ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் வடிவுட்டம் செய்யப்படாத ஒரு ஆவணத்தை எவரும் படிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். அதனால் எந்தவொரு ஆவணத்திலும் முக்கியமான பகுதிகளை தடிமனான எழுத்துகளினாலும் ஒருசில சொற்களை உயர்த்தி காட்டப்படுதளினாலும் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள் மாறுதலான எழுத்துகளினாலும் இருந்தால் படிப்பவரின் ஆர்வத்தை தூண்டுவதாக இந்த ஆவணத்தில் அமைந்துள்ள உரை அமையும்.இதற்காக எந்தவொரு ஆவணத்திலும் உள்ள உரைக்கு பல்வேறுவிதமான வடிவுட்டங்களை வழங்கிடமுடியும்.
உரைவடிவுட்டலின் வாய்ப்புகள்(Formating Options )
ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் மூலம் உரையை தடித்த எழுத்துகளாகவோ சாய்ந்த எழுத்துகளாகவோ அடிக்கோட்டுடனோ அல்லது எழுத்துகளின் அளவு வகைகளையோ மாற்றி அமைத்து கொள்ளமுடியம்.மேலும்
கட்டளை பட்டியிலுள்ள வடிவுட்டம் (Format)என்ற கட்டளையை தெரிவு செய்வதன் மூலம் ஏறக்குறைய எல்லாவகையான வடிவுட்ட வாய்ப்பு களையும் தெரிவு செய்ய முடியும்.பொதுவாக பயன்படுத்து வதற்கென்றும், தெரிவு செய்வதற்கென்றும் தனித் தனியாக பொத்தான்கள் இதில் உள்ளன. ஆனால் இந்த பொத்தான்களை பயன்படுத்துவதற்கு முன் இவற்றை எந்த உரைப் பகுதியின் மீது பயன்படுத்த விழைகின்றோமோ அதனை முதலில் தெரிவு செய்து கொள்க. இவ்வாறு தேவையான உரையை தெரிவு செய்த பின்னர் தேவைக்கேற்ப பின்வரும் பொத்தான்களில் ஒன்றை சொடுக்குக.
1.உரையை தடிமனாக மாற்றியமைத்திட B என்ற பொத்தானை சொடுக்குக
2.உரையை சாய்ந்த எழுத்துகளாக மாற்றியமைத்திட I என்ற பொத்தானை சொடுக்குக.
3.உரைக்கு அடிக்கோடிடுவதற்கு U என்ற பொத்தானை சொடுக்குக.
அல்லது Format => Character என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் தோன்றும் Style என்ற உரையாடல் பெட்டியில் தேவையானதை தெரிவுசெய்து மேற்கூறிய பணிகளை செய்யமுடியும்
மேலும் ஒருகுறிப்பிட்ட சொல் அல்லது உரைப்பகுதி ஏற்கனவெ தடித்த,சாய்ந்த அல்லது அடிக்கேடிட்ட எழுத்துகளில் இருந்தால் அவ்வுரையை மீண்டும் தெரிவுசெய்து தேவையான பொத்தானை சொடுக்குவதன் மூலம் அந்த உரைப்பண்பினை மிகஎளிதாக நீக்கம் செய்யமுடியும்.
மேற்கண்ட உரைப்பண்புகளை Ctrl + B, Ctrl + I, Ctrl + U ஆகிய சாவிச் சேர்மாணங்களை செயற்படுத்துவதன் வாயிலாக தடித்த,சாய்ந்த அல்லது அடிக்கோடிட்ட எழுத்து பண்புகளுடன் மாற்றியமைத்திடலாம்.
எழுத்துகளின் (Fonts )வகையை மாற்றுதல்
ஒவ்வொரு எழுத்து வகையிலும் உள்ள எழுத்துகளும்,எண்களும் பிறிதொரு எழுத்து வகையிலிருந்தும் உருவ அமைப்பிலிருந்தும் மாறுபட்டிருக்கும்.அதனால் இவைகளிலிருந்து சரியான எழுத்து வகையைத் தேர்ந்தெடுப்பதே சொல்தொகுப்பு பணியின் ஒருசவாலான செயலாகும்.. முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டிய உரையை தெரிவு செய்த பின்னர; கணினியில் இருக்கும் எந்தவொரு எழுத்து வகையையும் அதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.இதற்கான எழுத்துவகை மென்பொருட்களை சந்தையிலிருந்து விலைக்கு வாங்கியும் விருப்பமான எழுத்துவகையை கணினியில் சேர்த்து கொள்ளலாம்.
எழுத்துவகையை மாற்றிடும் முறை
வடிவமைப்பு கருவிப்பட்டையில் (Formatting Tool bar)மூன்றாவதாகவுள்ள Fonts Name என்பதற்கு பக்கத்தில் உள்ள கீழ்நேக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் கீழிறங்கு பட்டியலின் காணும் எழுத்து வகைகளின் பெயர்களிலிருந்து தேவையான ஒன்றை தெரிவு செய்து கொள்க.
எழுத்துவகையின் அளவு
எழுத்தின் வகையை போல அதன்அளவும் மிகமுக்கியமான தாகும். ஒரு சட்ட ஆவணத்தில் பயன்படுத்தப்படும் எழுத்தின் அளவும் ஒரு விளம்பர ஆவணத்தில் பயன்படுத்தப்படும் எழுத்தின் அளவும் வெவ்வேறானதாக இருக்கும். அதேபோன்று முக்கிய உரைப்பகுதியில் உள்ள எழுத்தின் அளவும் அந்த உரைப்பகுதியின் மற்ற இடங்களில் உள்ள எழுத்தின் அளவும் வெவ்வேறானதாக இருக்கும். எழுத்து வகையின் அளவை புள்ளிகளில் அளக்கின்றோம். ஒரு அங்குலத்திற்கு 72 புள்ளிகள் கொண்ட ஒரு எழுத்தின் அளவு சற்றேறக்குறைய 12 X 1/72 =1/6 அங்குலமாகும்.
எழுத்துவகையின் அளவை மாற்றும் முறை
கருவிபட்டையின்; எழுத்துவகை தெரிவுசெய்பெட்டிக்கு அருகில் உள்ள கீழ் நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் கீழிறங்கு பட்டியலின் காணும் எழுத்தின் அளவுகளிலிருந்து தேவையான ஒன்றை தேர்வுசெய்துகொள்க.
எழுத்துவகையின் வண்ணத்தை மாற்றுதல்
ஒரு ஆவணத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உரைக்கு வெவ்வேறு வண்ணங்களை சேர்க்கமுடியும். தற்காலத்தில் வண்ண அச்சுப்பொறிகள் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. வண்ண அச்சுப்பொறிகளின் துனைகொண்டு ஆவணங்களை நாம்விரும்பியவாறு பல்வேறு வண்ணங்களில் அச்சிட்டுகொள்ளமுடியும். வண்ணஅச்சுப்பொறி இல்லாவிட்டால் கறுப்பு வெள்ளையில்தான் அச்சிடப்படும்.
எழுத்துவகையின் வண்ணத்தை மாற்றும்முறை
ஒரு ஆவணத்தில் உள்ள உரைக்கு நாம்விரும்பியவாறு வெவ்வெறு வண்ணத்தை சேர்ப்பதற்கு Aஎன்ற பணிக்குறியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் வண்ணத்தட்டிலிருந்து தேவையான வண்ணத்தை சேர்க்கலாம்.
உரையை உயர்த்தி காட்டுதல்
மிகமுக்கியமான உரைப்பகுதியை படிப்பவரின் கவணத்திற்க உடனடியாக கொண்டுவருவதற்காக அதனை உயர்த்தி காட்டுவது வழக்கமாகும் பொதுவாக ஒருஆவணத்தில் உள்ள உரையை படிக்கும்பொது படிப்பவர் ஒருமஞ்சள் வண்ண எழுதுகோளின் துனைகொண்டு அடிக்கோடிடுவது வழக்கமாகும். அதைப்போன்றெ ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் மூலம் உரையை பல்வேறு வண்ணங்களில் உயர்த்தி காட்டிடமுடியும்.
உரையை உயர்த்தி காட்டிடும்முறை
ஒருஆவணத்தின் உள்ள தேர்வுசெய்யப்பட்ட உரையை உயர்த்தி காட்டிடு வதற்கு Aஎன்ற இதனுடைய பணிக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் விரியும் வண்ணத்தட்டிலிருந்து தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து சொடுக்குக. இவ்வாறு உயர்த்தி காட்டப்பட்ட உரையை சாதாரண உரையாக மாற்றுவதற்கு தேவையான உரையை தெரிவுசெய்து கொள்க. பின்னர்Aஎன்ற இதனுடைய பணிக்குறியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் திரையில் விரியும் வண்ணத்தட்டிலிருந்து No Fill என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
மேலேகூறிய அனைத்து வடிவுட்டுதலையும் ஒன்றாக செய்வதற்கு மேல்பகுதியில் கட்டளைபட்டியிலுள்ள Format என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக..பின்னர் விரியும் Format என்ற பட்டியலிலிருந்து Character என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.. உடன் Character என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் .இந்த உரையாடல் பெட்டியின் மூலம் எமுத்துவகையின் பல்வேறு மாறுதல்களை ஒன்றாக செய்வது மடடுமல்லாமல் அந்த மாறுதல்களின் முன்னொட்டத்தையும் மாற்றியமைப்பதற்கு முன்பாக திரையில் கண்டு விரும்பியவாறு செயற்படுத்திடமுடியும்.
படம் -11-1
பத்தி இசைவு(Paragraph Alignment)
தனித்தனி சொற்களை வடிவுட்டுதல் செய்தலோடு ஒருகுழுவான சொற்கள் இருக்கும் பத்திகளையும் வடிவுட்டுதல் செய்யலாம் .அதாவது பத்தியின் இசைவை மாற்றியமைக்கலாம்.ஓரு பத்திக்கு மட்டும் தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பலபத்திகளையும் சேர்த்து ஒன்றாகவோ வடிவுட்டலை செய்யலாம்
ஒவ்வொருமுறையும் உள்ளீட்டு பொத்தானை அழுத்திடும்பொழுதும் அந்த பத்திக்கான விருப்பங்கள்(options) அடுத்த பத்திக்கு அனுப்படுகின்றன. ஓருபத்தியின் அடையாளத்தை(Paragraph Marker) நீக்கம் செய்துவிட்டால் அதற்குபின் உள்ள பத்தியின் வடிவுட்டத்தை அது எடுத்தகொள்ளும் .ஒரு வரியை தட்டச்சு செய்த பின்னர் அதனை மையப்படுத்தி உள்ளீட்டு பொத்தானை அழுத்தினால் இதை இதற்கடுத்துள்ள வரியும் எடுத்து கொண்டு மையப்படுத்துகின்றது.
இரட்டைவரி இடைவெளியமைப்பில் தட்டச்சு செய்த ஒருபத்திக்கு அடுத்து ஒரு ஒற்றை வரி இடைவெளியுள்ள அமைப்பில் தட்டச்சுசெய்த பத்தி இருந்திடும் நிலையில் முதல்பத்தியின் பத்தி அடையாளத்தை நீக்கம் செய்துவிட்டால் இரண்டாவது பத்தியும் இரட்டைவரி இடைவெளி யமைப்புடையதாக மாறிவிடும்.
பொதுவாக ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில் தட்டச்சுசெய்திடும்பொழுது எல்லா உரைகளும் வலது பக்க இசைவில்லாமல்(Right Alignment) இடதுபக்க இசைவில் (Left Alignment) மட்டுமே அமையும்.தேவையானால் வலதுபக்க இசைவுடன், மையப் படுத்தப்பட்டஇசைவுடன் அல்லது நேர்த்தி செய்யப்பட்ட (Justified)இசைவுடன் அமைத்து கொள்ளலாம்.
ஓரு ஆவணத்தில் உள்ள உரையை கருவிபட்டைமூலம் இசைவு செய்வதற்கு பின்வரும் வழிகள் உதவுகின்றன.
1.இசைவுமாற்றம் செய்யப்படவேண்டிய பத்தியின் உட்புறத்தில் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக. ஓன்றுக்குமேற்பட்ட பத்தியாக இருந்தால் அனைத்தையும் தெரிவுசெய்து சொடுக்குக.
2.பின்னர் அதனதன் பணிக்குறியை அந்தந்த இசைவிற்கேற்ப தெரிவுசெய்து சொடுக்குக.
பின்வரும் விசைப்பலகையி;ன குறுக்கு வழிகளையும் பயன்படுத்தியும் அதாவது சாவிச்சேர்மாணங்களை செயற்படுத்துவதன் வாயிலாகவும் இதனை பெறலாம்.
மைய இசைவிற்கு (Central Alignment) Ctrl +E
இடதுபுற இசைவிற்கு (Left Alignment) Ctrl + L
வலதுபுற இசைவிற்கு (Right Alignment) Ctrl + R
நேர்த்தி இசைவிற்கு (Justified) Ctrl + J
நாம் பணிபுரியும் ஆவணத்துடன் வேறெதேனும் ஆவணத்தை ஒப்பீடு செய்வதற்கு Edit => Compare Documents => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் படம்-11-2 இல் உள்ளவாறு Insert என்ற உரையாடல் பெட்டியொன்று ஆவணங்களின் பட்டியலுடன் தோன்றும்.அவற்றுள் ஒப்பீடு செய்திடவிரும்பும் ஆவணத்தை தெரிவுசெய்து Insert என்ற பொத்தானை சொடுக்குக..
படம்-11-2
உடன் படம்-11-3 இல் உள்ளவாறு Accept or Reject changes என்ற உரையாடல் பெட்டியொன்று தெரிவுசெய்யப்பட்ட உரைகளில் எந்தெந்த திருத்தங்களை உள்ளிணைக்க விரும்புகிறோம் என்கின்ற பட்டியலுடன் தோன்றும். அவற்றுள் குறிப்பிட்டதை மட்டும் ஏற்றுக்கொள்வதாயின் Accept என்ற பொத்தனையும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாயின் Accept Allஎன்ற பொத்தனையும் திருத்தங்களுள் குறிப்பிட்டதை மட்டும் மறுப்பதாயின் Reject என்ற பொத்தனையும் அனைத்தையும் மறுப்பதாயின் Reject Allஎன்ற பொத்தனையும் நம்முடைய விருப்பத்திற்கேற்ப சொடுக்கி திருத்தங்களை உள்ளினைத்துகொள்க. அல்லது தள்ளிவிடுக.
படம்-11-3
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment