Sunday, October 31, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-21-ஆவணங்களை ஒப்பிடுதல் ஒருங்கிணைத்தல் சுருக்குவிசை தொடர்ச்சி

 இந்த சுருக்கு விசையை  ஒற்றை விசையை மட்டும் பயன் படுத்துதல் ஒன்றுக்குமேற்பட்ட விசைகளை சேர்த்து பயன்படுத்துதல் என்ற இருவகைகளில் செயற்படுத்திடமுடியும்.
   உதாரணமாக Home,Del PgUp PgDn ,End,என்பனபோன்ற சிறப்புவிசைகள் F1,F2, F5 என்பனபோன்ற செயலிவிசைகள் ஆகியவைகளை ஒற்றை விசையை மட்டும் பயன் படுத்தி நாம்விரும்பும் செயல்களை செயற்படுத்தி கொள்ளலாம்.
  ஆனால் Alt ,Ctrl, shift ஆகிய விசைகளுடன் மற்றவிசைகளை சேர்த்து அழுத்தினால் மட்டுமே நாம்விரும்பும்  செயல்களை செயற்படுத்திடமுடியும்.
  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை திறந்து பணிபுரிந்து கொண்டிருக்கும்போது
    சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்கினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் சொற்கள் முழுவதும் தெரிவுசெய்யப்படும்.
   சுட்டியின் வலதுபுறபொத்தானை மூன்றுமுறை சொடுக்கினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் சொற்றொடர்கள் முழுவதும் தெரிவுசெய்யப்படும்.
   Ctrl + Aஎன்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் ஆவணத்திலிருக்கும் அனைத்து உரையும் தெரிவுசெய்யப்படும்.
  Ctrl +Del என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும் இடத்திலிருந்து அந்த வரியின் பின்புறம்முழுவதும்நீக்கப்படும்.
 Ctrl +Z என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் முன் செயல் ஒருபடிமட்டும் நீக்கப்பட்டுவிடும்
 Ctrl + அல்லது என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போது இடம்சுட்டி இருக்கும் சொல்லிலிருந்து அடுத்த சொல்லிற்கு இடம்சுட்டி தாவிவிடும்
 shift + அல்லது என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் தற்போதுஇடம்சுட்டி இருக்கும்சொல்லும் அதற்கடுத்தும் தெரிவுசெய்யப்பட்டுவிடும்
  Alt+ F  என்றவாறு இருவிசைகளை சேர்த்து அழுத்தினால் file என்ற கட்டளைமெனு திரையில் விரியும்.
ஆவணங்களை ஒப்பிடுதல் ஒருங்கிணைத்தல்
  ஏதேனும் ஆய்வுகட்டுரைகளை  ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து நூற்று கணக்கான பக்கங்களுக்கு எழுதி வெளியிட விரும்புவார்கள்  இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின்மூலம் ஒரே ஆவணத்தில்  அவரவரும் தத்தமது கருத்துகளை சேர்க்கவும் மற்றவர்களின் கருத்துகளை மாறுதல் செய்யவும் நீக்கம்செய்யவும் முடியும்
    இவ்வாறான நிலையில் அந்த ஆவணமானது ஒரே பெயரில் ஆனால் பல்வேறு பதிப்புகளாக பராமரிக்கப்படும்.பின்னர் இந்த பதிப்புகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு ஒட்டுமொத்த முதன்மை ஆவணமாக உருவாக்கி  ஒப்பீடு செய்வார்கள் .இந்த ஒப்பீட்டின் பணியின்போது இவர்கள் செய்த மாறுதல் களை ஏற்றுக்கொள்வதோ அல்லது மறுப்பதோ செய்து இறுதியாக வெளியி டுவார்கள்.
    இவ்வாறான ஆய்வுக்கட்டுரை மட்டுமன்று பத்திரிகை நிறுவனத்தில்கூட இந்த நடைமுறை பெரிதும் பயன்படுத்தப் படுகின்றது. அனைத்து நிருபர்களும் சமர்ப்பிக்கின்ற அறிக்கைளை பத்திரிகைகளில் அப்படியே வெளியிட மாட்டார்கள்
      அவ்வாறான அறிக்கைகள் கிடைத்தவுடன் உதவி ஆசிரியர்கள் அதில் சேர்த்தல் நீக்கம் செய்தல் என்பனபோன்று பல்வேறுதிருத்தங்களை மேற்கொள்வார் புரூப் ரீடரும் அவ்வாறே எழுத்துபிழை இலக்கணபிழை போன்றவற்றை சரிபார்ப்பார் இறுதியாக தலைமை பதிப்பாசிரியர் இவை களைபார்த்து ஒருசில பத்திகளுக்கு எதிரில் Clarify என எழுதுவார் ஒருசில பத்திகளை குறுக்கு கோடிடுவார்  அதனடிப் படையில் இறுதிபதிப்பு தயார்செய்து அச்சிட்டு வெளியிடுவார்கள்  .
