மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer)மூலமாக கூட ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை திறக்கமுடியும்.அதற்காக நம்முடைய கணினியில் ஓப்பன் ஆஃபிஸினை நிறுவுகையின்போதே ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பதையும் சேர்த்து நிறுவிடவேண்டும் இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை எவ்வாறு நம்முடைய கணினியில் நிறுவுவது என இப்போது காண்போம்.
1.முதலில் ஓப்பன்ஆஃபிஸ் பயன்பாடு ஏதேனும் நம்முடைய கணினியில் இயங்கிகொண்டிருந்தால் அதன்இயக்கத்தை நிறுத்துக.
படம்-19-1
2.அதன்பின்னர் .நாம் வழக்கமாக பயன்பாடுகளை இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar) உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.( படம்-19-1)
3.பின்னர் விரியும் Control panel திரையின் கட்டளைபட்டியலில் Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும் தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில் Optional Components என்பதை திறந்து கொள்க. அதில் ActiveX Controlஎன்பது உள்ளதாவென உறுதிசெய்துகொள்க. ( படம்-19-2)
படம்-19-2
7.பின்னர் இதிலுள்ள துனை பட்டியலை திறந்து கொண்டு Nextஎன்ற பொத்தானையும் பின்னர் Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
இவ்வாறு உங்களுடைய கணினியில் இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை நிறுவியபின்னர் மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer) வாயிலாக உங்களுடைய கணினியிலுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை தேடிபிடித்து திறக்கவும் தேவையானால் இதேநிலையில் சேமித்து கொள்ளவும் முடியும்.
இவ்வாறு மைக்ரோசாப்ட் இணைய உலாவிக்குள் (Ms Internet Explorer) திறக்கபட்டுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை சூழ்நிலை பட்டியை(Context menu) சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக செயலிற்கு கொண்டுவந்து அதிலிருக்கும் Edit என்பதை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் தேவையான மாறுதல்களை செய்துகொள்ளலாம்( படம்-19-3).
படம்-19-3
தற்போது பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலாவிடுவதற்காக கணினிக்கு பதிலாக கைபேசியையே PocketPc ஆக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கைபேசி யான PocketPc யிலும் ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை நம்மால் திறந்து பயன் படுத்திட முடியும் இதற்காக பின்வரும் செயல்களை பின்பற்றுக.
முதலில் கைபேசியின் கோப்பு வடிவமைப்பிற்கு (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை உருமாற்றம் செய்திடவேன்டும்.
தற்போது நடப்பில் கணினிக்கும் கைபேசிக்கும் இடையே AportsDoc என்பது PalmOSஎன்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும் Pocket Excel ,PocketWord ஆகியவை PocketPc என்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும் வடிகட்டியாக (Filter) செயல்படுத்தப்படுகின்றன . இந்தPocket Pcயுடன் நம்முடைய கோப்புகள் ஒத்திசைவு செய்வதற்காக முதலில் Mobile device Filters ஐ உங்களுடைய கணினிக்குள் நிறுவிடுக இதனுடன் இதற்கான DLL கோப்பையும் சேர்த்து நிறுவிடுக. மிகமுக்கியமாக Java Runtime Environment என்பது உங்களுடைய கணினிக்குள் நிறுவப்பட்டு உள்ளதாவென உறுதிசெய்துகொள்க
Mobile device filters ஐ உங்களுடைய கணினியில் நிறுவிடுவதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
1. நீங்கள்விண்டோஸ்ஓஎஸ் பயன்படுத்துபவராயிருந்தால் உங்களுடைய கணினியிலுள்ள ActiveSync உடன் PocketPc Device என்பவைகளில் ஏதேனும் இணைக்கப்படிருந்தால் முதலில் அதனுடைய தொடர்பை துண்டித்துவிடுக. பின்னர் அவ்வாறே ஓப்பன்ஆஃபிஸ்பயன்பாடு ஏதேனும் இயங்கி கொண்டிருந்தாலும் அதன் இயக்கத்தையும் நிறுத்துக.
2அதன்பின்னர் .நாம் வழக்கமாக பயன்பாடுகளை இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar) உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக(படம்-19-1).
3.பின்னர் விரியும் Control panel இன் கட்டளைபட்டியலில் Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும் தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து Next என்ற பொத்தானை சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில் Optional Components என்பதை திறந்துகொள்க. அதில் Mobile Device Filters என்பதை தெரிவுசெய்து (படம்-19-4) Nextஎன்ற பொத்தானையும் பின்னர் Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
படம்-19-4
இதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Open என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Open என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு(படம்-19-5) Open என்ற பொத்தான சொடுக்குக
ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Save as என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Save as என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு Save என்ற பொத்தானை சொடுக்குக.
இதுபோன்றே கைபேசியின் கோப்பு வடிவமைப்பினை (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸ் கோப்பு வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்து பயன்படுத்திகொள்ளலாம். இதற்காக
1. Active Sync என்ற சாளரத்தை முதலில் திறந்துகொள்க. அதில் options என்ற கட்டளையை தெரிவுசெய்துoptions என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்க.
2.பின்னர் இதிலுள்ள Rulesஎன்ற தாவியை தெரிவுசெய்துசொடுக்குக .அதன் பின்னர் விரியும் Rulesஎன்ற தாவியின் திரையில் Conversion settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3.பின்னர் Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில் Pocket Word Document -Pocket Pc என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Open Office Writerஎன்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறே எக்செல் பணிப்புத்தகத்தையும் உருமாற்றம் செய்திட மேலேகூறப்பட்ட படிமுறை 1,2 ஐ அப்படியே பின்பற்றுக படிமுறை 3,4 ஐ பின்வருமாறு பின்பற்றுக.
3.பின்னர் இதிலுள்ள Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில் Pocket Excel Workbook - Pocket Pc என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Openoffice.org Calc என்பதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதன்பின்னர் கைபேசியின் வடிவமைப்பு கோப்பு களை (PocketPc format file) ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளாகவோ அல்லது ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளை கைபேசியின் வடிவமைப்பு கோப்புகளாகவோ (Pocket Pc format file) நகலெடுத்தல் திறத்தல் படித்தல் மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை Active Sync அல்லது Window Internet Explorer ஆகிய இரண்டிலொன்றை பயன்படுத்தி செயல்படுத்தி கொள்ளலாம்.
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment