அட்டவணை-16.1
வ.எண் | விவரம் | ரூபாய் |
1.1 | அடிப்படை சம்பளம் | 8000 |
1.2 | அகவிலைப்படி | 4500 |
1.3 | மருத்துவபடி | 250 |
1.4 | வீட்டுவாடகைபடி | 500 |
மொத்தம் | 13250 |
படம்-16.1
ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மூலம் ஒரு அட்டவணையை உருவாக்கிடும் போது கூடுதல் ,சராசரி என்பனபோன்ற கணக்கீடுகளை விரிதாள் போன்று செயற்படுத்திடலாம் அட்டவணை-16.1 இல் உள்ளவாறு ஊழியர் ஒருவரின் சம்பளவிவரத்தை ஒரு அட்டவணையாக உருவாக்குவதாக கொள்வோம். இந்த அட்டவணையில் மொத்த சம்பளம் எவ்வளவு என காண்பதற்கு c6என்ற நுண்ணறையில் இடம்சுட்டியை வைத்து கொண்டு Table=>Formula என்றவாறு கட்டளையை செயற்படுத்துக.அல்லது F2 என்ற விசையை அழுத்துக. அல்லது நாம் இந்த அட்டவணைய உருவாக்கிடும் போதே மேல்பகுதியில் தோன்றி மிதந்து கொண்டிருக்கும் Tableஎன்ற பட்டையில் ∑ என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் படம்-16.1 இல் உள்ளவாறு(c6 =sum(<c2>) என்றவாறு வாய்ப்பாடு பட்டியொன்று தோன்றும் அதில் மொத்தம் காணவேண்டிய நுண்ணறைகளின் முகவரிகளை தெரிவுசெய்து உள்ளீட்டு விசையை தட்டுக.உடன் மொத்ததொகை அட்டவணையின் c6 இல் அமர்ந்துவிடும்.தேவையானால் மற்ற கணக்கீடுகளையும் இவ்வாறே உள்ளிணைத்து கொள்ளலாம்.
பக்கவடிவமைப்பு
ஓரத்தை (Margin)மாற்றுதல்
ஒரு பக்கத்தில் அச்சிடப்பட்ட பகுதிக்கும் விளிம்பிற்கும் இடையில் உள்ள இடத்திற்கு ஓரம் (Margin) என்று பெயர் இந்த ஓரம் அதிகமாக இருந்தால் காலியான வெள்ளை பகுதி அதிகமாகவும் குறைவாக இருந்தால் காலியான வெள்ளை பகுதி குறைவாகவும் இருக்கும்.
ஓப்பன் ஆஃபிஸ்ரைட்டரில் ஒரு ஆவணத்தின் ஓரமானது மேல்கீழ் பகுதிகளில் இயல்புநிலையில் 1 அங்குலமும் வலது,இடதுபுறபகுதிகளில் 1.25 அங்கலமும் இருக்கும் பெரும்பாலான ஆவணங்களுக்கு இது போதுமானதாக இருக்கும். வேண்டுமானால் தேவைப்படும்போது இந்த நான்கு அளவுகளையும் மாற்றியமைத்து கொள்ளலாம்
பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி ஒரு ஆவணத்தில் உள்ள ஓரத்தின் அளவை மாற்றியமைக்கலாம்.
1.பக்கஅமைப்பு உரையாடல் பெட்டியை பயன்படுத்துதல்.
ஓவ்வொரு ஓரத்திற்கும் சரியான அளவு தெரியும்போது இந்த பக்கஅமைப்பு உரையாடல் பெட்டியை பயன்படுத்தலாம்
Format=>Page என்றவாறு கட்டளையை தெரிவுசெய்க. உடன் பக்கஅமைப்பு உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்
அதில் Page என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் படம்-16.2 உள்ளவாறு தோன்றும் Page style by default என்ற திரையில் Margins என்பதன் கீழ்உள்ள இடது(Left) வலது(Right) மேல்(Top) கீழ்(Bottom) ஆகியவற்றின் ஓர அளவுகளை அதில் உள்ள சுழல் பெட்டியை பயன்படுத்தி புதிய அளவை மாற்றியமைத்திடுக. அல்லது தட்டச்சு செய்திடுக.பின்னர Ok என்ற பொத்தானை சொடுக்குக.
அதன்பின்னர; File=>Page Preview என்றவாற கட்டளையை பயன்படுத்தி நாம் செய்த மாற்றங்களை திரையில் காணலாம்.இந்த அச்சுக்குமுன்காட்சி வசதியானது மாற்றம் செய்யபட்ட பிறகு இந்த ஆவணத்தை அச்சிட்டால் எவ்வாறு இருக்கும் என்பதை அறியவும்,செய்த மாற்றங்கள் இந்த ஆவணத்தின் வடிவில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என அறியவும் உதவுகின்றது.
படம்-16.2
வரைகோலின்(Ruler)துனைகொண்டு ஓரங்களை மாற்றியமைத்தல்
ஆவணத்தினுடைய வடிவின் ஓரஅளவுகள் நமக்கு சரியாக தெரியவில்லை யெனில் கட்டளை பட்டையில் உள்ள view=>Ruler என்றவாறு கட்டளையை செயற்படுத்தி ஓரத்தின் அளவுகளை மாற்றியமைத்து கொள்ளலாம் அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
View => Ruler என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்துக. உடன் ஆவணத்தின இடதுபுறத்திலும் மேல்பகுதியிலும் ஓரத்தில் வரைகோல்(ruler) தோன்றும்
இதனுடைய சாம்பல் நிறபகுதி ஓரஅளவை குறிக்கின்றது.இடம் சுட்டியை இந்த சாம்பல்நிறபகுதிக்கும் வெள்ளை நிறபகுதிக்கும் இடையில் எடுத்து செல்க.
இடம்சுட்டி சரியான இடத்தில் இருந்தால் உடன் இருதலையுள்ள அம்புக்குறியாக இடம் சுட்டியின் அமைப்புமாறிவிடும்
இப்பொது இந்த ஓரவழிகாட்டியை தேவையான அளவிற்கு நகர்த்தி கொள்க.
பின்னர் View => Ruler என்றவாறு மீண்டும்கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கினால் இயல்பான காட்சிக்கு ஆவணம் மாறிவிடும்
பக்கத்தின அமைவுகள்(Page Orientation)
ஒருபக்கத்தின் நீளம் அகலத்தைவிட அதிகமாக இருந்தால் நீள்மை உருவம் (Portrait) அமைவு எனப்படும்.அதேசமயம் அகலம் நீளத்தைவிட அதிகமாக இருந்தால் அகண்மை உருவம் (Landscape ) அமைவு எனப்படும்.
Format=> Page என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் பக்க அமைப்பு உரையாடல் பெட்டியொன்று திரையில்படம்-16.2 இல் உள்ளவாறு தோன்றும்.
அதில் Pageஎன்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் திரையில் தேவையானவாறு நம்முடைய விருப்பங்களை தேர்வுசெய்து கொள்ளலாம்.
தாளின் அளவை மாற்றியமைப்பதற்கு page format என்பதன் கீழுள்ள formatஎன்ற கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான அளவை தேர்ந்தெடுக்கலாம். அல்லது சுழல் அம்புக்குறியை பயன்படுத்தி தேவையான அளவிற்கு உயரம் மற்றும் அகலத்தை மாற்றியமைக்கலாம்.
Orientation என்ற பகுதியில் நீள்மை உருவம் (Portrait) அல்லது அகண்மை உருவம் (Landscape ) என்றவாறு நாம்விரும்பியவண்ணம் தோற்றத்தை மாற்றியமைத்து கொள்ளலாம்பின்னர் இறுதியாக ok என்ற பொத்தானை சொடுக்குக.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை உருவாக்குதல்
ஒரு ஆவணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்கள் இருந்தால் ஒவ்வொரு பக்கத்திற்கும் பக்கஎண்களை குறிப்பிடவேண்டும் அவ்வாறு பக்கஎண்களை குறிப்பிடாவிட்டால் தேவையான விவரங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என கண்டுபிடிப்பது மிககடினமான பணியாகிவிடும் .இதுதவிர பயனர் மேலும் ஒருசில சொற்களை பக்கஎண்களொடு குறிப்பிடவிரும்பலாம்.உதாரணமாக ஆவணத்தின் தலைப்பு , நூலாசிரியரின் பெயர் என்பன போன்றவற்றை ஒரு ஆவணத்தின் எல்லா பக்கங்களிலும் சேர்ப்பதுஆகும்.. இதற்காக இந்த விவரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக தட்டச்சு செய்வதற்கு பதிலாக தலைப்பு அல்லது அடிக்குறிப்புகள் உபயோகப்படுத்திடபடுகின்றது.
பொதுவாக தலைப்பு என்பது பக்கத்தின மேல்பகுதியையும் அடிக்குறிப்பு என்பது பக்கத்தின் கீழ்பகுதியையும் குறிக்கும். பயனர் தன் விருப்பத்திற் கேற்ப அப்பகுதியில் தட்டச்சுசெய்துகொள்ளலாம்.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரானது அப்பகுதியை ஒவ்வொரு பக்கத்திலும் தானாகவே சேர்த்துகொள்கின்றது
ஓரு தலைப்பை உருவாக்குவதற்கு Header எனும் தாவி பயன் படுத்திட படுகின்றது. Format => Page என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் தோன்றும் திரையில் (படம்-16.2)உள்ள உரையாடல் பெட்டியில் Header என்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் திரையில் நான்கு சுழல் பெட்டிகள் உள்ளன. இவை தலைப்பிற்கும் ஆவணத்திற்கும் உள்ள தூரத்தை மாற்றிடவும் தலைப்பின் உயரம்,இடதுபுறஓரம் வலதுபுறஒரம் ஆகியவற்றை மாற்றிடவும் பயன்படுகின்றன.
Header என்ற தாவிக்கு பதிலாக Footer என்ற தாவியை தெரிவுசெய்து மேலேகூறியதைபோன்ற வழிமுறைகளை பின்பற்றி ஒருஅடிக்குறிப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்திகொள்ளலாம்.
இவ்வாறு செயற்படுத்தியவுடன் இந்தஆவணத்தை முன்காட்சியாக காணும்போது தலைப்பு அடிக்குறிப்பு பகுதிகள் தனியாக ஒரு சின்னக்கோட்டினால் பிரிக்கப்பட்டிருப்பதை காணலாம்
இவ்வாறு தலைப்பு, அடிக்குறிப்புகளை ஒருமுறை உருவாக்கியபின்னர் அதில் சேர்க்கவேண்டிய உரையை குறிப்பிடவேண்டும் அதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.
தலைப்பு அல்லது அடிக்குறிப்பு பகுதியை தெரிவுசெய்து சொடுக்குக.
பின்னர் Insert=> Fields என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து செயற்படுத்தியவுடன் ஒரு பட்டியலுடன் கூடிய துனைப்பட்டியொன்று திரையில் தோன்றம்.அதில் ஒன்றை தெரிவுசெய்தால் தேர்வுசெய்யப்பட்ட உரையானது எல்லாபக்கத்திலும் சென்று அமர்ந்துவிடும்.
உதாரணமாக Insert=> Fields => Page Number என்றவாறு (படம்-16.3)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் ஆவணத்தின் எல்லாபக்கங்களிலும் பக்க எண்களை உட்புகுத்தப்பட்டுவிடும். அல்லது நாம் விருப்பப்படும் உரையை இதனுடன் தட்டச்சுசெய்தும் சேர்த்திடலாம்.
இவ்வாறு பக்க எண்கள் ஒரு ஆவணத்தில் கொடுக்கப்பட்டவுடன் பக்கஅமைப்பு உரையாடல் பெட்டியின் துனைகொண்டு பக்க எண்களின் வடிவுட்டலை மாற்றி யமைக்கலாம். Format என்ற சேர்மான பெட்டியை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் பலவகையான பக்கஅமைவுகள் திரையில தோன்றும் அதில் வேண்டிய தொன்றை தெரிவுசெய்து கொள்ளலாம்
படம்-16.3
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment