Sunday, October 31, 2010

ஓப்பன் ஆஃபிஸ் -13ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் பதிப்பித்தல்

   ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் பதிப்பிக்க என்ற கட்டளைபட்டியில்  எம்எஸ்வேர்டு போன்ற கட்டளைகளே உள்ளன. அவைகளின் மூலம் ஒரு ஆவணத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது  ஏதேனும் சொற்களை ,வரிகளை அல்லது பத்திகளை தேவையில்லை யென அழித்து நீக்கம் செய்திருப்போம் பின்னர்  அடடா தவறுதலாக அழித்துவிட்டோமே அப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே என  மனம்மாறி பேதலிப்போம்
    அந்நிலையில் கருவிச் சட்டத்தில்(Tool bar) உள்ள முன்செயல்நீக்கு(Undo) என்ற உருவத்தை(Icon) சொடுக்கி பழையநிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். அதற்கு பதிலாக Edit =>Undo=>என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்தியும் இந்த முன்செயல்நீக்கு செயலை செயற்படுத்தலாம்  இதனைசெயற்படுத்திட இடம் சுட்டியையும் (Cursor) , சுட்டியையும்(Mouse)   பயன்படுத்தவேண்டியுள்ளது மாற்றுவழியாக  ஒரு விசைப்பலகையில்  உள்ள Ctrl + Z ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துவதன்வாயிலாகவும் இதே செயலை செயற்படுத்திடலாம்.
    அவ்வாறே ஒரு ஆவணத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது  ஏதேனும் சொற்களை ,வரிகளை அல்லது பத்திகளை நகலெடு (Copy),ஒட்டு(Paste) ஆகிய  கட்டளைகளின் வாயிலாக அல்லது தட்டச்சு செய்வதன்மூலம் உள்ளீடு செய்திருப்போம் பின்னர்  அதேசெயலை மீண்டும் செய்தால் நன்றாக இருக்குமே என  எண்ணிடுவோம்
  அந்நிலையில் கருவிச் சட்டத்தில் உள்ள முன்செயலைசெய்(Redo) என்ற உருவத்தை சொடுக்கி மீண்டும் அதேசெயலை செய்திடுவோம். அதற்கு பதிலாக Edit =>Redo=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியும் இந்த முன்செயலைசெய்( Redo) என்பதை செயற்படுத்தலாம்  இதனை செயற் படுத்திட இடம் சுட்டியையும் (Cursor), சுட்டியையும்(Mouse)   பயன்படுத்த வேண்டி யுள்ளது மாற்றுவழியாக  ஒரு விசைப்பலகையில்  உள்ள Ctrl + y ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துவதன் வாயிலாக இதே செயலை செயற்படுத்திடலாம்.
 இந்த முன்செயலைசெய்(Redo) என்ற கட்டளைவாயிலாக ஒருமுறை மட்டுமே முன்செயலை செயற்படுத்திடமுடியும்  அதற்குபதிலாக ஒரு விசைப்பலகையில்  உள்ள Ctrl +Shift + y  ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துவதன்வாயிலாக முன்செயலை திரும்ப திரும்ப செயற்படுத்திட முடியும்
  ஒரு ஆவணத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது  ஏதேனும் சொற்களை , வரிகளைஅல்லது  பத்திகளை நகலெடு (Copy) என்ற கட்டளையின் வாயிலாக நகலெடுத்திருப்போம்அதனை நாம்விரும்பிய இடத்தில் Rich Text (RTF)வடிவமைப்பிலோ HTML   வடிவமைப்பிலோ அல்லது  நாம்விரும்பும் வடிவமைப்பிலோ ஒட்டுவதற்கு    Edit =>Paste Special=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது அதற்கு பதிலாக  விசைப்பலகையில்  உள்ள Ctrl +Shift + V   ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துக.உடன் Pate Special  என்ற உரையாடல்பெட்டி(dialog box)யொன்று படம் -13-1 இல்உள்ளவாறு தோன்றும் அதில் Selection என்பதன்கீழ் உள்ள வடிவமைப்பு வகைகளில் நாம்விரும்பும் வடிவமைப்பினை தெரிவுசெய்து Ok என்ற பொத்தானை சொடுக்குக.


                                                                       படம்-13-1
   நாம் மற்றவர்களுடன் கடிதம் ,மின்னஞ்சல்வாயிலாக தொடர்புகொண்டு நம்முடைய கருத்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றோம். இவ்வாறான கடிதங்கள் ,கட்டுரைகள் போன்றவைகளை தயார் செய்திடும்போது ஒருசில சொற்கள் திரும்ப திரும்ப தட்டச்சு செய்திட வேண்டியநிலை ஏற்படும்.அவ்வாறான நிலையில் Auto Text என்ற வசதியின் வாயிலாக இவைகளை சேமித்து வைத்துகொண்டால் பின்னர் தேவைப்படும்போது அச்சொற்களின் முதலில் உள்ள ஓரிரு எழுத்துகளை மட்டும் தட்டச்சுசெய்திடும்போதே தேவையான சொற்களின் மிகுதிஎழுத்துகள் பூர்த்தியாகிவிடும்
   இந்த வசதிக்காக Edit =>Auto Text=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது அதற்கு பதிலாக    விசைப்பலகையில்  உள்ள Ctrl +F3 ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துக.உடன் Auto Text   என்ற உரையாடல் பெட்டியொன்று படம் -13-2 இல்உள்ளவாறு தோன்றும் அதில் முதலில் Display remainder of name as a suggestion while typing என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து Name என்பதில் இதற்கொரு பெயரிட்டு Auto Text என்ற பொத்தானைசொடுக்கியபின்  Newஎன்ற பொத்தானை சொடுக்கி தேவையான சொற்களை  தட்டச்சுசெய்து   விரும்பிய இடத்தில் சேமித்துகொள்க.



                                                           படம் -13-2
  பெரியதொரு ஆவணத்தில்  ஒரேமாதிரியான தவறான சொற்கள் பலஇடங்களில் இருக்கும் அவைகளை ஒவ்வொன்றாக தேடிபிடித்து திருத்துவதற்காக Edit =>Find & Replace => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது அதற்கு பதிலாக    விசைப்பலகையில்  உள்ள Ctrl +F ஆகிய விசைகளை  சேர்த்து அழுத்துக.உடன் Find & Replace   என்ற உரையாடல்பெட்டியொன்று படம் -13-3 இல்உள்ளவாறு தோன்றும் அதில் Search for  என்றபகுதியில் தேடிபிடிக்கவேண்டிய சொல்லையும் Replace with  என்றபகுதியில் மாற்றியமைத்திடவேண்டிய சொல்லையும் உள்ளீடுசெய்து ஒருஇடத்தில் மட்டும் மாற்றியமைத்திடவேண்டு  மெனில்    Find  , Replace ஆகிய பொத்தான்களைதெரிவுசெய்து சொடுக்குக. அனைத்தையுமெனில் Find All   , Replace All ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக.இறுதியாக Close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.


                                   படம் -13-3
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

No comments:

Post a Comment