ஏதேனும் கோப்புகளை நினைவகத்தில் திருத்தம் செய்து கெண்டிருப்போம் இவ்வாறான திருத்தம் சரியாக இல்லையே முந்தைய நிலையே நன்றாக இருந்ததே என எண்ணிடுவோம் அந்நிலையில் File = > Reload= > என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் திருத்தத்திற்கு முந்தைய நிலையிலிருந்த ஓப்பன் ஆஃபிஸின் கோப்பு திரையில் தோன்றிடும்.
பதிப்புகள் (Versions)
நாம் திறந்து பணிபுரிந்துகொண்டிருக்கும் கோப்பானது அவ்வப்போது மாறுதல் செய்ததற்கேற்ற நிலையில் தனித்தனியாக இருந்தால் நல்லது எனஎண்ணிடுவோம் அந்நிலையில் File = > Versions= > என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் versions of ஓப்பன் ஆஃபிஸ் 8 என்ற உரையாடல் பெட்டி (படம்-8.1)திரையில் தோன்றிடும்
படம்-8.1 இதில் உள்ள Save New Versions என்ற கட்டளை பொத்தானை தெரிவு செய்து சொடுக்கியவுடன் Insert Versions Comment என்ற மற்றொரு சிறு உரையாடல் பெட்டியொன்று (படம்-8.1)தோன்றும் .அதிலுள்ள Saved by என்பதன்கீழ் ஓப்பன் ஆஃபிஸ் -8.1 என்றவாறு பெயரை உள்ளீடு செய்து Ok என்றபொத்தானை தெரிவு செய்து சொடுக்கியவுடன் versions of ஓப்பன் ஆஃபிஸ் 8 என்ற உரையாடல் பெட்டி யில் Existing versions என்பதன்கீழ் நாம் உள்ளீடு செய்த கோப்பின் பெயரோடு நாளும் நேரமும் சேர்த்து சேமிக்கப்பட்டுவிடும்.
இதே கோப்பின் முந்தைய பதிப்பு தேவையெனில் open என்ற பொத்தானை சொடுக்கி திறந்து கொள்க. முந்தைய பதிப்புகளில் ஏதேனும் ஒன்றை பார்வையிட வேண்டுமெனில் Show என்ற பொத்தானை சொடுக்கி காண்பிக்கச்செய்து பார்வையிடுக.
அவ்வாறான முந்தைய பதிப்பில் ஏதேனும் தேவையில்லையெனில் அதனை தெரிவுசெய்து Delete என்ற பொத்தானை சொடுக்கி நீக்கம் செய்திடுக..தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் பதிப்புடன் இதே கோப்பின் முந்தைய பதிப்பை ஒப்பீடு செய்திட விரும்பினால்Compare என்ற பொத்தானை சொடுக்கி திறந்து ஒப்பீடு செய்துகொள்க.இவ்வாறு ஒப்பீடு செய்த பின் Edit => change => Accept = >அல்லது Reject= > என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி மாற்றம் செய்ததை ஏற்றுக்கொள்க. அல்லது விட்டிடுக.
படம்-8.2
அதன்பின்னர் File => Properties => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் Properties of ஓப்பன் ஆஃபிஸ்-.8 என்ற உரையாடல் பெட்டி (படம்-8.2)திரையில் தோன்றிடும்
இதில் இயல்பு நிலையில் திறந்துள்ள Generalஎன்ற தாவியில் (Tab)நாம் பணிபுரிந்து கொண்டிருக்கும் கோப்பின் பெயர் என்ன வகையான கோப்பு (Type),இந்த கோப்பு அமைந்திருக்கும் இடம்(Location) கோப்பின் அளவு(Size) அந்த கோப்பினை உருவாக்கிய நாளும் நேரமும் (Created Date and Time )மாறுதல்கள் ஏதேனும்செய்த நாளும் நேரமும் (ModfiedDate and Time ) இந்த கேப்பில் இலக்க கையொப்பம் (Digitaly signed) இணைக்கப்பட்டுள்ளதா என்பன போன்ற விவரங்கள் இருக்கும்.இவைகளை மாற்றியமைத்திட Resetஎன்ற பொத்தானை சொடுக்குக.ஏற்றுக்கொள்வதாயின் okஎன்ற பொத்தானை சொடுக்குக.
இதே உரையாடல்பொட்டியில் Descriptionஎன்ற தாவியை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரியும் திரையில் இந்த கோப்பிற்கான தலைப்பு (Title) இந்த கோப்பின் பொருள்(Subject) இந்த கோப்பினைதேடி பிடிப்பதற்கான திறவு சொற்கள்(Keywords) இந்த கோப்பினை பற்றிய கருத்துகள்(Comments) என்பன போன்ற விவரங்களை உள்ளீடுசெய்து இவைகளை மாற்றியமைத்திட Resetஎன்ற பொத்தானை சொடுக்குக.ஏற்றுக்கொள்வதாயின் okஎன்ற பொத்தானை சொடுக்குக.
இந்த கோப்பினைபற்றியவிவரங்களை நாம் விரும்பியவகையில் உருவாக்கிட Customs Properties என்ற தாவி பயன்படுகின்றது.
இந்த கோப்பினை இணையத்துடன் இணைத்திடும்போது Internet என்ற தாவியின்கீழ்உள்ள Refresh time என்பது எவ்வளவு நேரத்திறகொருமுறை புத்தாக்கம் செய்யப்படவேண்டும் என்று குறிப்பிடவும் எந்த இணைய முகவரியில் இதனை பார்வையிடமுடியும் என்பதற்கு Redirect URL என்பதுவும் பயன்படுகின்றது. இவைகளை மாற்றியமைத்திட Resetஎன்ற பொத்தானை சொடுக்குக.ஏற்றுக்கொள்வதாயின் okஎன்ற பொத்தானை சொடுக்குக.
கடைசியாக இந்த கோப்பில் எத்தனை பக்கங்கள், எத்தனை அட்டவணைகள், எத்தனை படங்கள், எத்தனை பத்திகள், எத்தனை வரிகள், எத்தனை சொற்கள் ,எத்தனை எழுத்துகள் அமைந்துள்ளன என்பன போன்ற விவரங்களை Statistics என்ற தாவியை சொடுக்கு வதன்வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
எந்தவகை கோப்பாகவும் எந்த இடத்திலும் இருந்தாலும் அதனை இந்த ஓப்பன் ஆஃபிஸின் மூலம் எவ்வாறு தேடிபிடித்து முன்னோட்டமாக திரையில் காண்பிக்கசெய்வது என அடுத்த தொடரில் காண்போம்.
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment