Sunday, October 31, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-21-ஆவணங்களை ஒப்பிடுதல் ஒருங்கிணைத்தல் சுருக்குவிசை தொடர்ச்சி

 இந்த சுருக்கு விசையை  ஒற்றை விசையை மட்டும் பயன் படுத்துதல் ஒன்றுக்குமேற்பட்ட விசைகளை சேர்த்து பயன்படுத்துதல் என்ற இருவகைகளில் செயற்படுத்திடமுடியும்.
   உதாரணமாக Home,Del PgUp PgDn ,End,என்பனபோன்ற சிறப்புவிசைகள் F1,F2, F5 என்பனபோன்ற செயலிவிசைகள் ஆகியவைகளை ஒற்றை விசையை மட்டும் பயன் படுத்தி நாம்விரும்பும் செயல்களை செயற்படுத்தி கொள்ளலாம்.
  ஆனால் Alt ,Ctrl, shift ஆகிய விசைகளுடன் மற்றவிசைகளை சேர்த்து அழுத்தினால் மட்டுமே நாம்விரும்பும்  செயல்களை செயற்படுத்திடமுடியும்.
  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை திறந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது
    சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்கினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் சொற்கள் முழுவதும் தெரிவுசெய்யப்படும்.
   சுட்டியின் வலதுபுறபொத்தானை மூன்றுமுறை சொடுக்கினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் சொற்றொடர்கள் முழுவதும் தெரிவுசெய்யப்படும்.
   Ctrl + Aஎன்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் ஆவணத்திலிருக்கும் அனைத்து உரையும் தெரிவுசெய்யப்படும்.
  Ctrl +Del என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் இடத்திலிருந்து அந்த வரியின் பின்புறம்முழுவதும்நீக்கப்படும்.
 Ctrl +Z என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் முன் செயல் ஒருபடிமட்டும் நீக்கப்பட்டுவிடும்
 Ctrl + அல்லது என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போது இடம்சுட்டி இருக்கும் சொல்லிலிருந்து அடுத்த சொல்லிற்கு இடம்சுட்டி தாவிவிடும்
 shift + அல்லது என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும்சொல்லும் அதற்கடுத்தும் தெரிவுசெய்யப்பட்டுவிடும்
  Alt+ F  என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் file என்ற கட்டளைமெனு திரையில் விரியும்.
ஆவணங்களை ஒப்பிடுதல் ஒருங்கிணைத்தல்
  ஏதேனும் ஆய்வுகட்டுரைகளை  ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து நூற்று கணக்கான பக்கங்களுக்கு எழுதி வெளியிட விரும்புவார்கள்  இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின்மூலம் ஒரே ஆவணத்தில்  அவரவரும் தத்தமது கருத்துகளை சேர்க்கவும் மற்றவர்களின் கருத்துகளை மாறுதல் செய்யவும் நீக்கம்செய்யவும் முடியும்
    இவ்வாறான நிலையில் அந்த ஆவணமானது ஒரே பெயரில் ஆனால் பல்வேறு பதிப்புகளாக பராமரிக்கப்படும்.பின்னர் இந்த பதிப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒட்டுமொத்த முதன்மை ஆவணமாக உருவாக்கி  ஒப்பீடு செய்வார்கள் .இந்த ஒப்பீட்டின் பணியின்போது இவர்கள் செய்த மாறுதல் களை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுப்பதோ செய்து இறுதியாக வெளியி டுவார்கள்.
    இவ்வாறான ஆய்வுக்கட்டுரை மட்டுமன்று பத்திரிகை நிறுவனத்தில்கூட இந்த நடைமுறை பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. அனைத்து நிருபர்களும் சமர்ப்பிக்கின்ற அறிக்கைளை பத்திரிகைகளில் அப்படியே வெளியிட மாட்டார்கள்
      அவ்வாறான அறிக்கைகள் கிடைத்தவுடன் உதவி ஆசிரியர்கள் அதில் சேர்த்தல் நீக்கம் செய்தல் என்பனபோன்று பல்வேறுதிருத்தங்களை மேற்கொள்வார் புரூப் ரீடரும் அவ்வாறே எழுத்துபிழை இலக்கணபிழை போன்றவற்றை சரிபார்ப்பார் இறுதியாக தலைமை பதிப்பாசிரியர் இவை களைபார்த்து ஒருசில பத்திகளுக்கு எதிரில் Clarify என எழுதுவார் ஒருசில பத்திகளை குறுக்கு கோடிடுவார்  அதனடிப் படையில் இறுதிபதிப்பு தயார்செய்து அச்சிட்டு வெளியிடுவார்கள்  .