    அவ்வாறே    அலுவலகங்களில் ஒருஎழுத்தர் தயார்செய்யும் ஆவண மொன்றில் கண்கானிப்பாளர் ஒருசில திருத்தங்களை மேற்கொள்வார் பின்னர் மேலதிகாரி இவைகளை ஒப்பீடு செய்து இந்த ஆவணத்தில் ஒரு சிலவற்றை ஏற்றும் வேறுசிலவற்றை மறுத்தும் இறுதியாக தம்முடைய கருத்துகளையும் சேர்த்து ஒப்புதல் வழங்குவார் அதன்பின்னர் இந்த ஆவணம் அச்சிடப்பட்டு அலுவலக உத்திரவுகளாக வெளியிடப்படும்.
   1.முதலில் இதுபோன்ற செயல்களுக்கு ஆவணமொன்று உருவாக்கப்பட்டு பலநகல்களாக பல்வேறுதரப்பினர்களுக்கும் சுற்றுக்கு விடப்படும் (Circulation)
  1. பின்னர் இவ்வாறு சுற்றுக்கு விடப்பட்டஆவணத்தில் அவரவர்களும் Edit=> Changes=> Record=> என்றவாறு (படம்-21-1)கட்டளைகளை செயற்படுத்தி  பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வார்கள்.
  2. அதுமட்டுமல்லாது Edit=> Changes=> comments=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தித்தமது கருத்துகளையும் பதிவுசெய்வார்கள்
                                          படம்-21-1
  1. அதன்பின்னர் Edit=> Compare document => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இவை ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பீடுசெய்யப்படும். உடன் Accept or Reject (Changes) என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் .இவ்வாறு ஒப்பீடு செய்யும் ஆவணத்தில் (படம்-21-2)அடிக்கோடிட்டவரிகள் பதியதாக insert செய்தவையாகும் . வரியின் மீது கோடிட்டிருப்பது delete செய்யப் பட்டவையாகும்.
                                     படம்-21-2
    ஏற்றுக்கொள்பவை தனித்தனியாகஇருப்பவை எனில் அவைகளை தனித்தனியாக ஒவ்வொன்றையும் தெரிவுசெய்துAccept என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அனைத்தையும் ஏற்றுக்கொளவதாயின் அனைத்தையும் தெரிவுசெய்து  Accept all  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.   அவ்வாறே மறுப்பவை தனித் தனியாக இருப்பவை எனில் அவைகளை தனித்தனியாக ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து Reject என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. அனைத்தையும் மறுப்பதாயின் அனைத்தையும் தெரிவுசெய்து  Reject all  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

  1.  பின்னர் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டு மீளப்பெறப்பட்ட ஒரே ஆவணத்தின் பல்வேறு பதிப்புகள் உண்மை ஆவணத்துடன் ஒன்றாக இணைப்பார்கள் அதற்காக Edit=> Changes=> Merge documents=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
  2.  உடன் கோப்பு தெரிவுசெய்யப்படும் உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றும்.இந்த உரையாடல்பெட்டிவாயிலாக  மற்றஆவணங்களும் ஒரிஜினல் ஆவணமும் பிழையேது மில்லாமல் சரியாக இருந்தால்  ஒருங்கிணைக்கப்படும்.
  3. பிழைஇருந்தால் பிழைசுட்டும் உரையாடல்பெட்டியொன்று திரையில் தோன்றி ஆவணங்களை ஒருங்கிணைப்பு செய்யமுடியவில்லை (படம்-21-3) என்ற செய்தியை அறிவிக்கும்.  
                                                              படம்-21-3
நன்றி :தமிழ் :(கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்)


ஓப்பன் ஆஃபிஸ்-20-ஆவணங்களில் குறுக்குவழிவிசைகளை பயன்படுத்தல்


         ஓப்பன் ஆஃபிஸின்  ஆவணம் ஒன்றில் சுட்டியை பயன்படுத்தாமல்   விசைப்பலகையை மட்டும் பயன்படுத்தி அனைத்து செயல்களையும் செய்யமுடியும். உதாரணமாக  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டி ருக்கும்போது கட்டளைபட்டி(Menu bar) அல்லது கருவிபட்டியிலுள்ள(Tool bar) கட்டளையை அல்லது கருவியை செயல்படுத்திட விழைவோம்
        அந்நிலையில் சுட்டி(Mouse) எங்கிருக்கின்றது எனத்தேடாமல் இடம் சுட்டியானது (Cursor) கட்டளைபட்டிக்கு மட்டும்  செல்வதற்கு F10 என்ற விசையை அழுத்துக.
       பின்னர் கருவிபட்டிக்கு (Tools bar) இடம்சுட்டி செல்வதற்கு F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்துக.
        இவ்வாறு குறிப்பிட்ட பட்டிக்கு இடம்சுட்டி சென்றபின் தேவையான கட்டளையை அல்லது கருவியை  தெரிவுசெய்திடுவதற்கு இடது(Left arrow) அல்லது வலதுநோக்கும் அம்புக்குறியை(Right arrow) பயன் படுத்திகொள்க.
        இவ்வாறுதெரிவுசெய்தபின் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) பயன்படுத்துக. உடன் நாம் தெரிவு செய்தது கருவிபட்டியின் கருவியெனில் குறிப்பிட்ட கருவி செயலிற்கு வரும் நாம் தெரிவுசெய்தது கட்டளைபட்டியின்(Menu bar)  கட்டளையெனில் குறிப்பிட்ட கட்டளையின் துனைப்பட்டி (Sub menu)திரையில் விரியும்
      அதில் மீண்டும் மேலேகூறியவாறு அம்புக்குறியை  பயன்படுத்தி நாம்விரும்பும் கட்டளையை செயற்படுத்தி கொள்க.குறிப்பிட்ட கட்டளை அல்லது கருவியில் இடம்சுட்டி இருக்கும்போது  உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியும்  நாம்விரும்பும் கட்டளையைஅல்லது கருவியை செயற் படுத்தி கொள்ளலாம்.
      F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்தும்போது இடம்சுட்டியானது (Cursor) திரையில் ஒவ்வொரு  பட்டியாக  சென்று பிரதிபலிக்கும் கடைசியில் நாம் பணிபுரியும் ஆவணத்திற்கே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
      Shift + F6, Shift+Ctrl+Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம் சுட்டியானது ஆவணத்திலிருந்து பட்டிக்கு செல்லும்
     Ctrl+F6  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம்சுட்டியானது பட்டியிலிருந்து ஆவணத்திற்கு செல்லும்
       F10என்ற விசையை  அழுத்தும்போது தற்போது இடம்சுட்டியானது ஆவணத்திலிருந்தால் பட்டிக்கும் பட்டியிலிருந்தால் ஆவணத்திற்கும் மாறிச்செல்லும்.
      Esc  என்ற விசையை  அழுத்தும்போது   தற்போது இடம்சுட்டி இருக்கும்  இடமான பட்டி , துனைப்பட்டி,உரையாடல்பெட்டி ஆகியவற்றிலிருந்து முந்தைய இடத்திற்கு செல்லும்.
        Alt,F6 ,F10 ஆகியவிசைகளில் ஒன்றை அழுத்தினால் கட்டளைபட்டியின் முதல்கட்டளையான Fileஎன்ற கட்டளையை தெரிவுசெய்துவிடும் அந்நிலையில் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அல்லது உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியவுடன் இந்தFile என்பதன் பட்டியலை திரையில் விரித்து திறந்துவிடும்.
    அதில்   கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அழுத்தி தேவையான கட்டளையை தெரிவுசெய்து  உள்ளீட்டு விசையை (Enter key) அழுத்தியவுடன் நம்மால் தெரிவுசெய்யப்பட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
     ஏதேனும் பட்டியில் இடம்சுட்டிஇருக்கும்போது Home என்ற விசையை அழுத்தினால் முதல் கட்டளைக்கும் End என்றவிசையை அழுத்தினால் கடைசி கட்டளைக்கும் இடம்சுட்டிசெல்லும்.இந்நிலையில் உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
              
                                                                             படம்-20-1
   வரைவுப்பட்டியில்  உள்ள ஏதேனும் பணிக்குறியின்மீது(Icon)இடம்சுட்டி இருந்திடும்போது உதாரணமாக செவ்வகம் அல்லது நீள்வட்ட பணிக் குறியின்மீது இடம்சுட்டி இருப்பதாக கொள்வோம் இந்நிலையில்  Ctrl+ Enter என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  முன்கூட்டியே இயல்பு நிலையில் அமைக்கப்பட்டுள்ளவாறு செவ்வக அல்லது நீள்வட்ட  படம் ஆவணத்தில் வரையப்பட்டுவிடும்.(படம்-20-1) இந்த கருவிப்பட்டி மிகநீண்டதாக இருந்து ஏதேனும் சில பணிக்குறிகள் திரையில் பிரதிபலிக்கவில்லை யெனில் PageUpஅல்லதுPage Down விசையிலொன்றை  அழுத்தினால் மிகுதிபணிக் குறிகள் திரையில் பிரதிபலிக்கும்.



   படம்-20-2
 சாளரத்தை மாற்றியமைப்பதற்கான அமைவுபட்டி(System menu)
   Alt+Space bar என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.உடன் அமைவுபட்டி(System menu) மேலே இடதுபுறமூலையில் தோன்றும்(படம்-20-2) இதில் இடம்சுட்டி பிரதிபலித்து கொண்டு  இருக்கும்போது மேலேகூறியவாறு விசைகளை அழுத்தி தேவையான வற்றை செயற்படுத்திகொள்க.
             கருவிபட்டியை சாளரத்துடன் கட்டுதல்
   F6 என்ற விசையை தேவையைனவாறு அழுத்தி  கருவிபட்டியை தெரிவு செய்து கொள்க பின்னர்  Ctrl+ Shift+ F10        என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் கருவிபட்டியானது தனியாக மிதந்து கொண்டிருந்தால் சாளரத்துடன் கட்டப்பட்டுவிடும். அல்லது  சாளரத்துடன் கட்டப்பட்டிருந்தால் தனியாக (படம்-20-3) மிதக்க ஆரம்பித்துவிடும்



                                                        படம்-20-3
  பொதுவாக கட்டளைகளை செயற்படுத்திட கட்டளைபட்டியிலுள்ள குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்தவுடன் விரியும் பட்டியலிலிருந்து  குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கிடுவோம் அதற்கு பதிலாக குறுக்கு வழிவிசைகளை செயற்படுத்தி நாம்விரும்பும் செயலை செயற்படுத்தி கொள்ள முடியும்.உதாரணமாக நாம் ஓப்பன் ஆஃபிஸ் ஆவணமொன்றில் பணிபிரிந்து கொண்டிருக்கும்போது வேறொரு கோப்பினை திறப்பதற்காக File=>Open=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதற்கு பதிலாக Ctrl , O ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக.உடன் Open என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்
   அதுபோன்றே கட்டளைபட்டியலில் ஒருசில கட்டளைகளின் முதலெழுத்து கீழ்கோடிடப் பட்டிருக்கும்.அவ்வாறான கட்டளையை செயற்படுத்திடுவதற்கு Alt என்ற விசையை அழுத்திபிடித்துகொண்டு கீழ்கோடிடப் பட்டிருக்கும் கட்டளைகளின்  முதலெழுத்தின் விசையை சேர்த்து அழுத்துக.
    உடன் குறிப்பிட்டகட்டளைக்கான உரையாடல்பெட்டியிருந்தால் திரையில் தோன்றும் அதில் இயல்புநிலையில்  பொத்தான்9Button) பட்டிபெட்டி(Listbox) தேர்வுசெய்பெட்டி(Check box) ஆகியஏதேனும் ஒன்றின்மீது இடம்சுட்டியிருக்கும் பின்னர் Tab என்ற விசையை தட்டினால் அடுத்தவாய்ப்பிற்கு இடம்சுட்டி முன்னோக்கி தாவிச்செல்லும்.
    Shift + Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் முந்தைய வாய்ப்பிற்கு இடம்சுட்டி பின்னோக்கி தாவிச்செல்லும். இவ்வுரையாடல் பெட்டியில் குறிப்பிட்ட வாய்ப்பின்மீது இடம்சுட்டியிருக்கும்போது . உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட வாய்ப்பின் கட்டளை செயற்படுத்தப்படும்.

