலே கட்டளை பட்டையில் Insert => Copy=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்த வாறான படம்ஆவணத்தில் (படம்-30.3)இணைந்துவிடும்
 படமானது Paint ,Gimp என்பனபோன்ற படம் வரையும் மென்பொருளின்மூலம திரையில் வரையப்பட்டு தயார்நிலையிலுள்ளது எனில் அந்த படத்தில் தேவையான பகுதியை தெரிவு செய்து கொண்டு Ctrl + C என்றவாறு விசைகளை  அழுத்தி கட்டளைகளை செயற்படுத்துக        பின்னர் ஆவணத்திற்குள் படத்தினை இணைக்கவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து Ctrl + V என்றவாறு விசைகளை  அழுத்தி  கட்டளைகளை செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்தவாறான படம்ஆவணத்தில்(படம்-30.4) இணைந்துவிடும்
 இவ்வாறான படக்கோப்பெல்லாம் என்னிடமில்லை படம்ஒருதாளில் உள்ளது அதனை இந்த ஆவணத்தில் இணைக்கவேண்டும் என விரும்பனாலும் கவலையே படவேண்டாம் வருடி (Scanner) மட்டும் இருந்தால்போதும் அதில் தாளில் இருக்கும் படத்தை வைத்து மேலே கட்டளை பட்டையில் Insert= > Picture => Scan => Select Source=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் வருடி (Scanner) மூலம் தாளில் உள்ள படம் நம்முடைய ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
   இவ்வாறு படத்தை உள்ளிணைத்தபிறகு அதில்குறிப்பிட்ட பகுதிமட்டும் நம்முடைய ஆவணத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்எனஎண்ணிடுவோம் இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Picture என்றஉரையாடல்பெட்டியொன்று(படம்-30.5) திரையிலதோன்றும் அதில் Crop என்றதாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து தேவையானவாறு படத்தை வெட்டிசரிசெய்துகொண்டுசரியாக இருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
  பத்திரிகைகளிலும் புத்தகஙகளிலும் உள்ளவாறு நம்முடைய ஆவணத்திலும்  படத்தை சுற்றி ஆவணத்தின் எழுத்துகளை அமைத்திட விரும்புவோம் அதற்காக முன்பு கூறியவாறு இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படத்தின்மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Format = > Wrap= > என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் Picture என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில தோன்றும்(படம்-30.6) அதில் Wrap என்றதாவி பொத்தானின் திரையை தோன்றசெய்து விருப்பமான வகையையும் ,அமைவையும் தெரிவுசெய்து கொண்டபின் தேவையானவாறு படத்தை சுற்றி உரையானது சரியாக அமர்ந்திருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
 மேலும் கூடுதலான வசதி இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் தேவையெனும்போது
http://extensions.services.openoffice.org/.என்றவலைதளத்திற்கு சென்று தேவையான விரிவாக்க வசதியை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் கட்டளை பட்டையில் Tools > Extension Manager என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் (படம்-30.7)பெட்டியில் தேவையானவிரிவாக்க வசதியை தெரிவுசெய்து Add என்றபொத்தானை சொடுக்குக.
  இவ்வாறு இந்த வலைதளத்திற்கு நாம் நேரடியாக சென்று பதிவிறக்கம்செய்து இணைப் பதற்கு பதிலாக Extension Manager என்ற உரையால் பெட்டியில் உள்ள Get more extesions online … என்ற தொடுப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் இந்த வலைபக்கத்தின் இணைய இணைப்பு கணினியில் தோன்றிடும் பின்னர் தேவையானவற்றை பதிவிறக்கம்செய்து சேர்த்துகொள்க
  மேலும் ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரை பற்றி  முழுவதுமாக ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வதற்கு  OpenOffice.org 3 Writer Guide என்ற இலவச பிடிஎஃப் கோப்பினை http://stores.lulu.com/opendocument. என்ற வலைதளத்திளிருந்தும் தேவையெனில் மாறுதல் செய்துகொள்ள  http://oooauthors.org/en/authors/userguide3/published/ என்ற வலைதளத்திளிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
  தமிழில் தேவையெனில் www.skopenoffice.blogspot.com என்ற தளமுகவரியில் ஓப்பன் ஆபிஸ் அறிமுகம் என்ற  என்னுடைய வலைபூவிற்கு சென்று பர்வையிட்டு அறிந்துகொள்க ஓப்பன்ஆஃபிஸ் கால்க் எனும் விரிதாள் பற்றிய விவரங்களை  அடுத்த இதழிலிருந்து பார்ப்போம்

No comments:

Post a Comment