Thursday, October 14, 2010

ஓப்பன் ஆஃபிஸ் -2 ஓப்பன் ஆஃபிஸ முதன் முதலில் இயக்குதல்



   இந்த ஓப்பன் ஆஃபிஸ்3.2 ஆனது லினக்ஸ் இயக்க முறைமை(OS)கட்டுகளுடன் கிடைப்பதால் விண்டோ போன்ற மற்ற இயக்கமுறைமை(OS) தளத்தில் இயங்குமோ ,இயங்காதோ, என கவலைப்படவேண்டாம் .இது எந்த இயக்கமுறைமை(OS) தளத்திலும் பிரச்சினை எதுவுமின்றி நன்கு இயங்கக்கூடியது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
  முதலில் நாம் இதனுடைய சொற்செயலியை (Open Office org Writer )ஆரம்பிக்க விரும்புவதாக கொள்வோம் அதனால் Text Document என்பதை தெரிவு செய்து சொடுக்குக.உடன் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் தலைப்பில்லாதது-1 (Untitled-1 Open office org Writer )  என்று  புதிய சாளரம் ஒன்று திரையில்தோன்றும் .
 இதனை பார்த்ததும் புதியவர்கள் இது எம்எஸ்ஆஃபிஸ்எக்ஸ்பிஅல்லது எம்எஸ்; ஆஃபிஸ்2003  ஐ  நாம் பயன்படுத்துவதற்காக தவறுதலாக திறந்துவிட்டோமா, என்று ஆச்சரியபடுமளவிற்கு இதனுடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக எம்எஸ்ஆஃபிஸ்; போன்றே தோன்றும்.
 இந்த சாளரத்தினுடைய மேல்பகுதியில் நாம் பணிபுரியும்  கோப்பின்  தலைப்புபெயராக இருக்கின்ற தலைப்பு பட்டியாகும்(Title bar). அதற்கடுத்ததாக இருப்பது கட்டளை பட்டி (Menu bar)யாகும். அதற்கடுத்து மூன்றாவதாக இருப்பது கருவிப் பட்டியாகும்(Tool bar) .நான்காவதாக மையத்தில் இருப்பதுதான் நாம் பணிபுரியவிருக்கும் காலியான ஆவணமாகும்.
 இந்த ஒப்பன் ஆஃபிஸின் பயன்பாடுகள் அனைத்திலும் உள்ள கட்டளை பட்டி (men bar)களில் பொதுவாக File,Edit,View,Insert,Format,Tools,Window,Help என்பன போன்ற எட்டு கட்டளைகள் ஒரேமாதிரியாக   எம்எஸ் ஆஃபிஸ்  போன்றே இவைகளிலும்  உள்ளன. அதனால்   எம்எஸ் ஆஃபிஸில்  நன்கு  அனுபவம் உள்ளவர்கள் இதில் பணிபுரிவதற்காக தயங்கவோ தடுமாறவோ தேவையில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த கட்டளை பட்டிகளில் மேலேகூறிய கட்டளைகளுடன் Table என்பது ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலும் Data என்பது ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கிலும்; Slide show என்பது ஓப்பன் ஆஃபிஸ்இம்ப்ரஸிலும்  Modify என்பது ஓப்பன் ஆஃபிஸ்  ட்ராவிலும் கூடுதலாக உள்ளன.
  இதனுடைய கட்டளை பட்டி (Menu bar)யில் உள்ள File  என்ற முதல் கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் படம் 2-1 இல் உள்ளவாறு File என்ற கட்டளை தொகுப்புகளடங்கிய பட்டியலொன்று திரையில் விரியும்.




  நாம் இப்போதுதான்  முதன்முதலாக இதில் பணிபுரிப்போவதால் இந்த File என்ற பட்டியலில் உள்ள New என்பதை (File =>. New என்றவாறு  கட்டளைகளை) தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  அல்லது Ctrl+N என்றவாறு விசைகளை தட்டியவுடன் இதனுடைய New என்ற மற்றுமொரு சிறு பட்டியலொன்று திரையில் விரியும்(படம்-2-1).இப்போது  new என்ற இந்த பட்டியலில் இந்த ஓப்பன் ஆஃபிஸின்  மிகமுக்கிய பல்வேறு சிறப்ப அம்சங்கள் அடங்கியுள்ளதை காணலாம்.
 நாம் பொதுவாக எம்எஸ்ஆபிஸின் வேர்டு போன்ற ஒருபயன்பாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது எக்செல்லில் பணிபுரியவிரும்பினால் மீண்டும் Start=> All Programm => MsOffice என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்தியபின்னர் திரையில் தோன்றிடும் பட்டியலிலிருந்து தேவையான பயன்பாட்டினை திறக்க வேண்டியிருக்கும் அதுபோன்ற தொல்லையெல்லாம் இந்த ஓப்பன் ஆஃபிஸின் பயன்பாடுகளில் இல்லை.
  அதற்குபதிலாக இப்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிலையிலேயே File=>New என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்கியவுடன்  அல்லது Ctrl+N என்றவாறு விசைகளை தட்டியவுடன் விரியும் File என்ற பட்டியலில் விரியும்   சிறுபட்டியலில் இருக்கும்  பல்வேறு பயன்பாடுகளின் பட்டியலிலிருந்து நமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து திறந்து பணிபுரியலாம். தற்போது நாம் எந்தவொரு பயன்பாட்டில்  பணிபுரிந்து கொண்டிருந்தாலும் நாம் விரும்பும் வேறு எந்தவொரு பயன்பாட்டையும் நடப்பு  பயன்பாட்டினை மூடாமலேயே அல்லது சிறியதாக சுருக்காமலேயே திறந்து பணிபுரியலாம் என்பதுதான் இந்த ஓப்பன் ஆஃபிஸினுடைய சிறப்பு தன்மையாகும்
நன்றி:தமிழ் கம்யூட்டர் (மாதமிருமுறை இதழ்) 

No comments:

Post a Comment