மாதிரிபலகம் File => Template=>Organize =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி யவுடன் படம் - 9-1 இல் உள்ளவாறு Template Management என்ற மாதிரி பலகத்தை சரிசெய்வதற்கான உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும். அதில் உள்ள commands என்ற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக மாதிரி பலகங்களையும் ஆவணங்களையும் பதிப்பித்தல் செய்து நிருவகிக்கலாம். நாம் தெரிவுசெய்யும் கோப்புகளின் வகைக்கேற்ப இதில் பின்வரும் கட்டளைகள் தயாராக இருக்கின்றன.
படம்-9-1
1.New :புதிய மாதிரி பலகங்களை உருவாக்கிடுவதற்காக.
2.Delete: நடப்பிலுள்ள மாதிரி பலகத்தை நீக்கம் செய்திடுவதற்காக.
3.Edit :தெரிவுசெய்யப்பட்ட மாதிரி பலகத்தில் பதிப்பித்தல் செய்திடுவதற்காக.
4.Import Templates:கூடுதலாக மாதிரி பலகங்கள் தேவையெனில் அதற்கான மடிப்பகத்திலுள்ள மாதிரிபலகங்களின் பட்டியலிலிருந்து ஒன்றை தெரிவுசெய்து Command => Import Template => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்வாயிலாக இறக்குமதி செய்து கொள்ள முடியும்.
5.Export Template: அவ்வாறே தேவையான மாதிரி பலகத்தை இந்த கட்டளையின் வாயிலாக ஏற்றுமதி செய்யலாம்.
6.Update:பட்டியலுள்ள மாதிரிபலகங்களின் உள்ளடகத்தை அவ்வப்போது புத்தாக்கம் செய்திட இது பயன்படுகின்றது.
7.Set As Default Template: நம்மால் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாதிரிபலகத்தின் வாயிலாக இயல்புநிலையில் ஒரு புதிய OpenOffice.org ஆவணத்தை உருவாக்கிட இது பயன்படுகின்றது.
8.Reset Default Template: இயல்புநிலையில் நம்மால் தெரிவு செய்யப் பட்டுள்ள மாதிரி பலகத்தை மறுஅமைப்பு செய்திட இதுபயன்படுகின்றது.
இணையஉலாவி
File => Preview in Web Browser =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திய வுடன் படம் - 9-2 இல் உள்ளவாறு நம்முடைய கணினியில் நிறுவியுள்ளஇணையஉலாவியானது திரையில் தோன்றும் .இதனுடய உதவியால்நம்முடைய கணினியில் எந்த இடத்திலுமுள்ள எந்தவகையான கோப்பாக இருந்தாலும் தேடிப்பிடித்து திறந்திடமுடியும் .
படம்-9-2
ஆவணத்தின் பல பகுதிகளுக்கும் செல்லுதல்
ஓப்பன்ஆஃபிஸ்ரைட்டரில் உள்ள ஒருஆவணத்தின் பல பகுதிகளுக்கும் செல்வதற்கு சுட்டி யை(mouse)அல்லது விசைப்பலகையின் அம்புக்குறியை பயன்படுத்தி ஆவணத்தின் எந்தவொரு இடத்திற்கும் செருகும் புள்iளியை (Insert point)நகர்த்தி செல்லலாம். ஆனால் ஓரு பக்கத்தின் இறுதியில் உள்ள பட்டையான படுக்கை கோட்டிற்கு அப்பால் நகரும் புள்ளியை நகர்த்திடமுடியாது இதுதான் அந்த ஆவணத்தின் இறுதி பகுதியாகும்.
சுட்டி யின்(mouse) மூலம் செருகும்புள்ளியை நகர்த்துவதற்கு இடம்சுட்டியை(Cursor)தேவையான இடத்திற்கு நகர்த்தி சென்று சுட்டியைஒருமுறை சொடுக்கவேண்டும். இங்கு சுட்டியும் செருகும் புள்ளியும் வெவ்வேறானவை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
விசைப்பலகையின் மூலம் நகரும் புள்ளியை நகர்த்துவதற்கு அம்புக்குறியையோ அல்லது பொத்தான்களையோ பயன்படுத்திட வேண்டும்.. இதற்கெனப்பயன்படும் பொத்தான்களின் பட்டியல் அட்டவணை 9.1 இல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலின் சாவிச்சேர்மானத்தின் (Key Combination) உள்ள கூட்டல் குறியானது முதல் பொத்தானை அழுத்திபிடித்தவாறு இரண்டாவது பொத்தானை அழுத்தவேண்டும் என்பதை குறிக்கின்றது.
வ. எண் | அழுத்தவேண்டிய விசைகள் | அதன் விளைவுகள் |
1 | Left Arrow | ஒரு எழுத்தளவிற்கு இடம்சுட்டிஇடப்புறம் நகரும் |
2 | Ctrl +Left Arrow | ஒரு சொல்லளவிற்கு இடம்சுட்டிஇடப்புறம் நகரும் |
3 | Right Arrow | ஒரு எழுத்தளவிற்கு இடம்சுட்டிவலப்புறம் நகரும் |
4 | Ctrl + Right Arrow | ஒரு சொல்லளவிற்கு இடம்சுட்டிவலப்புறம் நகரும் |
5 | Up Arrow | இடம்சுட்டிமேற்புறம் ஒரு வரியளவிற்கு நகரும் |
6 | Down Arrow | ஒரு வரியளவிற்கு இடம்சுட்டிகீழ்புறம் நகரும் |
7 | End | ஒரு வரியின் இறுதிக்கு இடம்சுட்டி நகரும் |
8 | Ctrl +End | ஒரு ஆவணத்தின்இறுதிக்கு இடம்சுட்டி நகரும் |
9 | Home | ஒரு வரியின் தொடக்கத்திற்கு இடம்சுட்டிநகரும் |
10 | Ctrl+ Home | ஒரு ஆவணத்தின் தொடக்கத்திற்கு இடம்சுட்டி நகரும் |
அட்டவணை-9-1
ஆவணத்தில் திரை உருளல் செய்தல்
ஒருஆவணம் மிகநீண்டதாக இருந்தால் செருகும் புள்ளியை நகர்த்தாமலேயே திரைஉருளச் செய்வதன் மூலம்உரையை நகர்த்தி காணமுடியும். இதற்காகசுட்டி ,திரைஉருளல் அம்புக்குறி , திரைஉருளல் பட்டை (scroll bar)ஆகியவை உதவுகின்றன. மேலும்கீழும் நகருவதற்கு என்றும் கிடைமட்டமாக நகருவதற்கு என்றும் தனித்தனி திரைஉருளல் அம்புக்குறிகள் இதில் உள்ளன.
திரை உருளல் செய்யும் படிமுறை பின்வருமாறு
1. இடவலமாக உரையை நகர்த்துவதற்கு இடது மற்றும் வலது அம்புக்குறிகளை பிடித்து சொடுக்குக.
2. மேலும்கீழுமாக திரை உருளச் செய்வதற்கு மேல்நோக்கு கீழ்நோக்கு அம்புக்குறிகளை பிடித்து சொடுக்குக.
3. ஓருகுறிப்பிட்ட தூரம் திரைஉருளச் செய்வதற்கு திரைஉருளல் பெட்டியை (Scroll Box)பிடித்து மேலாகவோ அல்லது கீழாகவோ இழுத்து செல்லவேண்டும். இந்நிலையில் ஆவணத்தில் பலபக்கங்கள் இருந்தால் நடப்புபக்கம் எதுவென திரை உருளல் பெட்டிக்கு (Scroll Box) பக்கத்தில் தோன்றும் மேல்மீட்பு பக்கஎண்கள் மூலம் தெரிந்து கெள்ளலாம்.