    அவ்வாறே    அலுவலகங்களில் ஒருஎழுத்தர் தயார்செய்யும் ஆவண மொன்றில் கண்கானிப்பாளர் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வார் பின்னர் மேலதிகாரி இவைகளை ஒப்பீடு செய்து இந்த ஆவணத்தில் ஒரு சிலவற்றை ஏற்றும் வேறுசிலவற்றை மறுத்தும் இறுதியாக தம்முடைய கருத்துகளையும் சேர்த்து ஒப்புதல் வழங்குவார் அதன்பின்னர் இந்த ஆவணம் அச்சிடப்பட்டு அலுவலக உத்திரவுகளாக வெளியிடப்படும்.
   1.முதலில் இதுபோன்ற செயல்களுக்கு ஆவணமொன்று உருவாக்கப்பட்டு பலநகல்களாக பல்வேறுதரப்பினர்களுக்கும் சுற்றுக்கு விடப்படும் (Circulation)
  1. பின்னர் இவ்வாறு சுற்றுக்கு விடப்பட்டஆவணத்தில் அவரவர்களும் Edit=> Changes=> Record=> என்றவாறு (படம்-21-1)கட்டளைகளை செயற்படுத்தி  பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வார்கள்.
  2. அதுமட்டுமல்லாது Edit=> Changes=> comments=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தித்தமது கருத்துகளையும் பதிவுசெய்வார்கள்
                                          படம்-21-1
  1. அதன்பின்னர் Edit=> Compare document => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இவை ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பீடுசெய்யப்படும். உடன் Accept or Reject (Changes) என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் .இவ்வாறு ஒப்பீடு செய்யும் ஆவணத்தில் (படம்-21-2)அடிக்கோடிட்டவரிகள் பதியதாக insert செய்தவையாகும் . வரியின் மீது கோடிட்டிருப்பது delete செய்யப் பட்டவையாகும்.
                                     படம்-21-2
    ஏற்றுக்கொள்பவை தனித்தனியாகஇருப்பவை எனில் அவைகளை தனித்தனியாக ஒவ்வொன்றையும் தெரிவுசெய்துAccept என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அனைத்தையும் ஏற்றுக்கொளவதாயின் அனைத்தையும் தெரிவுசெய்து  Accept all  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.   அவ்வாறே மறுப்பவை தனித் தனியாக இருப்பவை எனில் அவைகளை தனித்தனியாக ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து Reject என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அனைத்தையும் மறுப்பதாயின் அனைத்தையும் தெரிவுசெய்து  Reject all  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  1.  பின்னர் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட ஒரே ஆவணத்தின் பல்வேறு பதிப்புகள் உண்மை ஆவணத்துடன் ஒன்றாக இணைப்பார்கள் அதற்காக Edit=> Changes=> Merge documents=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
  2.  உடன் கோப்பு தெரிவுசெய்யப்படும் உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும்.இந்த உரையாடல்பெட்டிவாயிலாக  மற்றஆவணங்களும் ஒரிஜினல் ஆவணமும் பிழையேது மில்லாமல் சரியாக இருந்தால்  ஒருங்கிணைக்கப்படும்.
  3. பிழைஇருந்தால் பிழைசுட்டும் உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றி ஆவணங்களை ஒருங்கிணைப்பு செய்யமுடியவில்லை (படம்-21-3) என்ற செய்தியை அறிவிக்கும்.  
                                                              படம்-21-3
நன்றி :தமிழ் :(கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்)


No comments:

Post a Comment