ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரின் மூலமாக ஒரு பெரிய ஆவணத்தை உருவாக்கி பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அதில் நாம் விரும்பும் பகுதிக்கு உடனடியாக செல்லவும் பதிப்பித்தல் செய்யவும் புதிய ஆவணத்தை திறக்கவும் இதிலுள்ள வழிகாட்டி(Navicator) என்றவசதி நமக்கு பெரிதும்உதவியாக இருக்கின்றது
. இதனை செயற்படுத்திட ஓப்பன் ஆஃபிஸ்ரைட்டர் திரையின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டியிலிருக்கும் View=>Navigator => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக அல்லது விசைப் பலகையிலுள்ள F5 என்ற விசையை தட்டுக அல்லது கருவிபட்டியிலுள்ள Navigator இன் உருவபொம்மையை தெரிவு செய்து சொடுக்குக.
உடன் படம்-14-1 இல் உள்ளவாறு Navigator என்ற சிறு சாளரம் திரையின் மேற்புறமாக இடதுபுறஓரத்தில் தோன்றும். இதில் தலைப்புபட்டிக்கு அடுத்து இரண்டாவதாக உள்ள Navigaton என்ற உருவத்தை தெரிவு செய்து சொடுக்கிய வுடன் இதேபடத்திற்குள் Navigator என்ற மற்றொரு சிறுபெட்டியொன்று தோன்றும்.
மூன்றாவதுபட்டியின் முதல்உருவமான பட்டிபெட்டியை(List box on/off )தெரிவு செய்து சொடுக்கியவுடன் இதேபடத்திற்குள்இதன் உள்ளடக்க வகைகளை பட்டியலாக காண்பிக்கும்.இவைகளை தெரிவு செய்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குவதன் வாயிலாக நாம் விரும்பும் பகுதிக்கு உடனடியாக சென்று திருத்துதல் படித்தல் போன்ற பணிகளை செய்யமுடியும்.
மேலும் குறிப்பிட்ட பக்கத்திற்கு உடனடியாக செல்வதற்கு Shift+Ctrl+F5 என்றவாறு விசைப்பலகையிலுள்ள மூண்று விசைகளையும் சேர்த்து அழுத்துக.பின்னர் தோன்றிடும் திரையில் தேவையான பக்கஎண்ணை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக. அதுமட்டுமல்லாது இந்த Navigator என்ற சிறு சாளரத்தின் தலைப்பு பட்டியை பிடித்து இடதுபுறம் அல்லது வலதுபுறம் ஓரமாக கொண்டு சென்று வைத்திடலாம்.
படம்-14-1
ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு எளிய அட்டவணையை உருவாக்குதல்
ஒரு ஆவணத்தில் பல்வேறுவகையான தரவுகளை இடையிடையே அட்டவணையாக வழங்கினால் படிப்பவர்களுக்கு நாம் கூறவருகின்ற செய்தி எளிதாக புரியும் அவ்வாறான நிலையில் பின்வரும் வழிகளை பயன்படுத்தி ஒரு எளிய இயல்புநிலை நடை (defalt- style) ) அட்டவணையை ஓப்பன்ஆஃபிஸ் ரைட்டரில்உருவாக்கலாம்.
1.ஓப்பன் ஆஃபிஸ்ரைட்டரின் மேல்பகுதியில் உள்ள கட்டளை பட்டியிலிருக்கும் Insert => Table => என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் Insert Table என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் (படம்-14-2 )தோன்றும்.
படம்-14-2
2.பின்னர் அதில் உள்ள Name என்ற உரைப்பெட்டியில் அட்டவணையின் பெயரை தட்டச்சு செய்க.
3.அதன் பின்னர் Coloumn மற்றும் Rows ஆகிய உரைபெட்டிகளில் உள்ள அம்புக்குறிகளை கொண்டு நெடுவரிசை மற்றும் கிடைவரிசை களின் எண்ணிக்கையை குறிப்பிடுக.
4.உடன் ஓப்பன் ஆஃபிஸ்ரைட்டரானது குறிப்பிட்ட நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளை கொண்ட அட்டவணையை திரையில் காண்பிக்கும். இயல்புநிலையாக ஒவ்வொரு சிற்றரையும் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருக்கின்றது . தேவையானால் இந்த எல்லைகளை மாற்றி யமைக்க முடியும்.
5.அல்லது மாற்றுவழியாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மேல்பகுதியில் உள்ள கட்டளைபட்டியின் View => Toolbar => insert என்ற வாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
6.உடன் படம்-14-3உள்ளவாறு மிதவை கருவிபட்டையொன்று திரையில் தோன்றும். இதில் Insert table என்பது இதனுடைய முதல்பொத்தானாகும்
7.இதனைதெரிவுசெய்து சொடுக்கியவுடன் குறுக்குநெடுக்காக கட்டங்களை கொண்ட வலையொன்று அட்டவணையாக தோன்றும்
8.அதன்மீது இடம்சுட்டியைவைத்து நகர்த்தி சென்று நமக்குதேவையான குறுக்கு நெடுக்கு வரிகளின் எண்ணிக்கையை தெரிவுசெய்துகொள்ளலாம்.
9.மாறாக இந்த பொத்தான்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக.உடன் இயல்புநிலையில் 2 குறுக்குவரிசைகளையும் 2 நெடுவரிசைகளையும் கொண்ட அட்டவணை யொன்று தானாகவே உருவாகித் திரையில் தோன்றும்.
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment