ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நூற்றுகணக்கான பக்கங்களைகொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிடும்போது இந்த ஆவணத்தை வாசகர்கள் தொடர்ந்து படிக்கதூண்டும் வகையில் இதில் தலைப்புகள் உபதலைப்புகள் உட்தலைப்புகள் என்றுவாறு அமைத்திடுவார்கள்.
இவ்வாறான ஒரு ஆவணத்தின் உள்ள தலைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிட ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள table of content என்ற வசதியானது அனுமதிக் கின்றது
இதற்குமுன் முதல்படி முறையாக இவ்வாவணத்தின் தலைப்புகள் உபதலைப்புகள் உட்தலைப்புகள் ஆகியவை ஒரே சீராண தலைப்பு பாவணையுடன்(Styles) இருக்கின்றதா வென உறுதி செய்து கொள்க.
இவ்வாறான ஒரு ஆவணத்திலுள்ள தலைப்புகளுக்கு இயல்புநிலை பாவணையுடன் வாடிக்கையாளர் விரும்பியவாறும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்
ஒரு உள்ளடக்க அட்டவணையை விரைவாக உருவாக்குதல்
ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள ஒரு ஆவணத்தில் உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிடுவது மிக எளிதான செயலாகும் அதற்காக
1.ஆவணமொன்றை உருவாக்கிடும்போதே பகுதி உட்பகுதி ஆகியவற்றின் தலைப்புகள் Heading 1, Heading 2, and Heading 3. என்றவாறு இருக்கும்படி அமைத்து கொள்க. இவ்வாறு தலைப்புகளை மூன்றிற்கு மேற்பட்டநிலைகளிலும் உருவாக்கமுடியும் ஆயினும் இயல்புநிலையில் தலைப்புகளை மூன்று நிலைகளில் மட்டும் அமையுமாறு வைக்கப்பட்டுள்ளது.(படம்-27-1)
படம் 27-1
2.பின்னர் இவ்வாறான உள்ளடக்க அட்டவணையொன்றை உருவாக்கிட விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
படம் 27-2
3.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல்பெட்டியில் நாம்செய்ய வேண்டியது எதுவுமில்லை அதனால் இதிலுள்ள ok என்ற பொத்தானை மட்டும் சொடுக்குக. உடன் உள்ளடக்க அட்டவணையின் தோற்றம் படம் 27-3ல் உள்ளவாறு அமையும்.
படம் 27-3
இவ்வாறு உருவாக்கப்பட்ட உள்ளடக்க அட்டவணையில் நாம்அவ்வப்போது செய்கின்ற மாறுதல்களுக்ககேற்ப தானாக மாறியமைந்திடுவதற்காக
இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Update Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-27-4
குறிப்பு இவ்வாறு கட்டளையை செயற்படுத்திடும்போது இடம்சுட்டியானது உள்ளடக்க அட்டவணைக்குள் இல்லாவிட்டால் Tools => Options => OpenOffice.org Writer => Formatting Aids=> Enable => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
விரும்பியவாறு உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்
மேலேகூறிய இயல்புநிலைக்கு பதிலாக நாம்விரும்பியவாறும் இந்த உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிஅமைத்துகொள்ளலாம். அதற்காக
1.உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிடவிரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல் பெட்டியில் ஐந்து தாவிகளின் பக்கங்கள் உள்ளன.இவற்றுள் ஏதேனுமொன்றை அல்லது அனைத்தையும் பயன்படுத்தி நாம்விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம். இதில் உள்ள
1.Index/Table என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பண்புக்கூறுகளை(attributes) அமைத்து கொள்ளலாம்
2.Entries and Styles என்றதாவியினுடைய பக்கத்தின் துனையுடன் இந்த அட்டவணையின் உள்ளடக்கங்களை வடிவமைத்து கொள்ளலாம்
3.Styles என்ற பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பாவணையை(style) அமைத்து கொள்ளலாம்
4.Columns page என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையை ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசையில் அமைத்து கொள்ளலாம்
5.Background என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பின்புலவண்ணம் படம் போன்றவற்றை அமைத்து கொள்ளலாம்
இவ்வாறு அமைத்திடும்போது இது எவ்வாறு இருக்கும் என முன்னோட்டமாக பார்த்திட அந்தந்த தாவியினுடைய பக்கத்தின் கீழே இடதுபுறத்தில் preview என்ற தேர்வுசெய் பொத்தானை தெரிவுசெய்து சரிபார்த்துகொள்ளாம். தேவையான அனைத்து மாறுதல்களையும் செய்த பிறகு இதிலுள்ள okஎன்ற பொத்தானை சொடுக்குக.
Entries பக்கத்தினை பயன் படுத்துதல்
Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியிலுள்ள Entries என்ற தாவியின் பக்கமானது ஒரு உள்ளடக்க அட்டவணையின் உள்ளீடுகளை வரையறுத்து வடிவமைத்திட உதவுகின்றது அதனால் குறிப்பிட்ட நிலையின் எண்ணை தெரிவுசெய்து சொடுக்கி இந்த Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியின் Entries என்ற தாவியினுடைய (படம்-27-5)பக்கத்தை கொண்டு இதனுடைய கட்டமைப்பை வடிவமைத்து கொள்ளலாம். இதிலுள்ள(structure and formatingஎன்பதன்கீழ் structure என்பதற்கு அருகில்)
1.E# என்ற பொத்தான் தலைப்பு (chapter)எண் துனைத்தலைப்புஎண் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
2.E என்ற பொத்தான் உள்ளடக்கத்தில் உரை எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
3.T என்ற பொத்தான் உள்ளடக்கத்தில் tab stop எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
4. #என்ற பொத்தான் உள்ளடக்கத்தில் page number.எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
இதன் வெண்மையான புலம் உள்ளடக்க அட்டவணையின் காலி இடத்தை குறிப்பிடுகின்றது
படம்-27-5
மீத்தொடுப்பை(hyperlink)உருவாக்குதல்
இவ்வாறு ஒரு ஆவணத்தில் உள்ளடக்க அட்டவணையொன்றை மட்டும் உருவாக்கினால் போதுமானதன்று குறிப்பிட்ட தலைப்பை தெரிவுசெய்து சொடுக்கினால் தொடர்புடைய ஆவணத்தின் பக்கத்திற்கு நம்மை அழைத்துசெல்லுமாறும் மீத்தொடுப்பை(hyperlink) அமைத்திடவேண்டும் அதற்காக
இந்த Structure என்பதற்கு (படம்-27-6)அருகிலுள்ள காலியான புலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை சொடுக்குக. உடன் LSஎன்ற மீத்தொடுப்பின் (hyperlink) ஆரம்ப பொத்தான் ஒன்று தோன்றும் பின்னர் இதற்கடுத்துள்ள காலிபுலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை மீண்டும் சொடுக்குக. உடன் LEஎன்ற மீத்தொடுப்பின்(hyperlink) முடிவு பொத்தான் ஒன்று தோன்றும் உடன் இந்த நிலையின் எண் இதன் உள்ளடக்கம் ஆகியவை மீத்தொடுப்பு(hyperlink) பெற்று அமைந்துவிடும்
படம்-27-6
உள்ளடக்க அட்டவணைக்குள் மாறுதல் செய்தல்
இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Edit Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
உள்ளடக்க அட்டவணைக்குள் உள்ளீட்டை நீக்கம் செய்தல்
இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தாதனை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
No comments:
Post a Comment