Sunday, October 31, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-18 மீஇணைப்பு (Hyperlink)செய்தல்


 இந்த ஓப்பன் ஆஃபிஸ் மூலம் எந்தவகையான கோப்பாக இருந்தாலும் திறக்கமுடியும் என்பது நாமனைவரும் அறிந்ததே..  இவ்வாறு நாம் திறக்கவிழையும் கோப்புகள் எந்தவிடத்தில் இருக்கின்றதோ அதனை தேடிப்பிடித்து திறப்பதற்கு File => Open => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..
    பின்னர் தோன்றும் Open என்ற உரையாடல் பெட்டியில் File Types என்பதற் கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து All Files (*.*)என்பதை தெரிவு செய்தால் அனைத்துவகையான கோப்புகளும் பட்டியலாக திரையில் இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கும் அவற்றுள் நாம்விரும்பியதை தெரிவுசெய்து திறந்து கொள்ளலாம். அல்லது நாம் எந்தவகையான கோப்புகளை இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கச்செய்ய விரும்பு கின்றோமோ அதனைமட்டும் தெரிவுசெய்தால் நாம் தெரிவுசெய்தவகை கோப்புகள் மட்டும் பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கும்..
  பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டருடைய ஆவணத்தை சேமித்தபின் மீண்டும் திறக்கும்போது இடம்சுட்டியானது இயல்புநிலையில் அந்த ஆவணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பிரிதிபலிக்கும்.. பெரியஆவணங்களில் திருத்தம் செய்யும் பணியை செய்துமுடித்தபின்னர் வேறொரு நாளில் நாம் கடைசியாக எந்தவிடத்தில் திருத்தம் செய்துமுடித்தோம் என்று நினைவுகூர்ந்து எந்தவிடத்திலிருந்து தொடர்ந்து திருத்தம் செய்யவேண்டும் என தேடிப்பிடிப்பதில் அதிகசிரமம் ஏற்படும்.
   .இதனை தவிர்க்க Tools => Options => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
   அதன்பின்னர் Open Office.Org  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து User Data என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் Options-Open Office.Org-User Data என்ற உரையாடல் பெட்டிபடம்-18-1 இல் உள்ளவாறு தோன்றும்
   இதன் வலப்புறமுள்ள பலகத்தில்Address என்பதன்கீழ் கோரும் விவரங்களை உள்ளீடு செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. அல்லது Shift + F5 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக.
  இவ்வாறு அமைத்தபின்னர் நம்மால் சேமிக்கப்படும் ஆவணங்களை மீண்டும் அதில்பணிபுரிவதற்காக திறக்கும்போது கடைசியாக நாம் பணிபுரிந்த இடத்திலேயே இடம்சுட்டி பிரிதிபலித்துகொண்டிருப்பதை காணலாம்.
                                                            படம்-18-1
  ஒருஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே  நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் கோப்பு இருக்கும் கோப்பகத்தை அடைவை(Directory) மாற்றிக் கொள்ளலாமே என எண்ணிடுவோம்
   அந்நிலையில்  Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.. பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக. அதன் பின்னர் Open Office.Org  என்பதன் கீழ்விரியும் பட்டியலிலிருந்து Path என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
  பின்னர் Options-Open Office.Org-Path என்ற உரையாடல் பெட்டிபடம்-18-2 இல் உள்ளவாறு தோன்றும் இதன் வலப்புறமுள்ள பலகத்தில் Paths Used by Open Office.Org என்பதன்கீழ் விரியும் பட்டியலிலிருந்து My Documents என்பதை தெரிவுசெய்து Editஎன்றபொத்தானை சொடுக்குக.
 அதன்பின்னர்விரியும் Select path என்ற உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான அடைவை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                                                                      படம்-18-2
  ஒருசிலநேரங்களில்  ஒருகோப்பில் இருக்கும் மிகமுக்கியவிவரங்களை மற்றொரு கோப்புடன் மீஇணைப்பு (Hyperlink)வாயிலாக இணைத்திடுவோம் .அவ்வாற மீஇணைப்பு செய்யும்போது இவ்விணைப்பானது தொடர்பு மீஇணப்பா(Relative Hyperlink) அல்லது முழுமையான மீஇணைப்பா (Absolute Hyperlink)என்ற இரண்டு அடிப்படை காரணிகளை கருத்தில்கொள்ளவேண்டும்..
   உதாரணமாக grapic/picture.gif என்ற கோப்பினை மேற்கோள் காட்டிடுவதாக கொள்வோம்  தொடர்புமீஇணைப்பு மேற்கோள் எனில் தொடர்புபடுத்திடும் இரண்டு கோப்புகளும் ஒரேஅடைவிற்கள்(Directory) இருந்திடவேண்டும்.
    அவ்வாறில்லாமல் மேற்கோள் காட்டிடும் கோப்பும் மேற்கோள் பெற்றிடும் கோப்பும் அதேகணினியில் வெவ்வேறு அடைவிற்கள்இருந்தால்  File://data1/xyz/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக அமைத்திடவேண்டும். .
  அதற்குபதிலாக இரண்டு கோப்புகளும் வெவ்வேறு சேவையாளர் கணினியில் இருந்தால் http://data2/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக  அமைத்திடவேண்டும் .
   இவ்வாறு அமப்பதற்கு முன்பு Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதன் கீழுள்ள Load/save என்பதைதெரிவு செய்து சொடுக்குக.
 அதன்பின்னர் Load/save  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து General என்பதை தெரிவு செய்து சொடுக்குக. .பின்னர் Options-Load/save-General என்ற உரையாடல் பெட்டிபடம்-18-3 இல் உள்ளவாறு தோன்றும்
  இதன் வலப்புறமுள்ள பலகத்தில் saveஎன்பதன்கீழ் Save URLs relative to file system மற்றும்  Save URLs relative to internet ஆகியவற்றினை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
   படம்-18-3
   பெரிய அதிகாரிகளை பார்க்க செல்லும்போது நம்முடையபெயர் முகவரி போன்றவிவரங்களை ஒரு துண்டுதாளில் எழுதிகொடுப்போம் அதற்குபதிலாக ஒருசிலர் சிறுபார்வையாளர் அட்டையை நூற்றுகணக்கில் அச்சிட்டு வைத்திருப்பார்கள் அவ்வாறே நம்முடையவாடிக்கையாளர்களுடன் கடிததொடர்புகொள்ளும்போது அவர்களுடைய முகவரிகளை  அச்சிட்டு அனுப்பிடுவோம். இவ்வாறான பார்வையாளர் அட்டை வாடிக்கையாளர் முகவரிகளை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் வாயிலாக நாமே மிகஎளிதில் வடிவமைத்துகொள்ளலாம்.
  அதற்காக File => New=>  Lableஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர் படம்-18-4 இல் உள்ளவாறு தோன்றும் Lablesஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம்விரும்பியவாறு வாடிக்கையாளர்களின் முகவரிகளை வடிவமைத்துகொள்ளலாம்.

                                                                     படம்-18-4
  இவ்வாறே File => New=>  Business Cardsஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் படம்-18-5 இல் உள்ளவாறு தோன்றும் Business Cardsஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம் விரும்பியவாறு பார்வையாளர் அட்டையை வடிவமைத்துகொள்ளலாம்.
                                                                   படம்-18-5
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

No comments:

Post a Comment