Saturday, November 20, 2010

ஓஃப்பன் ஆபிஸ்-30-ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் வரைபடங்களை இணைத்தலும் விரிவாக்கம் செய்தலும்

  நாம் ஒரு ஆவணத்தை தயார்செய்திடும்போது நம்முடைய கருத்தினை தெளிவாக புரிந்து கொள்ள செய்வதற்காக  இடையிடையே படம், வரைபடம் போன்றவைகளை இணைத்து  அளித்திட விரும்புவோம்
   இவ்வாறான படங்கள் கேமராவின்மூலம் எடுக்கப்பட்டநிழற்படம், படம் வரையும் மென்பொருளால் வரைந்த படம், விரிதாள் எனப்படும் எக்செல்லில் உருவாக்கப்படும் வரைபடம் ஆகிய மூன்று அடிப்படை வகையை சார்ந்ததாகும். இவ்வாறான படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு  GIF, JPEG or JPG, PNG,  BMP ஆகிய ஏதேனும் ஒரு வகையில் சேமிக்கப் பட்ட கோப்புகளாக இருப்பதை எளிதாக பதிவிறக்கம் செய்து இணைத்து கொள்ளலாம்.
  அதற்காக ஒரு ஆவணத்தின்படத்தினை இணைத்திட விரும்பும் இடத்தில் இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Insert => Picture= > From File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் Insert Picture என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.1) அதில் நாம் இணைத்திட விரும்பும் படம் இருக்கும் இடத்தை தேடிபிடித்துதெரிவுசெய்து கொள்க.பின்னர் Preview என்ற தேர்வுசெய் (Check box)   வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க உடன் நாம் தெரிவு செய்த படமானது முன் காட்சியாக இதே உரையாடல்பெட்டியில் தோன்றிடும்
  படம் சரியானதுதான்எனில்Link என்ற தேர்வுசெய் வாய்ப்பினை தெரிவுசெய்து கொள்க அல்லது இந்த Link என்ற தொடுப்பினை  தெரிவுசெய்யாமல் Open என்ற பொத்தானை சொடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்தபடமானது ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
  இங்கு Link என்ற வாய்ப்பினை தெரிவுசெய்திருந்தால் படக்கோப்பு தனியாகவும் ஆவண கோப்பு தனியாகவும் இருக்கும் அதனால் நினைவகத்தில் ஆவணத்தின் அளவு அதிகரிக்காது, இந்த ஆவணத்தை திறக்காமலேயே படத்தை தேவையானவாறு மாற்றி யமைத்து கொள்ளலாம். ஆயினும் இந்த ஆவணத்தினை பிறருக்கு அனுப்பி வைக்கும் போது கூடவே படம் இருக்கும் கோப்பினையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் இந்த Link என்ற வாய்ப்பின் மிகப்பெரிய குறையாகும்..
  ஒரே படத்தைஒரு ஆவணத்தில் ஒன்றுக்குமேற்பட்ட இடத்தில் சேர்த்து இணைப்பதற்கு Link என்ற வசதி சிறந்ததாகும் இவ்வாறு Link என்ற தொடுப்பு வசதி மூலம் இணைக்கப்பட்ட படங் களை பின்னர் நிரந்தரமாக உள்பொதிந்து(Embedded) வைத்துகொள்ளமுடியும் அதற்காக  மேலே கட்டளை பட்டையில் Edit => Links=>  என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற் படுத்துக உடன் Edit Link என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்(படம்-30.2) அதில் நாம்  உள்பொதிய விரும்பும் படத்தின் கோப்பினை தெரிவுசெய்து Break Link என்ற பொத்தானை சொடுக்குக.உடன் இதனை உறுதி செய்வதற்கான சிறு பெட்டியொன்று தோன்றிடும் அதில் Yesஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்னர்Close என்ற பொத்தானை சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியினை மூடிவிட்டு இந்த ஆவணத்தை சேமித்திடுக.
  ஒப்பன ஆபிஸின் Gallery என்றபகுதியில் ஏற்கனவே தேக்கி வைத்துள்ள படங்களை ஒரு ஆவணத்தில் உள்ளிணைத்திடுவதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Gallery=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் ஏற்கனவே படங்களை தேக்கி வைத்துள்ள Gallery என்றபகுதி திரையில் தோன்றிடும் அதில் தேவையான படத்தை இடம் சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விடுக. அல்லது தேவையான படத்தை  தெரிவுசெய்து மேலே கட்டளை பட்டையில் Insert => Copy=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்த வாறான படம்ஆவணத்தில் (படம்-30.3)இணைந்துவிடும்
 படமானது Paint ,Gimp என்பனபோன்ற படம் வரையும் மென்பொருளின்மூலம திரையில் வரையப்பட்டு தயார்நிலையிலுள்ளது எனில் அந்த படத்தில் தேவையான பகுதியை தெரிவு செய்து கொண்டு Ctrl + C என்றவாறு விசைகளை  அழுத்தி கட்டளைகளை செயற்படுத்துக        பின்னர் ஆவணத்திற்குள் படத்தினை இணைக்கவேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து Ctrl + V என்றவாறு விசைகளை  அழுத்தி  கட்டளைகளை செயற்படுத்துக உடன் நாம் தெரிவு செய்தவாறான படம்ஆவணத்தில்(படம்-30.4) இணைந்துவிடும்
 இவ்வாறான படக்கோப்பெல்லாம் என்னிடமில்லை படம்ஒருதாளில் உள்ளது அதனை இந்த ஆவணத்தில் இணைக்கவேண்டும் என விரும்பனாலும் கவலையே படவேண்டாம் வருடி (Scanner) மட்டும் இருந்தால்போதும் அதில் தாளில் இருக்கும் படத்தை வைத்து மேலே கட்டளை பட்டையில் Insert= > Picture => Scan => Select Source=>. என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் வருடி (Scanner) மூலம் தாளில் உள்ள படம் நம்முடைய ஆவணத்தில் உள்ளிணைந்துவிடும்
   இவ்வாறு படத்தை உள்ளிணைத்தபிறகு அதில்குறிப்பிட்ட பகுதிமட்டும் நம்முடைய ஆவணத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்எனஎண்ணிடுவோம் இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Picture என்றஉரையாடல்பெட்டியொன்று(படம்-30.5) திரையிலதோன்றும் அதில் Crop என்றதாவிபொத்தானின் திரையை தோன்றசெய்து தேவையானவாறு படத்தை வெட்டிசரிசெய்துகொண்டுசரியாக இருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
  பத்திரிகைகளிலும் புத்தகஙகளிலும் உள்ளவாறு நம்முடைய ஆவணத்திலும்  படத்தை சுற்றி ஆவணத்தின் எழுத்துகளை அமைத்திட விரும்புவோம் அதற்காக முன்பு கூறியவாறு இந்த படத்தை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படத்தின்மீது இடம் சுட்டியை வைத்துகொண்டு  மேலே கட்டளை பட்டையில் Format = > Wrap= > என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து செயற்படுத்துக உடன் Picture என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில தோன்றும்(படம்-30.6) அதில் Wrap என்றதாவி பொத்தானின் திரையை தோன்றசெய்து விருப்பமான வகையையும் ,அமைவையும் தெரிவுசெய்து கொண்டபின் தேவையானவாறு படத்தை சுற்றி உரையானது சரியாக அமர்ந்திருக்கின்றதுஎனில் Ok என்ற பொத்தானைசொடுக்குக.
 மேலும் கூடுதலான வசதி இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் தேவையெனும்போது
http://extensions.services.openoffice.org/.என்றவலைதளத்திற்கு சென்று தேவையான விரிவாக்க வசதியை கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்க பின்னர் கட்டளை பட்டையில் Tools > Extension Manager என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக உடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் (படம்-30.7)பெட்டியில் தேவையானவிரிவாக்க வசதியை தெரிவுசெய்து Add என்றபொத்தானை சொடுக்குக.
  இவ்வாறு இந்த வலைதளத்திற்கு நாம் நேரடியாக சென்று பதிவிறக்கம்செய்து இணைப் பதற்கு பதிலாக Extension Manager என்ற உரையால் பெட்டியில் உள்ள Get more extesions online … என்ற தொடுப்பினை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் இந்த வலைபக்கத்தின் இணைய இணைப்பு கணினியில் தோன்றிடும் பின்னர் தேவையானவற்றை பதிவிறக்கம்செய்து சேர்த்துகொள்க
  மேலும் ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரை பற்றி  முழுவதுமாக ஆங்கிலத்தில் தெரிந்து கொள்வதற்கு  OpenOffice.org 3 Writer Guide என்ற இலவச பிடிஎஃப் கோப்பினை http://stores.lulu.com/opendocument. என்ற வலைதளத்திளிருந்தும் தேவையெனில் மாறுதல் செய்துகொள்ள  http://oooauthors.org/en/authors/userguide3/published/ என்ற வலைதளத்திளிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்க
  தமிழில் தேவையெனில் www.skopenoffice.blogspot.com என்ற தளமுகவரியில் ஓப்பன் ஆபிஸ் அறிமுகம் என்ற  என்னுடைய வலைபூவிற்கு சென்று பர்வையிட்டு அறிந்துகொள்க ஓப்பன்ஆஃபிஸ் கால்க் எனும் விரிதாள் பற்றிய விவரங்களை  அடுத்த இதழிலிருந்து பார்ப்போம்

ஓப்பன் ஆஃபிஸ்-29.ஓப்பன் ஆஃபிஸின் புதுப்பொலிவும் வாடிக்கையாளர் விரும்பும் கட்டளைபட்டி, கருவிபட்டிகளை உருவாக்குதலும்

   கடந்த பத்தாண்டுகளாக வியாபார பொருளாக உள்ள எம்எஸ்ஆஃபிஸ் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் திறவூற்று மென்பொருளாகவும் கோலோச்சிவரும் ஒப்பன் ஆஃபிஸை வெளியிடும் உரிமையானது சமீபத்தில் சன்மைக்ரோ சிஸ்டத்திடமிருந்து ஆரக்கிள் நிறுவனம்  கையகபடுத்தியதை தொடர்ந்து இதன் லோகோவும் இதனை அடையாளம் காணக்கூடிய குறியீடும்  மாற்றப்பட்டுள்ளது.