ஓப்பன் ஆஃபிஸ்-19-கைபேசியிலும் ஓப்பன் ஆஃபிஸ் ஆவணத்தை பயன்படுத்தலாம்

   மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer)மூலமாக கூட ஓப்பன் ஆஃபிஸின்  ஆவணங்களை திறக்கமுடியும்.அதற்காக நம்முடைய கணினியில் ஓப்பன் ஆஃபிஸினை நிறுவுகையின்போதே ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பதையும்  சேர்த்து நிறுவிடவேண்டும் இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை எவ்வாறு நம்முடைய கணினியில் நிறுவுவது என இப்போது காண்போம்.
1.முதலில் ஓப்பன்ஆஃபிஸ் பயன்பாடு ஏதேனும் நம்முடைய கணினியில் இயங்கிகொண்டிருந்தால் அதன்இயக்கத்தை நிறுத்துக.
படம்-19-1
2.அதன்பின்னர் .நாம் வழக்கமாக  பயன்பாடுகளை  இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar) உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.( படம்-19-1)
3.பின்னர் விரியும் Control panel திரையின் கட்டளைபட்டியலில்  Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும்  தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள  change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில்  Optional Components என்பதை திறந்து கொள்க. அதில் ActiveX Controlஎன்பது உள்ளதாவென உறுதிசெய்துகொள்க. ( படம்-19-2)
                         படம்-19-2
7.பின்னர் இதிலுள்ள துனை பட்டியலை திறந்து கொண்டு Nextஎன்ற பொத்தானையும் பின்னர்  Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக  Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
  இவ்வாறு உங்களுடைய கணினியில்  இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோலை நிறுவியபின்னர்  மைக்ரோசாப்ட் இணைய உலாவியின் (Ms Internet Explorer) வாயிலாக உங்களுடைய கணினியிலுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை தேடிபிடித்து திறக்கவும் தேவையானால்  இதேநிலையில் சேமித்து கொள்ளவும் முடியும்.
  இவ்வாறு மைக்ரோசாப்ட் இணைய உலாவிக்குள் (Ms Internet Explorer) திறக்கபட்டுள்ள ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் ஆவணத்தை சூழ்நிலை பட்டியை(Context menu) சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன் வாயிலாக  செயலிற்கு கொண்டுவந்து அதிலிருக்கும்  Edit  என்பதை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் தேவையான மாறுதல்களை செய்துகொள்ளலாம்( படம்-19-3).
படம்-19-3
 தற்போது பெரும்பாலானவர்கள் இணையத்தில் உலாவிடுவதற்காக கணினிக்கு பதிலாக கைபேசியையே PocketPc  ஆக பயன்படுத்தி வருகின்றனர். இந்த கைபேசி யான PocketPc யிலும் ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை நம்மால் திறந்து பயன் படுத்திட முடியும் இதற்காக பின்வரும் செயல்களை பின்பற்றுக.
  முதலில் கைபேசியின் கோப்பு வடிவமைப்பிற்கு (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களை  உருமாற்றம் செய்திடவேன்டும்.
   தற்போது நடப்பில் கணினிக்கும் கைபேசிக்கும் இடையே  AportsDoc என்பது PalmOSஎன்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும்  Pocket Excel ,PocketWord ஆகியவை PocketPc என்ற ஒத்திசைவு சாதணங்களுக்கும்   வடிகட்டியாக (Filter) செயல்படுத்தப்படுகின்றன .   இந்தPocket Pcயுடன் நம்முடைய கோப்புகள் ஒத்திசைவு செய்வதற்காக முதலில் Mobile device Filters ஐ உங்களுடைய கணினிக்குள் நிறுவிடுக இதனுடன்  இதற்கான DLL கோப்பையும் சேர்த்து நிறுவிடுக. மிகமுக்கியமாக Java  Runtime Environment என்பது உங்களுடைய கணினிக்குள் நிறுவப்பட்டு உள்ளதாவென உறுதிசெய்துகொள்க
  Mobile device filters ஐ உங்களுடைய கணினியில் நிறுவிடுவதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
1. நீங்கள்விண்டோஸ்ஓஎஸ் பயன்படுத்துபவராயிருந்தால் உங்களுடைய கணினியிலுள்ள ActiveSync உடன்  PocketPc Device என்பவைகளில் ஏதேனும் இணைக்கப்படிருந்தால்  முதலில் அதனுடைய தொடர்பை  துண்டித்துவிடுக. பின்னர் அவ்வாறே ஓப்பன்ஆஃபிஸ்பயன்பாடு ஏதேனும் இயங்கி கொண்டிருந்தாலும் அதன் இயக்கத்தையும் நிறுத்துக.
2அதன்பின்னர் .நாம் வழக்கமாக பயன்பாடுகளை  இயக்குவதற்கு செயல்படும் வழிமுறைகளின்படி சாளரத்தின்(window) கீழ்பகுதியிலிருக்கும் செயல்பட்டையில் (Taskbar)  உள்ள Startஎன்ற பொத்தானைசொடுக்குக.உடன் விரியும் Startஎன்ற பகுதியிலுள்ள Control panel என்பதை தெரிவுசெய்து சொடுக்குக(படம்-19-1).
3.பின்னர் விரியும் Control panel இன் கட்டளைபட்டியலில்  Programs and Features என்பதை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதன்பின்னர் Control panel ல்தோன்றிடும்  தற்போது நிறுவியிருக்கும் நிரல் தொடர்களின் பட்டியலிலிருந்து Openoffice.orgஎன்பதை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேல்பகுதியிலுள்ள  change என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
5.பின்னர் தோன்றிடும் நிறுவுகை வித்தகரின் (Installation wizard) திரையில் Modify என்பதை தெரிவுசெய்து Next  என்ற பொத்தானை சொடுக்குக.
6.அதன்பின்னர் தோன்றிடும்திரையில்  Optional Components என்பதை திறந்துகொள்க. அதில் Mobile Device Filters என்பதை தெரிவுசெய்து (படம்-19-4)  Nextஎன்ற பொத்தானையும் பின்னர்  Next என்ற பொத்தானையும் பின்னர் Install என்ற பொத்தானையும் இறுதியாக  Finish என்ற பொத்தானையும் சொடுக்கி நிறுவிடும் பணியை முடிவிற்க கொண்டுவருக.
                              படம்-19-4
   இதன்பின்னர் ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Open  என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Open என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு(படம்-19-5) Open என்ற பொத்தான சொடுக்குக
                                   படம்-19-5
   ஓப்பன் ஆஃபிஸ் திரையில் File=> Save as  என்றவாறு கட்டளைகளை செற்படுத்தியவுடன் தோன்றிடும் Save as என்ற உரையாடல் பெட்டியில் உள்ள File Type என்பதற்கு AportisDoc(Palm)(*.pdb),அல்லது Pocket Word(*.psw) என்றவாறு பொருத்தமான வடிகட்டியை(Appropriate Filters ) தெரிவுசெய்துகொண்டு Save  என்ற பொத்தானை சொடுக்குக.
  இதுபோன்றே கைபேசியின் கோப்பு வடிவமைப்பினை  (PocketPc Format ) ஓப்பன் ஆஃபிஸ் கோப்பு வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்து பயன்படுத்திகொள்ளலாம். இதற்காக
1. Active Sync என்ற சாளரத்தை முதலில் திறந்துகொள்க. அதில் options  என்ற கட்டளையை தெரிவுசெய்துoptions என்ற உரையாடல் பெட்டியை திரையில் தோன்றசெய்க.
2.பின்னர் இதிலுள்ள Rulesஎன்ற தாவியை தெரிவுசெய்துசொடுக்குக .அதன் பின்னர் விரியும் Rulesஎன்ற தாவியின் திரையில்   Conversion  settingsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
3.பின்னர்  Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில்   Pocket Word Document  -Pocket Pc  என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Open Office Writerஎன்பதை தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  இவ்வாறே எக்செல் பணிப்புத்தகத்தையும் உருமாற்றம் செய்திட மேலேகூறப்பட்ட படிமுறை 1,2 ஐ அப்படியே பின்பற்றுக படிமுறை 3,4 ஐ பின்வருமாறு பின்பற்றுக.
3.பின்னர்  இதிலுள்ள Device to Desktop என்ற தாவியை தெரிவு செய்து சொடுக்குக. அதன்பின்னர் விரியும் Device to Desktop என்ற தாவியின் திரையில்   Pocket Excel Workbook -  Pocket Pc என்பதை தெரிவுசெய்து Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
4.பின்னர் இதேதிரையின் Conversionஎன்ற கீழிறங்கு வாய்ப்பு பட்டியலிலிருந்து Openoffice.org Calc என்பதை தெரிவுசெய்துகொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  இதன்பின்னர் கைபேசியின் வடிவமைப்பு கோப்பு களை  (PocketPc format file) ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளாகவோ அல்லது ஓப்பன் ஆஃபிஸ்வடிவமைப்பு கோப்புகளை கைபேசியின் வடிவமைப்பு கோப்புகளாகவோ (Pocket Pc format file) நகலெடுத்தல் திறத்தல் படித்தல் மாற்றம் செய்தல் ஆகிய பணிகளை    Active Sync  அல்லது Window Internet Explorer ஆகிய இரண்டிலொன்றை பயன்படுத்தி செயல்படுத்தி கொள்ளலாம்.
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)

ஓப்பன் ஆஃபிஸ்-18 மீஇணைப்பு (Hyperlink)செய்தல்


 இந்த ஓப்பன் ஆஃபிஸ் மூலம் எந்தவகையான கோப்பாக இருந்தாலும் திறக்கமுடியும் என்பது நாமனைவரும் அறிந்ததே..  இவ்வாறு நாம் திறக்கவிழையும் கோப்புகள் எந்தவிடத்தில் இருக்கின்றதோ அதனை தேடிப்பிடித்து திறப்பதற்கு File => Open => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..
    பின்னர் தோன்றும் Open என்ற உரையாடல் பெட்டியில் File Types என்பதற் கருகிலுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து All Files (*.*)என்பதை தெரிவு செய்தால் அனைத்துவகையான கோப்புகளும் பட்டியலாக திரையில் இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கும் அவற்றுள் நாம்விரும்பியதை தெரிவுசெய்து திறந்து கொள்ளலாம். அல்லது நாம் எந்தவகையான கோப்புகளை இந்த Open என்ற உரையாடல் பெட்டிக்குள் பிரிதிபலிக்கச்செய்ய விரும்பு கின்றோமோ அதனைமட்டும் தெரிவுசெய்தால் நாம் தெரிவுசெய்தவகை கோப்புகள் மட்டும் பட்டியலாக திரையில் பிரிதிபலிக்கும்..
  பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டருடைய ஆவணத்தை சேமித்தபின் மீண்டும் திறக்கும்போது இடம்சுட்டியானது இயல்புநிலையில் அந்த ஆவணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பிரிதிபலிக்கும்.. பெரியஆவணங்களில் திருத்தம் செய்யும் பணியை செய்துமுடித்தபின்னர் வேறொரு நாளில் நாம் கடைசியாக எந்தவிடத்தில் திருத்தம் செய்துமுடித்தோம் என்று நினைவுகூர்ந்து எந்தவிடத்திலிருந்து தொடர்ந்து திருத்தம் செய்யவேண்டும் என தேடிப்பிடிப்பதில் அதிகசிரமம் ஏற்படும்.
   .இதனை தவிர்க்க Tools => Options => என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
   அதன்பின்னர் Open Office.Org  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து User Data என்பதை தெரிவு செய்து சொடுக்குக. பின்னர் Options-Open Office.Org-User Data என்ற உரையாடல் பெட்டிபடம்-18-1 இல் உள்ளவாறு தோன்றும்
   இதன் வலப்புறமுள்ள பலகத்தில்Address என்பதன்கீழ் கோரும் விவரங்களை உள்ளீடு செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. அல்லது Shift + F5 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக.
  இவ்வாறு அமைத்தபின்னர் நம்மால் சேமிக்கப்படும் ஆவணங்களை மீண்டும் அதில்பணிபுரிவதற்காக திறக்கும்போது கடைசியாக நாம் பணிபுரிந்த இடத்திலேயே இடம்சுட்டி பிரிதிபலித்துகொண்டிருப்பதை காணலாம்.
                                                            படம்-18-1
  ஒருஆவணத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போதே  நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் கோப்பு இருக்கும் கோப்பகத்தை அடைவை(Directory) மாற்றிக் கொள்ளலாமே என எண்ணிடுவோம்
   அந்நிலையில்  Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.. பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதை தெரிவு செய்து சொடுக்குக. அதன் பின்னர் Open Office.Org  என்பதன் கீழ்விரியும் பட்டியலிலிருந்து Path என்பதை தெரிவு செய்து சொடுக்குக.
  பின்னர் Options-Open Office.Org-Path என்ற உரையாடல் பெட்டிபடம்-18-2 இல் உள்ளவாறு தோன்றும் இதன் வலப்புறமுள்ள பலகத்தில் Paths Used by Open Office.Org என்பதன்கீழ் விரியும் பட்டியலிலிருந்து My Documents என்பதை தெரிவுசெய்து Editஎன்றபொத்தானை சொடுக்குக.
 அதன்பின்னர்விரியும் Select path என்ற உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான அடைவை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
                                                                      படம்-18-2
  ஒருசிலநேரங்களில்  ஒருகோப்பில் இருக்கும் மிகமுக்கியவிவரங்களை மற்றொரு கோப்புடன் மீஇணைப்பு (Hyperlink)வாயிலாக இணைத்திடுவோம் .அவ்வாற மீஇணைப்பு செய்யும்போது இவ்விணைப்பானது தொடர்பு மீஇணப்பா(Relative Hyperlink) அல்லது முழுமையான மீஇணைப்பா (Absolute Hyperlink)என்ற இரண்டு அடிப்படை காரணிகளை கருத்தில்கொள்ளவேண்டும்..
   உதாரணமாக grapic/picture.gif என்ற கோப்பினை மேற்கோள் காட்டிடுவதாக கொள்வோம்  தொடர்புமீஇணைப்பு மேற்கோள் எனில் தொடர்புபடுத்திடும் இரண்டு கோப்புகளும் ஒரேஅடைவிற்கள்(Directory) இருந்திடவேண்டும்.
    அவ்வாறில்லாமல் மேற்கோள் காட்டிடும் கோப்பும் மேற்கோள் பெற்றிடும் கோப்பும் அதேகணினியில் வெவ்வேறு அடைவிற்கள்இருந்தால்  File://data1/xyz/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக அமைத்திடவேண்டும். .
  அதற்குபதிலாக இரண்டு கோப்புகளும் வெவ்வேறு சேவையாளர் கணினியில் இருந்தால் http://data2/picture.gif என்றவாறு முழுமையான மீஇணைப்பு மேற்கோளாக  அமைத்திடவேண்டும் .
   இவ்வாறு அமப்பதற்கு முன்பு Tools => Options என்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் தோன்றும் Optionsஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுறமுள்ள பலகத்தில் முதலில் Open Office.Org என்பதன் கீழுள்ள Load/save என்பதைதெரிவு செய்து சொடுக்குக.
 அதன்பின்னர் Load/save  என்பதன்கீழ்விரியும் பட்டியலிலிருந்து General என்பதை தெரிவு செய்து சொடுக்குக. .பின்னர் Options-Load/save-General என்ற உரையாடல் பெட்டிபடம்-18-3 இல் உள்ளவாறு தோன்றும்
  இதன் வலப்புறமுள்ள பலகத்தில் saveஎன்பதன்கீழ் Save URLs relative to file system மற்றும்  Save URLs relative to internet ஆகியவற்றினை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
   படம்-18-3
   பெரிய அதிகாரிகளை பார்க்க செல்லும்போது நம்முடையபெயர் முகவரி போன்றவிவரங்களை ஒரு துண்டுதாளில் எழுதிகொடுப்போம் அதற்குபதிலாக ஒருசிலர் சிறுபார்வையாளர் அட்டையை நூற்றுகணக்கில் அச்சிட்டு வைத்திருப்பார்கள் அவ்வாறே நம்முடையவாடிக்கையாளர்களுடன் கடிததொடர்புகொள்ளும்போது அவர்களுடைய முகவரிகளை  அச்சிட்டு அனுப்பிடுவோம். இவ்வாறான பார்வையாளர் அட்டை வாடிக்கையாளர் முகவரிகளை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் வாயிலாக நாமே மிகஎளிதில் வடிவமைத்துகொள்ளலாம்.
  அதற்காக File => New=>  Lableஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக.பின்னர் படம்-18-4 இல் உள்ளவாறு தோன்றும் Lablesஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம்விரும்பியவாறு வாடிக்கையாளர்களின் முகவரிகளை வடிவமைத்துகொள்ளலாம்.

                                                                     படம்-18-4
  இவ்வாறே File => New=>  Business Cardsஎன்றவாறு மேலே உள்ள கட்டளை பட்டியிலி ருந்து கட்டளைகளை செயற்படுத்துக..பின்னர் படம்-18-5 இல் உள்ளவாறு தோன்றும் Business Cardsஎன்ற உரையாடல் பெட்டியின் வாய்யப்புகளிலிருந்து நாம் விரும்பியவாறு பார்வையாளர் அட்டையை வடிவமைத்துகொள்ளலாம்.
                                                                   படம்-18-5
நன்றி :தமிழ் கம்யூட்டர்( மாதமிருமுறை இதழ்)