பொறுமையாக சிந்திப்பதற்கும் நின்று செயல்படுவதற்கும்கூட நேரமில்லாத இன்றைய இயந்திரமயமான நம்முடைய வாழ்க்கை யோட்டத்தில் நிதானமாக நல்ல தோற்றமுடைய கடிதம் அல்லது கட்டுரையை வடிவமைப் பதற்குகூட இயலாத நிலையில் நாமெல்லாம் இன்று வாழ்ந்து வருகின்றோம் .இந்நிலையில் இந்த ஓப்பன் ஆஃபிஸ்- ரைட்டர் ஆனது வழிகாட்டியின் மூலம் நமக்கெல்லாம் ஒரு ஆபத்து உதவியாக கைகொடுக்கின்றது. இதற்காக File => Wizards => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியவுடன் வி்ரியும் சிறுபட்டியில் (படம்-4.1 )உள்ள Letter என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் படம்-4-2 இல் உள்ளவாறு அவரவர்களின் விருப்பத்தின்படி தெரிவு செய்வதற்கேற்ற மாதிரி படிமத்துடன் Letter wizards ஒன்று தோன்றும்.அதில் நாம் விரும்பியவாறு உள்ள கடிதமாதிரியை தெரிவு செய்து Next ,Next என்ற வாறு பொத்தான்களை அழுத்துவதன்மூலம் தேவையான மாறுதல்களை அதில் செய்தபின் இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Finish என்ற பொத்தானை அழுத்தி முடிவுக்குகொண்டுவருக.இப்போது நீங்கள் விரும்பிய வாறான கட்டமைப்பில் மாதிரி கடிதம் அமைந்திருக்கும்.
படம்-4-2
தற்போதெல்லாம் பெரும்பாலான வியாபார நடவடிக்கைகள் கம்பெனி சட்டத்தின்படி பதிவுபெற்ற நிறுவனங்கள்வாயிலாகவே நடைபெறுகின்றன. அதனால் இந்நிறுவனங்கள் அனைத்தும் கம்பெனிசட்டத்திட்ட விதிமுறை களின்படி மட்டுமே செயல்பட வேண்டியுள்ளது.இந்நிறுவனங்களின் செயற் பாடுகள் கொள்கைகள் போன்றவற்றை செயற்குழு ,நிர்வாக குழு ,பொதுப் பேரவை ஆகியவற்றின்வாயிலாகவே முடிவுசெய்து செயற்படுத்திடப் படுகின்றது. இவ்வாறான கூட்டங்களை நடத்துவதற்காக அழைப்பிதழை தயார் செய்திடும்போது இதில் என்னென்ன நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் எடுத்து கொள்ளப்படவிருக்கின்றன என்ற விவரம் குறிப்பிடபடவேண்டும். அதற்காக படம்-4.1 இல் உள்ளவாறு File =>Wizards=> என்றவாறு தெரிவு செய்தவுடன் வி்ரியும் சிறுபட்டியில் உள்ள Agenda என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
உடன் படம்-4-3 இல் உள்ளவாறு Agenda wizards இல் தெரிவு செய்வதற் கேற்ற மாதிரி Agenda படிமத்துடன் Agenda wizards ஒன்று தோன்றும்.அதில் நாம் விரும்பியவாறு உள்ளதை தெரிவுசெய்து Next ,Next என்றவாறு பொத்தான்களை அழுத்துவதன் மூலம் மாறுதல்களை செய்தபின் இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Finish என்ற பொத்தானை அழுத்தி இந்த செயலை முடிவுக்கு கொண்டுவருக.இப்போது நீங்கள் விரும்பியவாறான கட்டமைப்பில் மாதிரி Agenda அமைந்திருக்கும்.
படம்-4-4
மேலேகூறியவாறு ஒருநிறுவனத்தின் செயற்குழு ,நிர்வாக குழு ,பொதுப் பேரவை கூட்டம் முடிவடைந்தபின்னர் அக்கூட்ட நடவடிக்கைகளை அக் கூட்டத்தில் என்னென்ன முடிவு எடுக்கப்பட்டது எப்போது யாருடைய பொறுப்பில் அந்த குறிப்பிட்ட செயல் முடிக்கவேண்டும் என்பனபோன்ற விவரங்கள் படம்-4-4 இல் உள்ளவாறான கூட்ட நடவடிக்கை குறிப்பின் (Minutes )வாயிலாக ஆவண படுத்திடப் படுகின்றன.
அதற்காக படம்-4.1 இல் உள்ளவாறு File =>Wizards=> என்றவாறு தெரிவு செய்தவுடன் வி்ரியும் சிறுபட்டியில் உள்ள Agenda என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படம்-4-4 இல் உள்ளவாறு Agenda wizards இல் தெரிவு செய்வதற் கேற்ற மாதிரி Minutes படிமத்துடன் Agenda wizards ஒன்று தோன்றும்.அதில் நாம் விரும்பியவாறு உள்ளதை தெரிவுசெய்துNext ,Next என்றவாறு பொத்தான்களை அழுத்துவதன் மூலம் மாறுதல்களை செய்தபின் இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Finish என்ற பொத்தானை அழுத்தி இந்த செயலை முடிவுக்குகொண்டுவருக.இப்போது நீங்கள் விரும்பிய வாறான கட்டமைப்பில் மாதிரி Minutes அமைந்திருக்கும்.
பயிற்சி வகுப்புகள் பணிப்பட்டறைகள் போன்றவற்றில் படவில்லை காட்சியை நிகழ்த்துதல் வாயிலாக திரையில் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்களின் மனதை எளிதில் கவரமுடியும்.அவ்வாறான படவில்லை காட்சியை நிகழ்த்துதல் வாயிலாக தயார் செய்திடு வதற்கான அனுபவமில்லாத வர்கள் கூட படம்-4.1 இல் உள்ளவாறு File =>Wizards=> என்றவாறு தெரிவு செய்தவுடன் வி்ரியும் சிறுபட்டியில் உள்ள Presentation என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படம்-4-5 இல் உள்ளவாறு Presentation wizards இல் தெரிவு செய்வதற்கேற்ற மாதிரி Presentation படிமத்துடன் Presentation wizards ஒன்று தோன்றும்.அதில் நாம் விரும்பியவாறுஉள்ளதை தெரிவுசெய்து Next ,Next என்றவாறு பொத்தான்களை அழுத்துவதன் மூலம் மாறுதல்களை செய்தபின் இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் Finish என்ற பொத்தானை அழுத்தி இந்த செயலை முடிவுக்குகொண்டுவருக.இப்போது நீங்கள் விரும்பியவாறான கட்டமைப்பில் மாதிரி Presentation ஒன்று அமைந்திருக்கும்.நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்)
No comments:
Post a Comment