முன்பெல்லாம் சூயெஸ் கால்வாய் இல்லாததால் ஆங்கிலேயர் கள் ஆப்பிரிக்காவை சுற்றிகொண்டுதான நம்முடைய இந்தியாவிற்கு கப்பல் மூலம் பயனம் செய்து வந்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அவ்வாறான பயனத்தின்போது நன்னம்பிக்கை முனை தாண்டிய பின்னர் நிம்மதியாக கப்பல் ஒன்று அரபிகடலில் பயனம் செய்தது ஒருநாள் திடீரென மிகப்பெரிய புயல்வந்து அந்த கப்பலை சின்னாபின்னம் செய்தது உடன் தலைமை மாலுமியின் கீழ் பணிபுரிந்து வந்த உதவி மாலுமிகள் மூவரும் சேர்ந்து கப்பலை கவிழாமல் பயனிக்குமாறு வீரதீரசாகசம் செய்து அரும்பாடுபட்டு சரிசெய்தனர்.அதனால் தலைமை மாலுமி மிக மகிழ்ச்சியுற்று கப்பல் பயனம் சாதாரண நிலைக்கு வந்தபின்னர் தன்னுடைய உதவி மாலுமிகள் மூவரையும் அழைத்து இம்மூவரையும் கவுரவிக்கம் பொருட்டு தம்முடைய பணப்பையில் தங்ககாசுகள் வைத்துள்ள தாகவும் கரைசேர்ந்தவுடன் தத்தமது சொந்த ஊருக்கு போவதற்கு முன்பு மூவருக்கும் அதனை சமபங்காக பிரித்து வழங்க விருப்பதாகவும் கூறி ஓரிடத்தில் அந்த பணப்பையை வைத்தார்.
இரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் ஒரு உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்கு மிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒருதங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்
இரண்டாம் நாளிரவும் இரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் இரண்டாவது உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்குமிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி மகுதியாக அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒருதங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்
மூன்றாம் நாளிரவும் அவ்வாறே இரவு அனைவரும் உணவருந்தி உறங்கசென்ற பின் நள்ளிரவில் மூவரில் மூன்றாவது உதவி மாலுமி யாருக்கும் தெரியாமல் அந்த பணப்பை இருக்குமிடத்திற்கு சென்று அந்த பணப்பையை அவிழ்த்து கொட்டி மிகுதியாக அதிலுள்ள தங்க காசுகளை மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒரு தங்ககாசுடன் தம்முடைய பங்கையும் எடுத்துகொண்டு மிகுதியை அப்படியே பணப்பைக்குள் வைத்துவிட்டு உறங்கசென்றுவிட்டார்
நான்காம் நாள் கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்ததும் நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தியவுடன் கப்பலின் தலைமை மாலுமி தாம் வாக்களித்தவாறு செய்வதற்கு தம்முடைய உதவிமாலுமிகளின் முன்னிலையில் தாம் வைத்திருந்து பணப்பையில் மிகுதியாயிருந்த தங்ககாசுகளை தரையில் அவிழ்த்து கொட்டி மூன்று சமபங்காக பிரித்தபோது ஒருதங்ககாசு மிகுந்தவிட்டது மிகுந்த ஒன்றைமட்டும் தான் வைத்துகொண்டு மூவருக்கும் அவரவர் பங்காக சமஅளவில் தங்ககாசுகளை பிரித்து வழங்கினார் அவ்வாறு எனில் அந்த பணப்பையில் முதன்முதலில் எவ்வளவு தங்ககாசுகளை பணப்பையில் வைத்திருந்தார் என்பதுதான புதிராகும் இந்த புதிரை ஓப்பன் ஆஃபிஸ் கால்க் மூலம் தீர்வுசெய்யமுடியும் எவ்வாறு என இப்போது காண்போம்முதல்நாள் இரவு தங்ககாசுகளை மூன்றுசமபாக பிரித்தபின்னர் ஒன்று மிகுந்துவிட்டது அதற்கான சமன்பாடு பின்வருமாறு
3X 1–Y = 2
அவ்வாறே இரண்டாம்நாளிற்கான சமன்பாடு பின்வருமாறு
X1 + 3X2-Y =2
மூன்றாம்நாளிற்கான சமன்பாடு பின்வருமாறு
X1 +X2+ 3X3 –Y =2
இறுதியாக தரையிறங்கிய பின் மூவருக்கும் தங்ககாசுகளை மூன்றுசமபாக பிரித்தற்கான சமன்பாடு பின்வருமாறு
Y-X1-X2-X3-3X3=1
படம்-1
இந்த சமன்பாடுகளை தீர்வுசெய்வதற்காக பின்வரும் அட்டவணை யிலுள்ளவாறான விவரங்களை படம்-1-ல் உள்ளவாறு தவறில்லாமல் உள்ளீடுசெய்க.
Data Table
B | C | D | E | F | G | H | I | |
2 | 0 | |||||||
4 | X1 | X2 | X3 | X4 | Y | |||
5 | 0 | 0 | 0 | 0 | 0 | |||
7 | 3 | 0 | 0 | 0 | -1 | 0 | = | 2 |
9 | 1 | 3 | 0 | 0 | -1 | 0 | = | 2 |
11 | 1 | 1 | 3 | 0 | -1 | 0 | = | 2 |
13 | -1 | -1 | -1 | -3 | 1 | 0 | = | 1 |
பின்னர் பின்வருமாறு வாய்ப்பாடுகளை அந்தந்த செல்களில் மிகச்சரியாக உள்ளீடு செய்க.
வாய்ப்பாடுகள் (Formulas)
$F$2 = $F$5
G7 = SumProduct($B$5:$F$5;B7:F7)
G9 = SumProduct($B$5:$F$5;B9:F9)
G11 = SumProduct($B$5:$F$5;B11:F11)
G13 = SumProduct($B$5:$F$5;B13:F13)
அதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் மேலே கட்டளை பட்டையில் Tools=> Solver=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக.
படம்-2
உடன் Solver என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்(படம்-2) அதில் Target Cell என்பதற்கு F2 என்ற செல்முகவரியை தெரிவுசெய்து உள்ளீடு செய்க
Optmize the result to என்பதற்கு Minimum என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க.
அவ்வாறே By Changing Cells என்பதற்கு $B$5 : $F$5 என்றவாறு செல்முகவரியை தெரிவுசெய்து உள்ளீடு செய்க
பின்னர் Limiting Conditionsஎன்பதன் கீழ் Cell Reference என்பதற்கு $I$7 என்றும் Operator என்பதற்கு = என்றும் Value என்பதற்கு$G$7 என்றும் பின்வரும் அட்டவணையிலுள்ள விவரங்களையும் அணைத்தையும் சரியாக உள்ளீடு செய்க
$I$7 = $G$7 | $G$7 => 0 | $B$5 => 0 |
$I$9 = $G$9 | $G$9 => 0 | $C$5 => 0 |
$I$11 = $G$11 | $G$11=> 0 | $D$5 => 0 |
$I$13 = $G$13 | $G$13 => 0 | $E$5 => 0 |
$F$5 => 0 |
மேற்கண்டவாறு நிபந்தனைகள் அனைத்தும் உள்ளீடு செய்து முடித்து விட்டால் Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-3
உடன் Options என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்(படம்-3) அதில் Solver Engines என்பதற்கு இதிலுள்ள கீழிறங்கு பட்டியலை திறப்பதன் வழியாக Open Office org Linear Solver என்பதை தெரிவுசெய்து கொள்க
Settings என்பதன் கீழ்உள்ள 1.Assume Variable as integer 2. Assume Variables as non-negative ஆகிய தேர்வுசெய்பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்தாகிவிட்டது என உறுதிபடுத்தி கொண்டபின் Solver என்ற உரையாடல் பெட்டியில் Solve என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-4
உடன் திரையில் செல் எண் F2 –ல் 79 என்ற விடை தோன்றும் அதனுடன் Solver Result என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும்(படம்-4) அதில் இந்த கணக்கின் தீர்வாக Result 79 என்று காண்பிக்கும். மேலும் 1. Keep Result 2. Restore Previous ஆகிய இரண்டு பொத்தானகளில் நமக்கு விடை அப்படியே இருக்க வேண்டுமெனில் முதல் வாய்ப்பையும் தேவையில்லையெனில் இரண்டாம் வாய்ப்பையும் தெரிவுசெய்துகொள்க
முடிவாக அந்த பணப்பையில் மொத்தம் 79 தங்க்காசுகள் முதன்முதலில் இருந்திருக்கும் என இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளமுடிகின்றது.
எப்படி இது சாத்தியமாகும்
முதல்நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 26 தங்ககாசுகள் வீதம் 3X26=78 மிகுதி ஒன்று இருந்தது அப்போது முதலாம்மாலுமி எடுத்துகொண்டது 26+ 1= 27 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X26= 52 தங்ககாசுகள் ஆகும்
இரண்டாம் நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 17 தங்ககாசுகள் வீதம் 3X17=51 மிகுதி ஒன்று இருந்தது அப்போது இரண்டாம் மாலுமி எடுத்துகொண்டது 17+ 1= 18 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X17= 34 தங்ககாசுகள் ஆகும்
மூன்றாம் நாளிரவு மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 11 தங்ககாசுகள் வீதம் 3X11=33 மிகுதி ஒன்று இருந்தது அப்போது மூன்றாம் மாலுமி எடுத்துகொண்டது 11+ 1= 12 ஆகும் மிகுதி பையில் வைத்துசென்றது 2 X11= 22 தங்ககாசுகள் ஆகும்
நான்காம் நாள் மூன்று சமபங்ககாக ஒவ்வொன்றும் 7 தங்ககாசுகள் வீதம் 3X7=21 மிகுதி ஒன்று இருந்தது
No comments:
Post a Comment