Wednesday, October 20, 2010

ஓப்பன் ஆஃபிஸ் -6 பிடிஎஃப் மற்றும் ஹெச்டிஎம்எல் கோப்பாக உருமாற்றுதல்

  இந்த  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் உருவாக்கிய ஒரு ஆவணத்தை குறிப்பிட்ட ஓஎஸ் தளம் மற்றும் குறிப்பிட்ட எழுத்துரு ஆகியவை இருந்தால்தான் நம்மால் திறந்து படிக்கமுடியும் என்ற வரையறை எதுவுமில்லாமல் எங்கும் எப்போதும் திறந்து படிக்ககூடிய பிடிஎஃப் கோப்பாக உருமாற்றி கொள்ளும் வசதி இதில் உள்ளது. அதற்காக File = > Export as PDF =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.


                        படம் -6-1
     உடன் படம் -6-1 இல் உள்ளவாறு PDF Options  என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். அதில் 1.பொதுவான பிடிஎஃப் இன் வடிவமைப்பிற்கு General என்ற தாவியும்(Tab)  ,2.பிடிஎஃப் இன் ஆரம்ப தோற்றம்  எவ்வாறு இருந்திடவேண்டும் எனவடிவமைப்பதற்குInitial View என்ற தாவியும்(Tab),3.பிடிஎஃப் இன் கோப்பிற்குள் சென்று ஒரு பயனாளர் என்னென்ன மாறுதல்கள் செய்யலாம் எனவடிவமைப்பதற்குUser Interface என்ற தாவியும்(Tab),4.இந்த பிடிஎஃப் இன் கோப்பிற்குள் ஒரு பயனாளர் சென்றபின்னர் மேலும் விவரங்களை அறிந்திடவேண்டி வேறு ஏதேனும் கோப்புகள் மற்றும் தளங்களுக்கு செல்லவேண்டுமா என வடிவமைப்பதற்கு Linksஎன்ற தாவியும்(Tab),5.இந்த பிடிஎஃப் இன் கோப்பிற்குள் ஒரு குறிப்பிட்ட பயனாளர்கள் மட்டுமே கடவுச்சொற்களை உள்ளீடு செய்து சென்று பார்வையிடமுடியும் எனவடிவமைப்பதற்குSecurity என்ற தாவியும்(Tab) பயன்படுகின்றன.
    புதியவர்கள். இவ்வாறு ஆழ்ந்து செல்ல வேண்டாம் இந்த வாய்ப்புகளையெல்லாம் நன்கு அனுபவம் ஏற்பட்ட பிறகு பார்த்து கொள்ளலாம்.அதனால் இதில் இயல்பு நிலையில் உள்ள கட்டளைகளை அப்படியே ஏற்றுகொண்டு Export என்ற பொத்தானை சொடுக்குக.



                     படம் -6-2 

 உடன் படம் -6-2 இல் உள்ளவாறு Export  என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். அதில் save in என்பதில் எந்த கோப்பகத்தில் (Directory) எந்த மடிப்பகத்தில் (Folder)நாம் சேமிக்கப் போகின்றோம் என்பதை தெரிவுசெய்து கொள்க. File Name  என்பதில் இந்த பிடிஎஃப் கோப்பிற்கு வேறு பெயர் ஏதேனும் இடுவதாக இருந்தால் உள்ளீடு செய்க. இல்லையெனில் நாம் உருமாற்றுவதற்காக எடுத்தகொண்ட கோப்பின் பெயரையே இயல்பாக எடுத்துகொள்ளும். பின்னர் Save என்ற பொத்தானை சொடுக்குக.உடன்நாம் உருமாற்று வதற்காக எடுத்தகொண்டஓப்பன் ஆஃபிஸ் கோப்பானது நாம் விரும்பியவாறு  பிடிஎஃப் கோப்பாக உருமாறிவிடும்.
  வேறுவகை கோப்பாக அதாவது இணையஉலாவிமூலம் திறந்து படிப்பதற்கு வசதியாக இருக்குமாறு HTML போன்ற கோப்பாக உருமாற்றம் செய்திடவேண்டுமெனில்  File = > Export  => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.




                                    படம் -6-3
  உடன் படம் -6-3 இல் உள்ளவாறு Export  என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். அதில் save in என்பதில் எந்த கோப்பகத்தில் (Directory) எந்த மடிப்பகத்தில் (Folder)நாம் சேமிக்கப் போகின்றோம் என்பதை தெரிவுசெய்து கொள்க. File Name  என்பதில் இந்த HTML  கோப்பிற்கு வேறு பெயர் ஏதேனும் இடுவதாக இருந்தால் உள்ளீடு செய்க. இல்லையெனில் நாம் உருமாற்றுவதற்காக எடுத்தகொண்ட கோப்பின் பெயரையே இயல்பாக எடுத்துகொள்ளும். File Format என்பதில் XHTML(.html) என்றவாறு தெரிவு செய்தபின்னர் Save என்ற பொத்தானை சொடுக்குக.உடன்நாம் உருமாற்று வதற்காக எடுத்தகொண்டஓப்பன் ஆஃபிஸ் கோப்பானது நாம் விரும்பியவாறு  HTML  கோப்பாக உருமாறிவிடும்.



  நாம் உருவாக்கிய கோப்பினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவோம் அவ்வாறான நிலையில் படம் -6-4 இல் உள்ளவாறு File => Send => document as E-mail => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின்னர் மின்னஞ்சல் வாயிலாக அந்த கோப்பினை   அனுப்பி வைக்கலாம்.
    அவ்வாறு அனுப்பிடும்போது பெறுபவருக்கு இதே.ஓப்பன் ஆஃபிஸ்  ஆவணமாக இருந்திடவேண்டும் எனில் File => Send =>  E-mail as Open Document Text  => என்றவாறும் எம் ஆஃபிஸ் ஆவணமாக இருந்திட வேண்டுமெனில் File => Send =>  E-mail as Microsoft Word  => என்றவாறும்  இதுபோன்ற கோப்புகளை திறந்துசெயல்படுத்துவதற்கான பயன்பாடு எதுவும் நண்பர்களின் கைவசம் இல்லையெனும் நிலையில் பிடிஎஃப் கோப்பாக அனுப்பிடுவதற்கு File => Send =>  E-mail as PDF  => என்றவாறும் கட்டளைகளை செயற்படுத்தி மின்னஞ்சல் வாயிலாக  நாம் விரும்பியவாறான கோப்பாக உருமாற்றி அனுப்பி வைக்கலாம்.
    இணையஉலாவிமூலம் திறந்து படிப்பதற்கு வசதியாக இருக்குமாறு HTML போன்ற கோப்பாக  முன்பு கண்டுவந்த Export என்ற கட்டளைக்கு பதிலாக   இந்த   Send என்ற கட்டளையை பயன்படுத்தி HTML கோப்பாக உருமாற்றம் செய்திடலாம்  அதற்காக File = > Send=>Create HTML Document  =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் படம் -6-3 இல் உள்ளவாறு Export  என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றும். அதில்  முன்பே கூறியவாறான கட்டளைகளை . செயற்படுத்தியவுடன்நாம் உருமாற்றுவதற்காக எடுத்துக் கொண்டஓப்பன் ஆஃபிஸ் கோப்பானது நாம் விரும்பியவாறு  HTML  கோப்பாக உருமாறிவிடும்.
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்) 

No comments:

Post a Comment