 மேலும் இந்த பயன்பாட்டை இயக்கத்துவங்கியவுடன்  தோன்றிடும் திரையின் தோற்றம் கூட படம்-29-1-ல் உள்ளவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது
 அதுமட்டுமல்லாது இதன் தொடக்க மையத்திரையின் தோற்றமும் படம்-29-2-ல் உள்ள வாறு ORACLE  நிறுவனத்தின் பெயருடன்அமையமாறு மாற்றியமைக்கப் பட்டுள்ளது
 இந்த தொடர் ஆரம்பித்தபோது இதன் பதிப்பு 3 என்றிருந்தது பின்னர்மேம்படுத்தபட்டு .பதிப்பு 3.1 என்றும்,பதிப்பு 3.2 என்றும் படிப்படியாக வெளியிடப்பட்டன தற்போது 3.3 இன் பீட்டா பதிப்புகூட வெளியிடபட்டுள்ளது 
   இந்த ஓப்பன் ஆஃபிஸின் முந்தைய பதிப்புகளில் தொடக்கஇயக்கம் மட்டும் சிறிது கூடுதலான கால அவகாசம் எடுத்துகொள்வதை தவிர்த்து பதிப்பு 3.2 -ல் 46%  குறைத்து  தொடக்க இயக்கம் (படம்-29-3) விரைவாக அமையுமாறு செய்யதுள்ளனர்

  மற்ற எந்தவொரு அலுவலக பயன்பாட்டின் கோப்புகளையும் மிக எளிதாக திறந்து பணிபுரியுமாறும் பணிமுடிந்துபின் சேமிக்கும்போது நாம்விரும்பும்  வகை கோப்பாக சேமித்து கொள்வதற்கான வசதியும் இதன் பதிப்பு-3.2-ல் உள்ளது.
  ஒரு ஆவணத்தில் வடிவமைத்தல் அச்சிடுதல் PDFஆக ஏற்றுமதிசெய்தல் திரையில் பிரதிபலிக்க செய்தல் என்பன போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படும் வகையில் இந்த3.2-ல் சிறப்புவாய்ந்த திறந்த வகை எழுத்துருக்கள் (Open Type Fonts)உபயோக படுத்தபட்டுள்ளன.
  ஒற்றையான செல்மட்டுமல்லாது தெரிவுசெய்யப்படும் ஒன்றுக்குமேற்பட்ட செல்களை சுற்றியும் எல்லைக்கோட்டினை(border) எளிதாக அமைக்க இந்த பதிப்பு 3.2 -ல் அனுமதிக்க பட்டுள்ளது.
  ஒன்றிணைக்கப்பட்ட (merged) செல்களுடன் நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல், நீக்குதல்  என்பன போன்ற பணிகளை விரைவாக செய்திட அனுமதிக்குமாறும் இதன் பதிப்பு 3.2-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  தொடர்ச்சியற்ற செல்களின் தரவுகளையும மிக எளிதாக நகலெடுத்தல், வெட்டுதல், ஒட்டுதல் என்பன போன்ற பணிகளை செய்திட அனுமதிக்குமாறு இதில் செய்யப் பட்டுள்ளது.
 அதுமட்டுமல்லாது இதனுடைய வரைபடத்தில்  bubble chart என்ற புதிய வகையை (படம்-29-4)இதன் பதிப்பு 3.2-ல்  அறிமுகபடுத்தியுள்ளனர்...
கட்டளை பட்டியை உருவாக்குதல்
 தொடர்ந்து இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கட்டளை பட்டியை உருவாக்கமுடியும். அதற்காக இதன் மேல்பகுதியிலுள்ள கட்டளை பட்டியில் Tools=> Customize=>என்றவாறு கட்டளையை தெரிவு செய்து செயற்படுத்துக.
  உடன் படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Menu என்ற தாவியின் திரையுடன் தோன்றும் முதலில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்திலுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் தெரிவு செய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிலுள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new menu என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-6தோன்றிடும் அதில் menu name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
 அதன்பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Menu என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
   இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கட்டளைகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கட்டளை யை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கட்டளையை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் புதிய குழு உருவாக்க விரும்பினால் begin a group என்பதையும்  துனை பட்டியல்களை உருவாக் கிட விரும்பினால் Add sub menu என்பதையும் தெரிவுசெய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக.
கருவிபட்டியை உருவாக்குதல்
 இந்த ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நாமே புதியதாக கருவி பட்டியை கூட உருவாக்க முடியும். அதற்காக படம்-29-5-ல் உள்ளவாறு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் Tools என்ற தாவியை சொடுக்குக பின்னர் விரியும் Tools என்ற தாவியின் திரையில் நாம் உருவாக்கபோகும் புதிய அமைப்பு இந்த ஆவணத்தில் மட்டுமா அனைத்தி லுமா என முடிவுசெய்து அதற்கேற்ப save in என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல் மூலம் open ofiice.org writer என்றவாறு தெரிவுசெய்துகொண்டு இந்த உரையாடல் பெட்டியிள்ள New என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
  உடன்  new  என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-29-7)தோன்றிடும் அதில் toolbar name என்பதற்கு புதிய பெயரை உள்ளீடு செய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  பின்னர்  Customizeஎன்ற உரையாடல் (படம்-29-5)பெட்டியின் Too bar என்ற தாவியின் திரையிலுள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 உடன்  Add Commands என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-29-6)திரையில் தோன்றிடும் அதில் தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து Add என்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக.
 இவ்வாறு தேவையான கட்டளைகளை சேர்த்தபின்னர் Closeஎன்ற பொத்தானை சொடுக்கி  இந்த Add Commands என்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
   நாம் உருவாக்கிய அல்லது ஏற்கனவே இருக்கும் கருவிகளை மாறுதல் செய்வதற்கு Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்(படம்-29-5) தேவையான கருவியை தெரிவுசெய்து கொண்டு  modify என்ற பொத்தானை  சொடுக்கினால் கீழிறங்கு பட்டியலொன்று விரியும் அதில்  இந்த கருவியை நீக்க விரும்பினால் Delete என்பதையும் பெயர்மாற்றம் செய்யவிரும்பினால் Rename என்பதையும் தெரிவுசெய்துகொள்க. கருவிபட்டியில் கட்டளைகளானது பணிக்குறி(icon)களாகத்தான் இருக்கும் அதனால் இந்த புதிய கருவிபட்டியில் நம்மால் சேர்க்கப்பட்ட கட்டளையை தெரிவுசெய்துகொண்டு  இதே modify என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலுள்ள change icon என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் விரியும் change icon என்ற உரையாடல் பெட்டியில் தேவையான குறும்படத்தை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
  இவ்வாறு  அனைத்து பணியும் முடிந்தது எனில் Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்ற பொத்தானை சொடுக்குக.
 

ஓப்பன் ஆஃபிஸ்-28-சுட்டுவரிசையையும் ,நூல்விவரத்தொகுதியையும் உருவாக்குதல்

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தில் சுட்டுவரிசை(Index/0 என்பதுஒரு ஆவணத்தில் பயன்படுத்தபட்டுள்ள திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் பட்டியலாகும்
  குறிப்பிட்ட சொல்லானது அவ்வா வணத்தில் எங்கெங்கு வந்துள்ளதுஎன இதன் மூலம் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். பொதுவாக இந்த சுட்டுவரிசையின் பட்டியலானது ஆவணத்தின் இறுதியில் திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் ஆகியவற்றின் அகரமுதலி பட்டியலாக பக்க எண்களுடன் சேர்ந்தே இருக்கும்.
  சுட்டுவரிசையில் திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை சேர்த்தல்
  1.திறவுசொல் அல்லது சொற்தொடரை மேம்படுத்தி தூக்கலாக காண்பிக்க செய்வது அல்லது இடம்சுட்டியை அச்சொல்லின் முன்புறத்தில் நிறுத்துவது ஆகிய ஏதேனு மொன்றின் வாயிலாக சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்ப்பதற்கான உள்ளீட்டை உருவாக்கவேண்டும்.
2.பின்னர் Insert > Indexes and Tables > Entry என்றவாறு கட்டளைகளைதெரிவுசெய்து அல்லது Insert என்ற கருவிபட்டையிலுள்ள Entry என்ற உருவை (படம்-28-1)தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக  செயற்படுத்துக.
                            படம்-28-1
 அதன் பின்னர் தோன்றிடும் Insert Index Entry என்ற (படம்-28-2) உரையாடல் பெட்டியில் உள்ள Entry என்ற உரைபெட்டியில் காண்பிக்கும் திறவுசொல் அல்லது சொற்தொடரை ஏற்றுகொள்க அல்லது மாறுதல் செய்வதாயின் Entry என்ற உரைபெட்டியை சொடுக்கி   வேறு சொல்லை  இந்த பெட்டிக்குள் உள்ளிணைத்து கொள்க
                              படம்-28-2
3.பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசை பட்டியலில் சேர்த்து கொள்க
4. இந்த உரையாடல் பெட்டியை மூடாமல் அப்படியே வைத்துகொண்டுமேலேகூறிய படிமுறைகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களை இந்த சுட்டு வரிசையில் சேர்த்திடலாம் அதற்காக ஒவ்வொரு திறவுசொல் அல்லது சொற்தொடரையும் அவை இவ்வாவணத்தில் இருக்கும் பக்கத்திற்கு  ஒவ்வொரு முறையும் சென்று அவைகளை ஒவ்வொன்றாக தெரிவு செய்து சொடுக்கியபின்னர் இந்த உரையாடல் பெட்டியை சொடுக்குக அதன்பின்னர் Insert என்ற பொத்தானை சொடுக்கி இதனை சுட்டுவரிசையின் பட்டியலில் சேர்த்து கொள்க
5. அனைத்து திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களையும் இந்த சுட்டுவரிசைக்குள் உள்ளீடு செய்து சேர்க்கப்பட்டுவிட்டது எனில் close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக.
 பின்னர்Tools > Options >OpenOffice.org > Appearance > Text Document > Field shadings  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவு சொற்கள் அல்லது சொற்தொடர்கள் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பிக்கும்
சுட்டுவரிசையை விரைவாக உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவிரும்பும் திறவுசொல் அல்லது சொற்தொடரின் முன்புறம் இடம்சுட்டியை வைத்து Insert > Indexes and Tables > Indexes and Tables. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்றஉரையாடல்(படம்-28-3)பெட்டியில் Index/Table என்ற தாவியின் பக்கத்தில் Typeஎன்றஉரைபெட்டியலுள்ள Alphabetical Index.என்பதை  தெரிவுசெய்க. .
3.அதன்பின்னர் options என்பதன் கீழுள்ள Case sensitive.என்ற தேர்வுசெய்பெட்டி தெரிவுசெய்திருப்பதை தெரிவுசெய்யாது விட்டிட்டு ok என்ற பொத்தானை சொடுக்குக

                            படம்-28-3
நடப்பிலுள்ள சுட்டுவரிசைஉள்ளீட்டை மாறுதல் செய்தல்
 நடப்பில் சாம்பல் பின்புலத்தில்  வேறுபடுத்தி காண்பித்து செயலில் இருக்கும் இந்த சுட்டுவரிசையில் சேர்க்கபட்ட திறவுசொற்கள் அல்லது சொற்தொடர்களின் இடதுபுறத்தில் இடம்சுட்டியை வைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக
 உடன் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலில் Index Entry. என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Edit > Index Entry. என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக.
  பின்னர் தோன்றிடும் Edit index Entry என்ற(படம்-28-4) உரையாடல் பெட்டியில் forward arrow அல்லது back arrow ஆகிய பொத்தான்களில் ஒன்றை  சொடுக்குவதன்வாயிலாக சுட்டுவரிசையிலுள்ள அனைத்து சொற்களும் இருக்கும் இடத்திற்கு செல்லமுடியும்
                             படம்-28-4
 அவ்வாறு சென்று தேவையான மாறுதல்களை இதில் செய்து முடித்தபின்னர் ok என்ற பொத்தானை சொடுக்குக
அகரவரிசை தவிர்த்தவேறுவகைசுட்டுவரிசையை உருவாக்குதல்
 சுட்டுவரிசை உருவாக்கவேண்டிய பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert > Indexes and tables > Indexes and tables என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற  உரையாடல் பெட்டியில் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வகையை தெரிவுசெய்து கொள்க.
  அதன் பின்னர் முந்தைய படிமுறைகளில் கூறியவாறு மற்ற அனைத்து செயல்களையும் செய்தபின்  ok என்ற பொத்தானை சொடுக்குக
நூல்தொகுப்பு பட்டியல் (Bibliographies)
  ஒரு ஆவணத்திலுள்ள குறிப்பிட்ட சொல்லானது எந்த புத்தகத்திலிருந்து எடுத்தாள பட்டது என்ற விவரத்தை குறிப்பிட இந்தநூல்தொகுப்பு பட்டியல் பயன்படுகின்றது.இந்த நூல்தொகுப்பு பட்டியலை அதே ஆவணத்திலோ அல்லது தனியாக தரவுதள அட்டவணை கோப்பாகவோ பராமரிக்கமுடியும்.
தரவுதள நூல்தொகுப்பு பட்டியலை (Bibliographies)உருவாக்குதல்
 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Bibliography Database.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்(படம்-28-5) என்ற சாளரத்தின் மேலே கட்டளை பட்டையிலிருந்துTools > Filter என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                                 படம்-28-5
  உடன்தோன்றிடும் Standard Filter என்ற உரையாடல் பெட்டியில் (படம்-28-6) வடிகட்ட விரும்பும் சொற்களை தெரிவு செய்து  ok என்ற பொத்தானை சொடுக்குக
                                 படம்-28-6
   இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Column Arrangement  என்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் column layout Table biblio   என்ற உரையாடல் பெட்டியில்(படம்-28-7) தேவையானவாறு நெடுவரிசையின் அமைப்பை தெரிவுசெய்து அமைத்துகொள்க

                             படம்-28-7
 இதே சாளரத்தின் மேல்பகுதியிலுள்ள Data Source ன்ற பொத்தானை சொடுக்குக.உடன் விரியும் Data Source என்ற உரையாடல் பெட்டியில் (படம்--28-8) தேவையான Data Source தெரிவுசெய்து அமைத்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                              படம்-28-8
 மிகுதியாக இருக்கும் இந்த சாளரத்தின் மையபகுதியே விவரங்களை அட்டவணையாக பிரதிபலிக்கசெய்யும் இடமாகும்
  இந்த சாளரத்தின் கீழ்பகுதியானது அட்டவணையில் தெரிவுசெய்யபட்டஆவணத்தின் முழுவிவர உள்ளடக்கத்தை பிரதிபலிக்கசெய்கின்றது
  இந்த தரவுதளத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தி நேரடியாக ஆவணங்களை சேர்த்திடலாம் அவ்வாறான பணியின்போது புலங்களுக்கிடைய இடம்சுட்டி நகருவதற்கு தாவி(tab) விசையை பயன்படுத்தி கொள்க இறுதியாக கடைசிபுலத்தில் இடம்சுட்டி இருக்கும்போது மீண்டுமொருமுறை தாவி விசையை  அழுத்துக   
 பட்டியலுள்ள சொற்களுடன் ஆவணத்திலுள்ள சொற்களையும் தொடர்புபடுத்தி மேற்கோளாக (citations)காண்பிப்பதற்கு ஒப்பன்ஆஃபிஸ் ரைட்டர் ஆனது 1.நூலாசிரியரின் பெயர் 2. சொற்களுக்கு  வரிசைஎண்ணிடுவது ஆகிய இரண்டு வழிகளை பயன்படுத்தி கொள்கின்றது
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் சொல்லிற்குமுன்புறம் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables > Bibliographic entry.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Bibliographic Entry என்ற உரையாடல் (படம்-28-9)பெட்டியிலுள்ள From bibliography database என்ற வானொலி பெட்டியை தெரிவு செய்துகொண்டு short name என்பதன் கீழ் இருக்கும் கீழிறங்கு
பட்டியல் மூலம் மேற்கோள்பெயரைதெரிவுசெய்து inseert என்ற பொத்தானை சொடுக்குக..
                             படம்-28-9
 இவ்வாறே மேலும் மேற்கோள்களை இந்த உரையாடல்பெட்டியை மூடாமல் தெரிவுசெய்துகொண்டு இறுதியாக close என்றபொத்தானை சொடுக்கி இந்த உரையாடல்பெட்டியை மூடிவிடுக
 இவ்வாறான நூல்தொகுப்பு பட்டியலை உருவாக்க விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்துInsert > Indexes and tables >.என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Insert Indexes and tables என்ற (படம்-28-10)உரையாடல் பெட்டியின் Type என்பதிலுள்ள கீழிறங்கு பட்டியல்மூலம் Bibliography என்பதை தெரிவுசெய்து கொள்க
                                   படம்-28-10
 இதில் கைதவறுதலாக மாறுதலெதுவும்ஆகாமலிருப்பதற்கு Protected against manual changes என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டு அவ்வாறே தேவையானால் Number entries என்ற தேர்வுசெய்பெட்டியையும் தெரிவுசெய்துகொள்க. மீகுதி இயல்பாக தெரிவுசெய்திருப்பதை ஏற்றுகொண்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
 நூல்தொகுப்பு பட்டியலை bibliography இடம்சுட்டிவைத்து தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக. பின்னர் தோன்றிடும் மேல்மீட்பு பட்டியலிலிருந்து Edit Index/Table அல்லது update Index/Table அல்லது  delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Insert Index/Table  என்ற உரையாடல் பெட்டியில்   Updating a table of contents” அல்லது “Deleting a table of contents ஆகிய வசதிகளின் வாயிலாக தேவையான மாறுதல்களை செய்து கொண்டு இந்த பட்டியலை சேமித்துகொள்க
ஓப்பன் ஆஃபிஸின் நூல்தொகுப்பு பட்டியல் வசதியானது சரியாக செயல்படவில்லை யெனில்  கவலையே படவேண்டாம்  இலவசமாக கிடைக்ககூடிய Bibus (http://bibus-biblio.sourceforge.net/wiki/index.php/Main_Pageஅல்லதுr Zotero (http://www.zotero.org/ஆகிய இரண்டில் ஒன்றினை இதற்காக பயன்படுத்திகொள்க.

Friday, November 12, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-27-உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்

 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் நூற்றுகணக்கான பக்கங்களைகொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிடும்போது இந்த ஆவணத்தை வாசகர்கள் தொடர்ந்து படிக்கதூண்டும் வகையில் இதில் தலைப்புகள்  உபதலைப்புகள்  உட்தலைப்புகள் என்றுவாறு அமைத்திடுவார்கள்.
  இவ்வாறான  ஒரு ஆவணத்தின் உள்ள தலைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து  உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிட ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில்  உள்ள table of content என்ற வசதியானது அனுமதிக் கின்றது
  இதற்குமுன்  முதல்படி முறையாக இவ்வாவணத்தின் தலைப்புகள்  உபதலைப்புகள்  உட்தலைப்புகள் ஆகியவை  ஒரே சீராண தலைப்பு பாவணையுடன்(Styles)  இருக்கின்றதா வென உறுதி செய்து கொள்க.
 இவ்வாறான ஒரு ஆவணத்திலுள்ள தலைப்புகளுக்கு இயல்புநிலை  பாவணையுடன் வாடிக்கையாளர் விரும்பியவாறும் மாற்றியமைத்து கொள்ளமுடியும்
ஒரு உள்ளடக்க அட்டவணையை விரைவாக உருவாக்குதல்
 ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள ஒரு ஆவணத்தில்  உள்ளடக்க அட்டவணை யொன்றை உருவாக்கிடுவது மிக எளிதான செயலாகும் அதற்காக
1.ஆவணமொன்றை உருவாக்கிடும்போதே பகுதி உட்பகுதி ஆகியவற்றின் தலைப்புகள் Heading 1, Heading 2, and Heading 3. என்றவாறு இருக்கும்படி அமைத்து கொள்க. இவ்வாறு தலைப்புகளை மூன்றிற்கு மேற்பட்டநிலைகளிலும் உருவாக்கமுடியும் ஆயினும் இயல்புநிலையில் தலைப்புகளை மூன்று நிலைகளில் மட்டும் அமையுமாறு வைக்கப்பட்டுள்ளது.(படம்-27-1)
    படம் 27-1
2.பின்னர் இவ்வாறான உள்ளடக்க அட்டவணையொன்றை உருவாக்கிட விரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டியிலுள்ள  கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
படம் 27-2
3.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல்பெட்டியில் நாம்செய்ய வேண்டியது எதுவுமில்லை அதனால் இதிலுள்ள ok என்ற பொத்தானை மட்டும் சொடுக்குக. உடன் உள்ளடக்க அட்டவணையின் தோற்றம் படம் 27-3ல் உள்ளவாறு அமையும்.
படம் 27-3
 இவ்வாறு உருவாக்கப்பட்ட  உள்ளடக்க அட்டவணையில் நாம்அவ்வப்போது செய்கின்ற மாறுதல்களுக்ககேற்ப தானாக மாறியமைந்திடுவதற்காக
இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Update Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
    படம்-27-4
 குறிப்பு இவ்வாறு கட்டளையை செயற்படுத்திடும்போது இடம்சுட்டியானது உள்ளடக்க அட்டவணைக்குள் இல்லாவிட்டால் Tools => Options => OpenOffice.org Writer => Formatting Aids=>  Enable => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
விரும்பியவாறு உள்ளடக்க அட்டவணையை உருவாக்குதல்
மேலேகூறிய இயல்புநிலைக்கு பதிலாக நாம்விரும்பியவாறும் இந்த உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிஅமைத்துகொள்ளலாம். அதற்காக
1.உள்ளடக்க அட்டவணையை உருவாக்கிடவிரும்பும் இடத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள  கட்டளை களிலிருந்து Insert => Indexes and Tables => Indexes and Tables=> என்றவாறு தெரிவுசெய்து செயற்படுத்துக.
2.பின்னர் தோன்றிடும் Insert Index/Table என்ற (படம் 27-2) உரையாடல் பெட்டியில் ஐந்து தாவிகளின்  பக்கங்கள் உள்ளன.இவற்றுள் ஏதேனுமொன்றை அல்லது அனைத்தையும் பயன்படுத்தி நாம்விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம். இதில் உள்ள
  1.Index/Table என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பண்புக்கூறுகளை(attributes) அமைத்து கொள்ளலாம்
  2.Entries and Styles என்றதாவியினுடைய  பக்கத்தின் துனையுடன் இந்த  அட்டவணையின் உள்ளடக்கங்களை  வடிவமைத்து கொள்ளலாம்
  3.Styles என்ற பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பாவணையை(style)  அமைத்து கொள்ளலாம்
  4.Columns page என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையை ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசையில் அமைத்து கொள்ளலாம்
  5.Background என்ற தாவியினுடைய பக்கத்தின் துனையுடன் உள்ளடக்க அட்டவணையின் பின்புலவண்ணம் படம் போன்றவற்றை அமைத்து கொள்ளலாம்
 இவ்வாறு அமைத்திடும்போது இது எவ்வாறு இருக்கும் என முன்னோட்டமாக பார்த்திட அந்தந்த தாவியினுடைய பக்கத்தின் கீழே இடதுபுறத்தில் preview என்ற தேர்வுசெய் பொத்தானை தெரிவுசெய்து சரிபார்த்துகொள்ளாம். தேவையான அனைத்து மாறுதல்களையும் செய்த பிறகு இதிலுள்ள okஎன்ற பொத்தானை சொடுக்குக.
  Entries பக்கத்தினை பயன் படுத்துதல்
 Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியிலுள்ள Entries என்ற  தாவியின் பக்கமானது ஒரு உள்ளடக்க அட்டவணையின் உள்ளீடுகளை வரையறுத்து வடிவமைத்திட உதவுகின்றது அதனால் குறிப்பிட்ட நிலையின் எண்ணை தெரிவுசெய்து சொடுக்கி இந்த Insert Index/Table என்ற உரையாடல்பெட்டியின் Entries என்ற தாவியினுடைய (படம்-27-5)பக்கத்தை கொண்டு இதனுடைய கட்டமைப்பை வடிவமைத்து கொள்ளலாம். இதிலுள்ள(structure and formatingஎன்பதன்கீழ் structure என்பதற்கு அருகில்)
 1.E# என்ற பொத்தான் தலைப்பு (chapter)எண் துனைத்தலைப்புஎண் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
2.E என்ற பொத்தான் உள்ளடக்கத்தில் உரை எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
3.T என்ற பொத்தான்  உள்ளடக்கத்தில்  tab stop எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
4. #என்ற பொத்தான் உள்ளடக்கத்தில்   page number.எவ்வாறு இருக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
இதன் வெண்மையான புலம் உள்ளடக்க அட்டவணையின் காலி இடத்தை குறிப்பிடுகின்றது
படம்-27-5
மீத்தொடுப்பை(hyperlink)உருவாக்குதல்
இவ்வாறு ஒரு ஆவணத்தில் உள்ளடக்க அட்டவணையொன்றை மட்டும் உருவாக்கினால் போதுமானதன்று குறிப்பிட்ட தலைப்பை தெரிவுசெய்து சொடுக்கினால் தொடர்புடைய ஆவணத்தின் பக்கத்திற்கு நம்மை அழைத்துசெல்லுமாறும் மீத்தொடுப்பை(hyperlink) அமைத்திடவேண்டும் அதற்காக
 இந்த Structure என்பதற்கு (படம்-27-6)அருகிலுள்ள காலியான புலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை சொடுக்குக. உடன் LSஎன்ற மீத்தொடுப்பின் (hyperlink) ஆரம்ப பொத்தான் ஒன்று தோன்றும் பின்னர் இதற்கடுத்துள்ள காலிபுலத்தில் இடம்சுட்டியை வைத்துகொண்டு hyperlink என்ற பொத்தானை மீண்டும்  சொடுக்குக. உடன் LEஎன்ற மீத்தொடுப்பின்(hyperlink) முடிவு பொத்தான் ஒன்று தோன்றும் உடன் இந்த நிலையின் எண் இதன் உள்ளடக்கம் ஆகியவை மீத்தொடுப்பு(hyperlink) பெற்று அமைந்துவிடும்
படம்-27-6
உள்ளடக்க அட்டவணைக்குள் மாறுதல் செய்தல்
 இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Edit Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
உள்ளடக்க அட்டவணைக்குள் உள்ளீட்டை நீக்கம் செய்தல்
 இந்த உள்ளடக்க அட்டவணைக்குள் தேவையான உள்ளீட்டில் இடம்சுட்டியை வைத்து கொண்டுசுட்டியின் வலதுபுற பொத்தாதனை இருமுறை சொடுக்குக உடன் தோன்றிடும் சூழ்நிலை பட்டியலிலிருந்து (படம்-27-4)Delete Index/Table என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.