ஆவணத்தை திரைஉருளச் செய்யும்போது செருகும்புள்ளி (Insert Point) நகராது என்பதை மனதில் கொள்ளுங்கள் செருகும்புள்ளியை நகரச்செய்வதற்கு அவ்வாறு நகர்த்திட வேண்டிய இடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியை சொடுக்குக.
ஓப்பன்ஆபிஸ்ரைட்டரின் ஆவணத்தில் உள்ள பிழையைதிருத்துதல்
தட்டச்சு செய்யப்படும் அனைத்து எழுத்துகளும் திரையில் தோன்றும் .ஏதாவது தவறாக இருந்தால் அதனை பின்னிடவெளி (Back space) அல்லது அழி(Delete) ஆகிய பொத்தான்களை அழுத்துவதன்மூலம் திருத்தலாம்.பின்னிடவெளி (Back space) என்ற பொத்தானை அழுத்தினால் செருகும்புள்ளிக்கு இடதுபுறத்தில் உள்ள எழுத்துகளையும் அழி(Delete) என்றபொத்தானை அழுத்தினால் செருகும்புள்ளிக்கு வலதுபுறத்தில் உள்ள எழுத்துகளையும் அழிக்கும்
ஓப்பன்ஆபிஸ்ரைட்டரின் ஆவணத்தில் உரையை சேர்த்தல்
ஆவணத்தில் முழுமையாக தட்டச்சு செய்யப்பட்டபின்னர் தேவையானால் வேண்டிய உரையை இந்த ஆவணத்தின் முதலிலோ இறுதியிலோ அல்லது இடையிலோ சேர்க்க முடியும். இதற்காக சேர்க்க வேண்டிய இடத்தில் செருகும்புள்ளியை வைத்தபின்னர் தேவையான உரையை தட்டச்சு செய்யவேண்டும். உடன் புதிய உரை தேவையான இடத்தில் சேர்க்கப்பட்டு ஏற்கனவெ உள்ள உரை வலதுபறத்தில் நகர்ந்துவிடும்
இவ்வாறான புதிய உரையை மேல்அச்சிடல் (Over Writing) நிலை அல்லது செருகல் (Insert)நிலை ஆகிய இருநிலைகளில் சேர்க்கலாம். புதிய உரையை மேல் அச்சிடல் (Over Writing) நிலை யில் சேர்க்கப்படும்போது செருகும்புள்ளிக்கு வலது புறத்தில் உள்ள எழுத்துகள் அழிந்து அவ்விடத்தில் புதிய எழுத்துகள் இடம் பெறும் புதிய உரையை செருகல் (Insert) நிலையில் சேர்க்கப்படும்போது செருகும் புள்ளி உள்ள இடத்தில் மட்டும் புதிய எழுத்துகள் இடம்பெறும்
Insert என்ற பொத்தானை பயன்படுத்தி இவ்விரண்டு நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறிக்கொள்ளலாம் .மேலும் நிலைமை பட்டையின்(Status bar)மூலம் நடப்புமுறைமை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு பிழையை திருத்திடும்போது அவ்வப்போது ஒரு ஆவணத்தை File =Save as=> என்றவாறு கட்டளையை பயன்படுத்தி சேமித்துக்கொள்க.
ஆவணத்தின் முன்னோட்டகாட்சி File => Page Preview =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் நாம் உருவாக்கிய ஆவணம் அச்சிடும்போது எவ்வாறிருக்கும் என முன்னோட்டமாக படம் -9-3 இல் உள்ளவாறு காணலாம்.
ஒரு ஆவணத்தில் பணிபுரியும்போது செய்திட்ட மாறுதல்களை பதிவுசெய்தல் ஏற்றுக்கொள்ளுதல் கைவிட்டிடுதல் போன்ற செயல்களை எவ்வாறு செயற்படுத்துவதென அடுத்த இதழில் காண்போம்.
படம்-9-3
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment