படம் 5-1
பொதுவாக மற்ற அலுவலக பயண்பாட்டு கோப்புகளை நேரடியாக ஓப்பன் ஆஃபிஸில் திறப்பதற்கு பதிலாக முதலில அவைகளை ஓப்பன் ஆஃபிஸ் கோப்பாக உருமாற்றம் செய்து பயன்படுத்திகொள்வது நல்லது.. அதற்காக File => Wizards=> என்பது போன்று கடந்த தொடரில் குறிப்பிட்டுள்ளவாறு கட்டளைகளைச் செயற்படுத்துக. உடன் விரியும் சிறுபட்டியில் உள்ள Document converter என்ற கட்டளையை தெரிவுசெய்து செடுக்குக.
உடன் படம் 5-1 இல் உள்ளவாறு தோன்றிடும் Document converter என்ற வழிகாட்டியில் உருமாற்றம் செய்யப்படவேண்டிய வகைக்காகMicrosoft office என்பதையும் (இது ஒரு வேர்டு ஆவணம் என்பதால்) இதற்கு கீழ் உள்ள Word documentsஎன்பதையும் தெரிவு செய்து next என்ற பொத்தானை தெரிவுசெய்து செடுக்குக.
பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின் அடுத்த திரையில் Import from என்பதற்கருகில் உள்ள முப்புள்ளியை (Ellipse)தெரிவுசெய்து செடுக்குக.உடன் நாம் பதிவிறக்கம்செய்ய விரும்பும் கோப்புகளின்இருப்பிடத்தை சுட்டிகாட்டிட உதவிடுவதற்காக தோன்றிடும் திரையின் மூலம் அதனை தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு உருமாற்றம் செய்யப்பட்ட கோப்பினை எந்த இடத்தில் சேமித்துவைத்திடவிரும்புகின்றோம் என்பதை தெரிவு செய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து செடுக்குக.
அதன்பின்னர் Do you want to create now? என்ற கேள்விக்குறியுடன் படம் 5-2 இல் உள்ளவாறு தோன்றிடும் சிறுபெட்டியில் புதியதாக மாதிரி படிமங்கள் (templates) தேவையெனில்Yesஎன்பதையும் தேவையில்லை யெனில் No என்பதையும் தெரிவுசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவு செய்து செடுக்குக. பின்னர் தோன்றிடும் வழிகாட்டியின் அடுத்த திரையில் Convertஎன்ற பொத்தானை தெரிவுசெய்து செடுக்குக. உடன் நாம் தெரிவுசெய்த கோப்பு ஓப்பன் ஆஃபிஸ் ஆவணமாக உருமாறிவிடும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் சொந்தமாக இணையபக்கம் ஒன்றை உருவாக்கி பராமரித்திட விரும்புவோம் அதற்காக முதலில்File =>Wizards=> என்பது போன்று கட்டளைகளை செயற்படுத்துக. உடன் விரியும் சிறுபட்டியில் உள்ள Web page என்ற கட்டளையை தெரிவுசெய்து செடுக்குக.உடன் படம் 5-3 இல் உள்ளவாறு தோன்றிடும் Web wizard என்ற திரையின் இடதுபுறபலகத்தில் Steps என்பதன் கீழ் 1.Introduction ,2.Documents, 3.Main layout , 4. Layout details ,5.Style ,6.Web Site Information ,7.Preview ஆகிய ஏழு படிமுறைகள் உள்ளன.இயல்பு நிலையில் 1.Introduction என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வாறே இந்த திரையில் choose settings for the web wizardஎன்பதன்கீழ் default என்பது தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேவையானால் இதிலுள்ள கீழீறங்கு பட்டியை திறந்து நாம் விரும்புவதை தெரிவு செய்து கொள்ளலாம்.
பின்னர் 2.Documents என்பதை தெரிவுசெய்க.உடன் தோன்றிடும் திரையில்
Add என்ற பொத்தானை சொடுக்குவதால் படம் 5-4இல் உள்ளவாறு தோன்றிடும் திரையில்வலைபூக்களில் ஓடும் எழுத்துருவை எவ்வாறு உருவாக்குவது என்பன போன்ற நீங்கள் இணையத்தில் வெளியிடவிரும்பும் ஒரு ஆவணத்தை தெரிவுசெய்து கொள்க.பின்னர் இந்த இணையபக்கத்தின் தலைப்பு , உருவாக்கு பவரின் பெயர் , இணையபக்கத்தின் சாராம்சம் என்பன போன்ற விவரங்களை உள்ளீடு செய்க.அதன்பின்னர் இந்த இணையபக்கத்தின் அளவு ,அமைப்பு, தோற்றம் , பாவணை போன்றவற்றை 3.Main layout , 4. Layout details ,5.Style , போன்றவைகளின் உதவியுடன் அமைத்துகொள்க.
உடன் Your web site was created successfully into E:\skwebpage என்றவாறு சிறுசெய்திபெட்டியொன்றுதிரையில்தோன்றும் அதில் ok என்ற பொத்தானை அழுத்திஇந்த செயலை முடிவுக்கு கொண்டுவருக..
தேவையானால் web wizard இல் உள்ள previewஎன்ற பொத்தானை அழுத்தி உங்களுடைய இணையபக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என முன் காட்சியாக காண்க..
இவ்வாற HTML குறிமுறைகளை எவ்வாறு எழுதுவது என்பதை பற்றி ஒன்றும் தெரியாதவர்களகூட ஓப்பன் ஆஃபிஸின் உதவியால் ஒரு இணையபக்க்த்தை உருவாக்கிடமுடியும்.
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment